Friday, 30 November 2018

கண்ணும் காட்சி தௌவின Natrinai says 397

தோள் அழிகிறது
நாட்கள் வீணே சென்றுகொண்டிருக்கின்றன
அவரை எதிர்நோக்கும் கண்கள் ஒளி மங்குகின்றன
என் அறிவு மயங்கிப் பிறிதொன்றாக மாறிக்கொண்டிருக்கிறது
காம நோய் பெருகுகிறது
மாலைக் காலமும் வருகிறது
என்ன ஆவேனோ தெரியவில்லை

சாவதற்கு நான் அஞ்சவில்லை
செத்த பின்னர் மறுபிறப்பு வந்தால் அந்தப் பிறவியில் என் இந்தக் காதலனை மறந்துவிடுவேனா என அஞ்சுகிறேன்
தலைவி தோழியிடம் கூறுகிறாள் 

பாலை
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை 
வற்புறாநின்ற தோழிக்கு 
''ஆற்றுவல்'' என்பது படச் சொல்லியது.
அம்மூவனார் பாடல்
இளவெயில் உண்ணும் Natrinai says 396

மழை பொழிந்த மேகங்கள் மலையில் படிகின்றன
தேன் தொங்கும் வரையின் மற்றொரு பக்கம் அருவி கொட்டுகிறது
வேங்கை மலரின் தாது உதிர்ந்த மயில்கள் இளவெயிலிலைத் துய்க்கின்றன
இப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவனே

உன் மார்பு என்னை அணங்கியது
இந்த இன்பத் துன்ப நோயை யாரிடம் சொல்வேன் 
மணந்துகொண்டு இன்பம் தந்து அருளாமல் மயக்கத்தில் இருக்கிறாயே

குறிஞ்சி
தோழி தலைமகனை வரைவு கடாயது;
வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல்லியதூஉம் ஆம்;
இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

மார்பு அணங்கிய செல்லல்
மார்பு பெற்ற இன்ப வருத்தம்யாரை எலுவ Natrinai says 395

எலுவ Hi
யார் ஐயா நீர்
எமக்கு நீ எந்த உறவும் இல்லை
நொதுமலாளர்
அவ்வளவுதான்

கொண்க
நீ என்னை விரும்பினால் என்னை மணந்து உனக்காக ஏங்கி வாடும் என் மேனி நலத்தை எனக்குத் திரும்பத் தந்துவிட்டுச் செல்

 • பல்வகைப் பூக்கள் மருவிக் கிடக்கும் குட்டுவன் மாந்தை நகரம் போன்றது என் மேனிநலம்
 • மகளிர் புணரியில் (கடலில்) பாயும் ஓசை  குட்டுவன் முரசு முழக்கம் போலக் கேட்கும் ஊர் மாந்தை 
 • மாலை வேளையில் ஆனிரைகள் மணியோசையுடன் இல்லம் திரும்பும் ஊர் மாந்தை 

மாந்தை அரசனை  மாந்தரஞ்சேரல் என்றனர் - வரலாறு 

நெய்தல் 
''நலம் தொலைந்தது'' எனத் தலைவனைத் தோழி கூறி, வரைவு கடாயது.
அம்மூவனார் பாடல்

ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர் - பாடல்
கடலில் பாயும் மகளிர்
படம் - மகளிர் நீச்சல் போட்டியில் பாய்தல்

பொன் செய் கொல்லன் Natrinai says 394

மரம் அடர்ந்த காட்டில் ஞெமை மரத்தில் இருந்த குடிஞை பொற்கொல்லன் பொன்னைத் தட்டுவது போல் ஒலிக்கிறது

பாக
நீ வாழ்க

மணியொலிக்கும் தேரின் சக்கரம் முரம்பு நிலத்தில் அதிரும்படித் தேரை ஓட்டிச் செல்க

சந்தனம் பூசிய மார்பு ‘தண்’ என்று இருப்பது போல் பனிமேகம் சூழ்ந்து நிலமும் குளுமையாக இருக்கிறது
அவள் நினைவில் நான் நோகிறேன்

தேரை விரைந்து ஓட்டிச் செல்க
தலைவன் சொல்கிறான் 

முல்லை
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை 
இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;
வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி 
தந்து அளித்ததூஉம் ஆம்.
ஒளவையார் பாடல்

நற்றிணை 394
குடிஞை - ஆந்தை - கோட்டான்

பொன் செய் கொல்லன் 

நிலை கிளர் மீன் Natrinai says 393

மூங்கில் காட்டில் குட்டி போட்டிருக்கும் பெண்யானையின் பசியைப் போக்க
வேல மரக் கிளைகளை ஆண்யானை வளைக்கும்போது
கண்ட கானவர் எறிந்த தீப்பந்தம்
எரிமீன் பாய்வது போல் பாய்ந்து செல்லும் நாடன் அவன்

அவர் இரவில் வரும் துன்பத்தை எண்ணி நாம் வருந்தினோம்

அவர் திருமணம் செய்துகொள்ள வந்திருக்கிறார்
நம்மவர் அவருக்கு ஒப்புதல் தந்தால்
நம் காதலர் புதியவர் போல் வருவதையும்
அதனைப் பார்த்து உன்னிடம் தோன்றும் திருமண நாணத்தையும்
நான் கண்டு மகிழ்வேன்

தோழி தலைவியிடம் கூறுகிறாள் 

குறிஞ்சி
வரைவு மலிந்தது.
கோவூர் கிழார் பாடல்

எரிமீன் * நிலை கிளர் மீன்நனி பேர் அன்பினர் Natrinai says 392

சுறா மீன் தாக்கியதால் தந்தை கடலுக்குச் செல்லாமல் வீட்டில் படுத்திருந்தான்
அதனால் அவன் சிறுவர்கள் தாயின் முலைப்பால்  போல இனிக்கும் நுங்கில் கண்ணைத் தோண்டி உண்பர்
இப்படி இருக்கும் பனைமரத்தை வேலியாக உடைய நம் இல்லத்தின் நிலைமை அவனுக்கு (தலைவனுக்கு) தெரிந்தால் நல்லது

அவர் கானலில்தான் நம்மோடு இருந்திருக்கிறார்
அவர் பேரன்பினர்
நம் இல்லம் தெரிந்தால் நம் நினைவுத் துன்பத்தைப் போக்கும் பாங்கைத் தேடிக்கொள்வார் 

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள் 

நெய்தல்
இரவுக்குறி முகம்புக்கது;
வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் 
தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

நுங்கு - கண்ணைத் தோண்டி உண்ணல்

ஆழல் மடந்தை Natrinai says 391

மடந்தையே
அழாதே
செல்வதை அவர்  கைவிட்டுவிடுவார்

ஆசை மூட்டும் மழை போன்ற உன் கண்கள் பனி பொழியுமாறு விட்டுவிட்டு யாரேனும் பிரிவாரோ

தோழி தலைவியை இவ்வாறு சொல்லித் தேற்றுகிறாள் 

மலர்ந்த தலை கொண்ட காரான் (எருமை) 
புலியின் புள்ளிகள் போல் தோன்றும் பொதும்பர்ச் சோலையில்
பனியில் படர்ந்திருக்கும் கொடிகளை மேயும்

அது மேயாமல் ஒதுக்கிய தழைகளை மகளிர் தழையாடை புனையப் பயன்படுத்திக்கொள்வர்

இப்படிப்பட்டது நன்னன் ஆளும் கொண்கானம் நாடு
இந்த நாட்டில் ஏழில் குன்றம் என்னும் நகர்
(வேளிர் குடிமக்கள் தம் சேமிப்புச் செல்வங்களை வைத்திருக்கும் ஊர்) 
இப்படிப்பட்ட ஏழில் குன்றத்தையே பெறலாம் என்றாலும்
உன்னை அழ விட்டுவிட்டு ஆர்தான் பிரிந்து செல்வர்

பாலை
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது;
வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

மா இரு மருப்பின் மலர்த் தலைக் காரான்
எருமையாணர் ஊரன் Natrinai says 390

வாளை மீன் வாள் போலப் பிறழ்கிறது
பொயகையில் நீர்நாய் அதனைப் பிடிக்காமல் உறங்குகிறது

கொடை வழங்கும் கிள்ளி அரசன் ஆளும் வெண்ணி (கோயில்வெண்ணி) என்னும் ஊரிலுள்ள வயல்களில் பூத்திருக்கும் ஆம்பல் மலர்களால் தொடுக்கப்பட்ட தழையாடையை அல்குலில் அணிந்துகொண்டு நாம் விழா நடக்கும் ஊரில் செல்வோமாயின்
புதுப் புது யாணர் வருவாய் உள்ள ஊரன் நம்மைக் காண்பான் ஆயின்
நம்மை அணைக்காமல் விடமாட்டான்

அரசன் வாய்மொழி முடியன் ஏறிவரும் யானை போன்ற என் தோள் பலவாக அமுங்கட்டும்

பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்

மருதம்
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது;
தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், 
வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.
ஒளவையார் பாடல்

நீர்நாய் 

முதைச் சுவல் Natrinai says 389

வேங்கை மரம் புலி போல் பூத்திருக்கிறது
தழைத்திருக்கும் மலை மணி நிறத்தில் காணப்படுகிறது
அன்னை விருப்பத்தோடு என்னைப் பார்க்கிறாள்
என் தந்தையும் அண்ணனும் யானையை வீழ்த்திய வில்லம்போடு இளையருடன் விலங்கு வேட்டைக்குச் சென்றுவிட்டான்
"தினைப்புனத்தில் மேய வரும் கிளிகளை ஓட்டிக்கொண்டிருந்து விட்டுத் திரும்புக" என்று தாய் எங்களை அனுப்புகிறாள் 

காட்டுக் கோழி முதைச் சுவலில் (பழைய வயல் மேட்டில்) காலால் கிளரும் மண் பொன் போல் இமைக்கும் நாடனொடு தமக்கு உள்ள தொடர்பு அன்புறும் காமமாக மலரட்டும்

தோழி தலைவியிடம் 
இரவு வேளையில் தனக்காகக் காத்திருக்கும்  தலைவனுக்குக் கேட்குமாறு 
பகலில் வரலாம் என்பதை இப்படிக் கூறுகிறாள்   

குறிஞ்சி
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் 
தலைமகன் கேட்பச் சொல்லியது.
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பாடல்


காட்டுக் கோழி 


Thursday, 29 November 2018

புன்னை வரி நிழல் Natrinai says 388

அம்ம வாழி, தோழி!
"உன் நுதல் பசப்பு என்ன ஆயிற்று"
இவ்வாறு தோழி வினவத் தலைவி சொல்கிறாள் 
புரி விட்டுத் திரித்த கயிற்றில் உளியை (தூண்டிலை) க் கட்டிப் பரதவர் நள்ளிரவில் மீன்  பிடிப்பர்
பிடித்துவந்த மீன்களைக் கானல் நிலத்தில் குவிப்பர்
குவித்த மீன்களை, புன்னை மர நிழலில் இருந்துகொண்டு, தம் சுற்றத்தார் அனைவருக்கும் பகிர்ந்து தந்து மகிழ்வர்
இப்படிப் பரதவர் மகிழும் துறைவன் என் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கிறான்
எனவே பசலை எங்கே இருக்கும்?

நெய்தல்
வரைவு நீட ஆற்றாளாகிய தோழிக்குத் 
தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது;
''மனையுள் வேறுபடாது ஆற்றினாய்'' என்றாற்குத் 
தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் பாடல்

நோன் புரிக் கயிறு கடை யாத்த கடு நடை எறி உளி
கயிற்றில் கட்டிய தூண்டில்

உறை கழி வாள் Natrinai says 387

தோழி
நெளி நெளியான கூந்தலும்
நீண்ட தோளும்
சிதையும்படி அழுகிறாய்

அவர் செந்தொடை மழவர் வில்லுக்குத் தப்பிப் பிழைக்கும் காட்டு வழியில் சென்றுள்ளார்

அவர் சொன்ன கார் காலம் வருவதைப் பார்
ஆலங்கானம் என்னுமிடத்தில் செழியன் போரிட்டபோது அவன் பாணறையில் மின்னிய வாள் போல மலையை முள்ளுகை இட்டிருக்கும் மேகம் மின்னி மழை பொழிவதைப் பார்
மழை பொழியும் கார் காலத்தில் வந்துவிடுவேன் - என்று அவர் சொன்னார் அல்லவா
சொன்னபடி வந்துவிடுவார்
அழாதே

இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள் 

பாலை
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் 
தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.
பொதும்பில் கிழார் மகனார் பாடல்

நெறி இருங் கதுப்பு
சுருண்ட கூந்தல்

விடர் அளைப் பள்ளி Natrinai says 386

ஆண் காட்டுப் பன்றியானது
கானவர் உழுது விதைத்து விளைந்த தினைக்கதிர்களை மேய்ந்துவிட்டு
மலைப்பிளவுக் குகையில் இருக்கும் வேங்கையைக் கண்டு அஞ்சாமல்
மூங்கில் மலைச் சாரலில் படுத்திருக்கும் நாடன் அவன்

தோழி

அவன் என்னிடம் வந்து
 • "அணங்கும் தெய்வத்தின் மேல் சூள் உரைப்பேன் (சத்தியம் செய்வேன்), நீ கூறுவது போன்ற பெண்கள் என் மேனியைத் தொட்டதுகூட இல்லை" 
என்றான்.
 • "அதனை நம்பி உன்னைப் பணிந்து 
 • அவன் தழுவுவதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினேன். 
 • இனி உன் விருப்பம்" 
இவ்வாறு தோழி தலைவியிடம் கூறினாள்

குறிஞ்சி
பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு 
வாயில் நேர்ந்த தோழி 
தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், 
தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, 
பிறிது ஒன்றன்மேல் வைத்து, 
''பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; 
எம்பெருமாட்டி குறிப்புணர்ந்து வழிபடுவேன் ஆவேன் மன்னோ” 
எனச் சொல்லியது.
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் பாடல்


சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
காட்டுப் பன்றி
சிறிய கண்களை உடையது 

கொடிக்கூடு Creeper-plant nest

பறவைக் கூடுகள் Birds’ nest


பறவைகள் எப்படியெல்லாம் கூடு கட்டிக்கொண்டு வாழ்கின்றன
வியத்தகு காட்சிகள்


தமியை வருதி Natrinai says 385

பகல் சென்றுவிட்டது
கள் நீரில் பூக்கும் மலர்கள் குவிகின்றன
குட்டிகளுடன் ஆண்-ஆமை வளைக்குள் செல்கிறது (பெண்-ஆமை முட்டையிடும் * முட்டைகளை ஆண்-ஆமை பாதுகாக்கும் * என்கின்றனர்)

"புலவு நீர் அடைகரை 
யாமைப் பார்ப்போடு 
அலவனும் அளைவயிற் செறிந்தன" - பாடல் பகுதி

கழியில் இரை உண்ட பறவைகள் குஞ்சுகளுடன் மரத்தில் உள்ள கூடுகளுக்குச் சென்றுவிட்டன
இந்த நேரத்தில் தனியே வருகிறாய்
இவளது எழுதெழில் கண்கள் மழை பொழிகின்றன

நெய்தல்
பாடலின் பின்பகுதி சிதைந்துள்ளது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

யாமைப் பார்ப்புகள்
ஆமைக் குஞ்சுகள்

மருந்து எனப்படும் மடவோள் Natrinai says 384

சிவந்த காலை உடைய பெண்புறா முடக்கள்ளிப் புதரில் முட்டையிட்டுக்கொண்டிருக்கிறது என்று அதன் ஆண்புறா
மன்னன் போரிட்டுப் பாழாக்கிய ஊரில் சிதறிக் கிடக்கும் நெல்லைக் கொண்டுவந்து கொடுக்கும் பாதுகாப்பு இல்லாத தொலைநாட்டு வழியில் என்னுடன் என் காதலி நடந்து வந்துகொண்டிருக்கிறாள்

அவள் காலடி வைக்க வேங்கை மலர்கள் கொட்டிக் கிடக்கின்றன

நெஞ்சமே
நினைத்துப் பார்
நான் துயர் படும்போது எனக்கு மருந்தாய் இருப்பவள் இவள்

பாலை
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

முடக்களி மேல் ஆண், பெண் புறாக்கள் 

அருளினை போல் அருளாய் Natrinai says 383

ஓங்கு வரை நாட

தொடுக்கப்பட்ட வேங்கைப்பூ மாலை போல் தோற்றம் அளிக்கும் குட்டி போட்டிருக்கும் பெண்புலி பசியோடு இருக்கிறது என்று அதன் ஆண்புலி ஆண்யானையைக் கொன்று இடி போல் முழங்கும் நள்ளிரவில் வருகிறாய்

பாம்பை நடுங்கச் செய்யும் இடி முழங்கும் வேளையில் வருகிறாய்

வந்து எனக்கு அருள் செய்கின்றாய்
நான் உன்னைப் பற்றிக் கவலை கொண்டிருப்பதால், நீ தந்த அருள் அருள்-போல இல்லை
தலைவி தலைவனிடம் கூறுகிறாள் 

குறிஞ்சி
தோழி ஆறு பார்த்துற்றுச் சொல்லியது.
கோளியூர் கிழார் மகனார் செழியனார் பாடல்

புலி & குருளை
புலியும் குட்டியும்கரத்தல் வேண்டுமால் Natrinai says 382

கானல் நிலத்தில் மாலைக் காலம்
நீல நிற நெய்தல் மலர்கள் இதழ்களை மூடும் வண்ணம் கடலில் அலை மோதுகிறது
மீனை அருந்திய பறவைகள் தம் கூட்டுக்குச் செல்கின்றன

நேரிழை, தோழியே
நம்மைத் துறந்து இருப்பவர் நம்மைப்பற்றி நினைக்கவில்லை

நம் உயிரே போவதாயினும், ஊரில் நமக்கு வேண்டாதவர் தூற்றும் பழியை அவருக்குத் தெரியாமல் நாம் மறைக்கத்தான் வேண்டும்

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள் 

நெய்தல்
ஒருவழித் தணந்த காலத்துப் 
பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் 
தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் 
தலைமகள் சொல்லியது. 
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் பாடல்

நற்றிணை 382
மீன் உண்ணும் பறவை

வேர் கிளர் மரம் Natrinai says 381

எனக்குத் துன்பம் தோன்றுவதால் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்குப் போதுமானதாக இருக்கிறது

 • வெள்ளம் தாக்கிக் கரை இடியும்போது அதன் கரையில் இருக்கும் மரம் வேர் அரிக்கப்பட்டு நடுங்குவது போல நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன் 

அவர் பிரிவை எப்படித் தாங்குவேன்

 • அரசன் நெடுமான் அஞ்சி ஈர நெஞ்சம் கொண்டவனாக யானை மேல் அமர்ந்துகொண்டு தன் புகழ் விளங்குபடித் தேர்களைக் கொடையாக வழங்குவது ப்போல மழை பொழிகிறது 
மழைக் காலத்தில் திரும்பிவிடுவேன் என்றவர் இன்னும் வரவில்லை 
எப்படித் தாங்கிக்கொள்வேன் 

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள் 

முல்லை
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் 
பருவ வரவின்கண் சொல்லியது.
ஒளவையார் பாடல்

ஆற்றங்கரை மரம்
வேர் அரிக்கப்படும் மரம்

நெய்யும் குய்யும் Natrinai says 380

சமைக்கும் எண்ணெய் பட்டும்
தாளிக்கும் எண்ணெய் சிதறியும் [குய்யும்]
என் உடம்பும், உடையும் மாசுபட்டுக் கிடக்கிறது

புதல்வனை அணைக்க முலையில் பால் ஊறி என் உடம்பு புனிற்று நாற்றம் அடிக்கிறது

ஒளி மிக்க அணிகலன் பூண்ட மகளிர்க்காகச் சேரியில் தேரில் செல்லும் இவருக்கு யான் ஒத்தவள் இல்லை

பாண

நீ மீட்டும் சீறியாழ் இனிமையாக இருந்தாலும் என்னைத் தொழாதே

உன் தண்துறை ஊரனை அழைத்துக்கொண்டு சென்றுவிடு

 • நீ யாழ் மீட்டிப் பா வேண்டிய மனையில் பாடு 
 • இவன் குதிரைகள் தேரில் பூட்டாமல் சினம் கொள்ளும் 
 • பயன் இல்லாத சொற்களை என்னிடம் பேச வேண்டாம் 

நான் விரும்புவதெல்லாம் இல்லற வாழ்வே
உன் தலைவன் விரும்புவது பரத்தை வாழ்வு 
தலைவி பாணனிடம் இவ்வாறு கூறுகிறாள் 

மருதம்
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.
கூடலூர்ப் பல்கண்ணனார் பாடல்

குய் - என்று ஓசை வரத் தாளித்தல்Wednesday, 28 November 2018

தேர் வண் சோழர் Natrinai says 379

மந்தி வைத்திருந்த குரங்குக்குட்டி
மலை முற்றத்துக்குச் செல்லாமல்
வேங்கை மரத்தடியில் காத்திருந்து
மலைமகள் கொடிச்சி கையில் வைத்திருந்த பாலைப் பிடுங்கிக்கொள்ள
கொடிச்சி கண்ணீர் விட்டு அழுதுகொண்டு
தன் வயிற்றில் அடித்துக்கொள்ள
அதனால்

 • சோழர் தலைநகர் குடந்தைவாயில் அகழியில் பூத்த நீல மலரின் இதழ்கள் போன்ற அவள் விரல்கள் 
 • மலைக் காட்டில் பூத்த காந்தள் மலர் போலச் சிவந்துவிட்டன 
தலைவி இப்படிப்பட்ட மடமைக் குணம் கொண்டவள் என்று 

தோழி தலைவனுக்கு எடுத்துரைக்கிறாள் 

குறிஞ்சி
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது;
காப்புக் கைம்மிக்க காலத்துத் 
தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.
குடவாயிற் கீரத்தனார் பாடல்

இது வயிற்றுக்குச் செய்யும் ஒரு வகைப் பயிற்சி
பாடல் கூறுவது
ஒருத்தி தன் கையால் தன் வயிற்றில் தானே அடித்துக்கொள்ளல்
வயிற்றெரிச்சல் சினம்பணிமொழி நம்பி Natrinai says 378

நான் அவனை எண்ணித் தூங்காமல் இருப்பதால்
நள்ளிரவுக் காலம் நீண்டுகொண்டே இருக்கிறது

நீண்ட நாள் புண் ஆறாமல் இருப்பவர் வலியால் அணத்திக்கொண்டே இருப்பது போல, கடல் அலை முழங்கிக்கொண்டே இருக்கிறது

இரவு போய் பகல் வரவே இல்லை

என் மேனிப் பசலை நோயைப் பார்த்துப் பெண்டிர் அலர் தூற்றுகின்றனர்

தோழி
இங்கு என் நிலைமை  இப்படி ஆகிவிட்டது

நாம் மணலில் கட்டி விளையாடிய சிற்றல் சிதையும்படி நடந்து நம்மோடு பணிமொழி பேசியவனோடு, ஆராய்ந்து பார்க்காமல் நாம் கொண்ட நட்புறவு இப்படி ஆகிவிட்டதே

தலைவி தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள் 

நெய்தல்
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது;
தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை 
வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடல்
வடமம் என்னும் ஊரில் வாழ்ந்த 
பொன் மாற்றுப் பார்க்கும் திறனாளி, 
பேரிசாத்தனார்

சிற்றில் சிதைத்தல் (கண்ணன்)

மடல் மா ஊர்ந்து Natrinai says 377

எருக்கு மாலை சூடிக்கொண்டு
பனைமட்டையால் செய்த குதிரை மேல் ஏறிக்கொண்டு
அவள் இருக்கும் ஊரில்
அவள் அழகினைப் பாராட்டிக்கொண்டு வந்து
அப்போதும் அவளைப் பெற முடியாமல் போனால்
அதுவே எனக்குப் பிணியாக அமைந்து
செத்துத் தொலைய மாட்டேனா

பாம்பு குறைத்த மதியம் போல
கூந்தலுக்கு இடையே தோன்றும் அவள் நெற்றி அழகைச்
சொல்லிச் சொல்லித் தோன்றியிருக்கும் என் நோயால்
செத்துத் தொலைய மாட்டேனா 

குறிஞ்சி
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், 
தோழி கேட்ப, தன்னுள்ளே சொல்லியது.
மடல் பாடிய மாதங்கீரனார் பாடல்

அரவுக் குறைத்த மதியம் (பழைய நம்பிக்கை)
பூமி நிழல் மறைத்த மதியம் (அறிவியல்)
சந்திர கிரகணம் 

முறஞ்செவி யானை Natrinai says 376

யானையின் கை போல் வளைந்து விளந்திருக்கும் தினைக் கதிர்களை
மலையரசன் வழங்கும் கொடை போல எண்ணிக்கொண்டு உண்ணும் கிளிகளே

 • குல்லை, குளவி, கூதளம், குவளை, இல்லம் மலர்களால் கட்டப்பட்ட மாலை அணிந்தவன் 
 • வில்லை வைத்திருப்பவன் 
 • மார்பில் செயலை மாலை அணிந்தவன் 
அவன் என் காதலன்
அவனைக் கண்டதுண்டா
கண்டால் சொல்லுங்கள்

 • என் தலைவியை அவளது தாய், அறம் இல்லாத தாய்,  தினைப்புனம் காக்க அனுப்ப மறுக்கிறாள் 
 • "இவளை அணங்கு அணங்கிவிடும்" (வருத்தும் தெய்வம் வருத்தும்) என்கிறாள் 

அணங்கு ஓட்ட முருகனுக்கு வெறி விழா நடத்துவாள் போல இருக்கிறது 
அவனுக்குச் சொல்லுங்கள் 

குறிஞ்சி
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.
கபிலர் பாடல்

வளர்ப்புக் கிளிகள்
வளைவாய்ப் பாசினம்
பாணினம் = பறவை இனம்அன்பு இலை Natrinai says 375

சேர்ப்ப

 • புன்னை மலரின்  தாது உதிர்ந்து மீன் மேயக் காத்திருக்கும் குருகு நிறம் மாறித் தோற்றம் அளிக்கும் கானல் நிலத்துச் சேர்ப்பனே 
நீ அன்பு இல்லாதவனாக இருக்கிறாய்

 • உன் புலனின்பத்தை விரும்பிய என் தலைவி நன்னுதல் இப்போது நாணுகிறாள் 
 • அதைக் கண்டு நீ நன்றாக மகிழ்கிறாய்  
 • பொழுது போனதும் கடல் அலை பெருகி வந்து மீள்வது போல் எம் மணல்மேட்டுப் படப்பைக்கு வந்து மீள்கிறாய் 
 • அதனால் இவள் நாணுகிறாள் என்பது உனக்கு விளங்கவில்லையா 
திருமணம் செய்துகொள்

நெய்தல்
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, 
தலைமகளது நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது
பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி பாடல்

புன்னைஉமண் பொலி சிறுகுடி Natrinai says 374

உமணர் வாழும் ஓங்கிய இடத்தில் இருக்கும் சிறுகுடியில்
களரி நிலத்துப் புளியங்காயைத் தின்று பசியைப் போக்கிக்கொண்டு வாழும்
என் தேமொழி

 • நீண்ட கூந்தலுடையவள்
 • கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து விருந்தூட்டும் விருப்பினள் 
 • கணவனை நினைத்துக் கண்ணீர்த் துளி மார்பில் விழ விம்மிக்கொண்டு இருப்பவள்
ஒருத்தியின் நிலையை
உச்சியில் குடையுடன் செல்லும் புதியவர்களே
அறிவீர்களா

முல்லை
வினை முற்றி மீள்வான் இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.
வன்பரணர் பாடல்

நற்றிணை 374
உமணர் வீடு - இந்தியா
ஐவன வெண்ணெல் குறூஉம் Natrinai says 373

மந்திக் குரங்கு பலாப்பழத்தைத் தின்னும்போது முற்றத்தில் இறைக்கும் குன்றத்தைப் பாடிக்கொண்டு கொடிச்சி ஐவனம் என்னும் நெல்லைக் குற்றும் நாடன் அவன்

 • அந்த நாடனொடு சேர்ந்து அருவியில் நீராட வேண்டும்  
 • வேங்கை மரத்தில் கட்டப்பட்டிருக்கும் இதணப் பந்தலில் அவனுடன் ஏறி இருந்துகொண்டு தினையை மேய வரும் பறவைகளை [பாசினம்] ஓட்ட வேண்டும் 

இந்த வாய்ப்பு நாளைக்கும் கிடைக்குமா
தலைவி தோழியை வினவுகிறாள் 

குறிஞ்சி
செறிப்பு அறிவுறீஇயது.
கபிலர் பாடல்


நெல் குற்றுதல்


திமில் விளக்கம் எண்ணும் Natrinai says 372


 • இனிக்கும் பனம்பழம் மூக்கு இற்று நெய்தல் மலரின் இதழ் வருந்தும்படி நெய்தல் பூத்திருக்கும் சேற்றில் விழ, அங்கு மீன் மேயும் குருகு இனம் பறந்தோடும் துறையின் தலைவன் 
இந்தத் துறைவன்
 • அன்னம்போல் வெண்ணிற மணல்மேட்டின் நடுவில் இருந்துகொண்டு, அன்னை விளையாடத் தந்த சங்கு தொலைந்துவிட்டது போல் தலைவன் வராததால் வருந்திக்கொண்டு தலைவி அமர்ந்திருப்பாள் 
 • தாய் "போனால் போகட்டும் வருந்தாதே" என்பாள் 
 • அங்கு இரவில் கடலில் மீன் பிடிக்கும் பரதவரின் திமில் படகுகளை எண்ணிக்கொண்டு மகளிர் விளையாடுவர் 
இப்படிப்பட்ட ஊர் - கண்டல் மரங்கள் வேலி போல் வளர்ந்திருக்கும் ஊர் - நம் ஊர்
தோழி
வெருண்டோடும் குருகு போல் நாம் வருந்தவேண்டியதில்லை
அவர் வருவார்
தோழி தலைவிக்குச் சொல்கிறாள்

நெய்தல்
மேல் இற்செறிப்பான் அறிந்து 
ஆற்றாளாகி நின்ற தலைமகள் 
ஆற்ற வேண்டி, 
உலகியல் மேல் வைத்துச் 
சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.
உலோச்சனார் பாடல்

கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்
பனம் பழம்காயாங்குன்றம் Natrinai says 371

காயாம் பூ கூத்திருக்கும் குன்றத்தில் கொன்றை மலர் கொட்டுவது போல மலைப்பிளவில் மேகம் மின்னுகிறது
காயாம்பூ நிறம்ப போல் மேகம்
கொன்றை மலர் நிறம் மின்னல்
மாயோள் இருக்கும் இடம் போல வானம் இருள்கிறது 
மாயோள் = காளி - இருள் நிறம்
மழை பெய்யத் தொடங்குகிறது 
மழை பெய்யாததால் மக்கள் வாடுவது போலக் என் அளி-நிழல் இல்லாமல் என் மனைவி அழத் தொடங்கியிருப்பாள்
அவள் ஆவலுக்கு எதிராகக் கோவலர் குழல் ஊதும் இசை கேட்கும்
பாக
தேரை விரைந்து செலுத்து
தலைவன் இவ்வாறு கூறுகிறான் 
  
முல்லை
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.
ஒளவையார் பாடல்

காயா - மேகம்
கொன்றை - மின்னல்
மாயோள், காளிTuesday, 27 November 2018

அகட்டில் குவளை ஒற்றி Natrinai says 370

தலைவன் பரத்தையிடமிருந்து மீண்டு மனைவியிடம் வந்தான் 
வாயிலாக உதவப் பாணனை அழைத்துக்கொண்டு வந்தான் 
அப்போதும் மனைவி ஊடினாள் (பிணக்கிக்கொண்டாள்) 
முன்பொருகால் நிகழ்ந்ததைப் பாணனுக்குக் கூறி, மனைவியின் ஊடலைத் தணிக்கக் கணவன் இவ்வாறு சொல்கிறான் 
பாண, வருக. இதனைக் கேள்
என் குடி பெருக இவள் புதல்வனைப் பெற்றெடுத்து, ஐயவி என்னும் வெண்சிறு கடுகெண்ணெய் பூசிய உடலோடு படுத்திருந்தாள்.
"மகனைப் பெற்ற அல்குல் வரி வாட உறங்குகிறாயா" என்று கேட்டுக்கொண்டே குவளைப் பூவால் அவள் வயிற்றை ஒற்றினேன். அவள் தன் கண்ணைக் கைகளால் மூடிக்கொண்டு புன்னகை பூத்தாள்
அப்படிப்பட்டவள் இன்று ஊடுகிறாள் 

மருதம்
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது;
முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்.
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் பாடல்

நாணிக் கண் புதைத்தல்
பாடல் நிகழ்வு - படுக்கையில் படுத்துக்கொண்டே நாணிக் கண் புதைத்தல்

நிறை பறைக் குருகினம் Natrinai says 369


 • ஞாயிறு தன் வெயில் சினம் தணிந்து மலையில் மறைய 
 • குருகினம் தம் இருப்பிடம் நோக்கிப் பறந்து செல்ல 
 • பகல் நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்த முல்லை மலர் பூக்க 

மாலை நேரம்
அவர் பிரிந்திருக்கும் இந்த  நாளிலும் வருமாயின்
தோழி
என் நிறையுடைமையை அழிக்கும் காம வெள்ளத்தை நீந்தும் வழி எனக்குத் தெரியவில்லை

 • ஞெமை மரம் ஓங்கிய இமயமலை உச்சியிலிருந்து வானிலிருந்து வருவது போல வெள்ளை நிறத்தில் இறங்கிவரும் கங்கை ஆற்று வெள்ளம் போன்ற என் காம வெள்ளத்தை நீந்தும் வழி எனக்குத் தெரியவில்லை 
தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள் 

நெய்தல்
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, 
ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.
மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் பாடல்
மதுரையில் எழுத்தோலைக் கடை வைத்திருந்த நல்வெள்ளையார்.

இமய மலையிலிருந்து இறங்கும் கங்கை வெள்ளம்
இந்த வெள்ளம் போல் அவளுக்குக் காமம் பெருகி வருகிறதாம்  

வெய்ய உயிர்த்தனள் Natrinai says 368

உன்னோடு சேர்ந்து இருந்து

 • தினைப் புனத்தில் கிளி ஓட்டிக்கொண்டு 
 • வேங்கை மரத்தில் கட்டிய ஊஞ்சலில் ஆடிக்கொண்டு 
 • நீ தந்த தழையாடையை அணிந்துகொண்டு 

விளையாடுவதைக் காட்டிலும் இனிய வாழ்க்கை வேறு உண்டோ

உன்னோடு உறவு கொண்டதால்

 • என் கூந்தலிலும் உடலிலும் தோன்றும் புதிய மாற்றத்தையும் மணத்தையும் 
 • நெற்றியில் பாய்ந்திருக்கும் பசலையையும் 

கண்டு
தாய்

 • தன் நெஞ்சம் வறிதாக 
 • வேறொன்றை எனக்குச் சுட்டிக் காட்டி 

பெருமூச்சு விடுகிறாள்

ஐயனே
அதனால் நாங்கள் அஞ்சுகிறோம்

தோழி தலைவியின் நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைக்கிறாள் 

குறிஞ்சி
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.
கபிலர் பாடல்

தாய் மகள்

சூருடைப் பலி Natrinai says 367

பெண்காக்கை தன் குஞ்சுகள் சூழ இருந்துகொண்டு தன் கிளைப்பறவை ஆணை அழைத்து சூர் கடவுளுக்குப் பலி கொடுக்கும் கருனை நெல்லஞ்சோற்றை (கருனை = புலவு) உண்ண கூழுடை நன்மனையை (உணவுப் பண்டம் மிக்க வளமனையை) மொய்த்துக்கொண்டிருக்கும் ஊர் மூதில் அருமன் என்னும் வள்ளல் வாழும் சிறுகுடி

இந்தச் சிறுகுடியில் வாழும் மெல்லியல் அரிவையே

உன் தலையில் நீ சூடியிருப்பது போல
குவளை, முல்லை ஆகிய மலர்களை அணிந்துகொண்டு
உன் காதலனின் இளையர் (தோழர்) குதிரையில் வந்துள்ளனர்
பனி பொழியும் நாளில் (தை மாதத்தில்) வந்துள்ளனர்

திருமணச் செய்தியைத் தோழி தலைவிக்குக் கூறுகிறாள் 

முல்லை
வரவு மலிந்தது
நக்கீரர் பாடல்

பூ சூடல்

வட புல வாடை Natrinai says 366

அவள் பெருந்தோள் குறுமகள்

 • அல்குல் தெரியுமாறு மெல்லிய ஆடை உடுத்தியிருப்பாள்
 • கூந்தலை மாசறக் கழுவி முல்லைப் பூ சூடியிருப்பாள் 

வண்டு மொய்க்கும் அவள் கூந்தல் மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு
பொருள் ஈட்டுதல் வேண்டி

 • வாடைக்குத் துணைப் பறவையுடன் தங்க 
 • கரும்புத் தோகையைக் கிழித்துக் கொண்டுவந்து 
 • மூங்கில் மரத்தில் கட்டியிருக்கும் 

தூக்கணாங் குருவிக் கூடுகள் வாடைக் காற்றில் ஆடும் வழியில் செல்லும் உலகியலாளர் மடவர் 

தலைவன் இவ்வாறு தனக்குள் சொல்லிக்கொள்கிறான் 

பாலை
உலகியல் கூறிப் 
பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் 
தலைமகன் சொல்லியது.
மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் பாடல்

தூக்கணாங் குருவிக் கூடு 

சான்றோய் அல்லை Natrinai says 365

அன்னை இட்ட கட்டுக் காப்பை மீறி
நம் வளமனை வாயிலைக் கடந்து
நம் ஊர் மன்றம் வழியாகப் பலரும் காணும்படிச் சென்று
அகன்ற வயல் படப்பைகளில் இருப்பவர்களை "அவன் ஊர் எங்கே இருக்கிறது" என்று கேட்டுக்கொண்டு
அவன் ஊருக்குச் சென்று

 • பல நாள் மழை பொழியாவிட்டாலும்
 •  அருவி நீர் கொட்டுவதால் 
 • நிலத்தில் ஊற்றுநீர் ஓடிக்கொண்டிருக்கும் அயம் திகழும்
வானளாவிய மலைகிழவோனை
இவளுக்கு அளி செய்யாமல் இருக்கும் "நீ சான்றோன் இல்லை" என்று சொல்லிவிட்டு வர
அவன் ஊருக்கே செல்லலாமா, தோழி

தோழி தலைவியிடம் கூறுகிறாள் 

குறிஞ்சி
தோழி, 
தலைமகன் சிறைப்புறத்தானாக, 
தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,
''இன்னது செய்தும்'' என்பாளாய்ச் சொல்லியது.
கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார் பாடல்

அயம்

கொன்றை அம் தீம் குழல் Natrinai says 364

திரும்பி வந்துவிடுவேன் என்று அவர் சொல்லிச் சென்ற பருவம் கழிந்து சென்றுவிட்டது
வானம் பொழிந்த மழைக்காலம் போய்விட்டது
அடுத்து வந்த, பனியொடு வாடைக் காற்று வீசிய காலமும் போய்விட்டது
எனக்கு வெறுப்பாக இருக்கிறது

தோழி

இன்னும் சில நாள் கழிந்தால் நான் வாழமாட்டேன் போலத் தோன்றுகிறது
அவர் வரும் தேர்மணி ஓசை கேட்கவில்லை
ஆனிரைகளுடன் இல்லம் திரும்பும் கோவலர் கொன்றை நெற்றில் செய்த குழலை ஊதும் ஒலி மாலை வேலையில் கேட்கிறது
மாரி கடந்த பருவமும், மாலை வேளையும் வந்தால் நான் என்ன செய்வேன்

தோழியிடம் சொல்லித் தலைவி கலங்குகிறாள்

முல்லை
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் பாடல்

கலக்கம்தழை சிதைய Natrinai says 363

மலிநீர்ச் சேர்ப்ப

கழியைச் சூழ்ந்து கண்டல் மரங்கள் இருக்கும் படப்பை நிலம் கொண்ட உன் தெண்கடல் நாட்டுக்கு இவளை விட்டுவிட்டுச் செல்வாய் ஆயின்
பொன் அணிகலன் செய்யும் கம்மியன் தன் உலை அடியில் மணல் போட்டிருப்பானே அந்த மணலைக் கொண்டுவருக

உனக்குச் சிலம்பு செய்யும் தட்டான் பயன்படுத்த மணல் கொண்டுவரச் சென்றிருக்கிறார் - என்று சொல்லி இவளை நான் சமாளித்துக்கொள்கிறேன்

 • நேற்று மாலையில் 
 • இவள் தழையாடை சிதைய 
 • பூ மாலை வாட 
 • வளையல் கழன்றோட 
 • உன்னை நினைத்துக்கொண்டு 
 • நண்டு விளையாடப் பார்த்துக்கொண்டிருந்தாள்

தோழி தலைவனிடம் சொல்கிறாள் 

நெய்தல்
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் 
தோழி, 
''தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ 
எம்பெருமான் கவலாது செல்வது? 
யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் 
நீ ஆற்றுவி'' எனச் சொல்லியது;
கையுறை நேர்ந்த தோழி 
தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்.
உலோச்சனார் பாடல்

நகை செய்யும் கம்மியன் (தட்டான்)
தன் உலைப்பானைக்கு அடியில்
மணல் பயன்படுத்துவான்

வினை அமை பாவை Natrinai says 362

வினை அமை பாவை = பொம்மலாட்டத்தில் ஆட்டுபவன் ஆட்ட இயங்கும் பாவை
காதலியை தன் ஊருக்கு அழைத்துச் செல்லும் காதலன் தன் காதலியிடம் சொல்கிறான்
உன் தந்தையின் வளமனையைக் கடந்து வினை அமைந்த பாவை போல என்னுடன் நடந்துவந்தாய்
மழை பொழிந்திருக்கும் நிலத்தில் செம்மூதாய்ப் பூச்சிகள் செல்லும் அழகினைப் பார்
அவற்றைப் பிடித்து சற்றே விளையாடுக
நான் மணல் மேட்டில் வேங்கை மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறேன்.
நம் உடனபோக்கை எதிர்த்துப் போரிட யாராவது வந்தால் அங்கே நான் பார்த்துக் கொள்கிறேன். அஞ்சமாட்டேன்
உன்னைச் சேர்ந்தவர்கள் யாராவது வந்தால் ஒளிந்துகொள்கிறேன். அவர்களுடன் போரிட மாட்டேன்.

பாலை
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

நற்றிணை 362
வினையமைப் பாவை
கட்ட பொம்மலாட்டம்
கட்டைப் பொம்மை ஆட்டம்

மூதாய், கோபம், கோபப் பூச்சி, தம்பலம், தம்பலப் பூச்சி, வெல்வட்டுப் பூச்சி
இதனைப் கையில் ஏறவிட்டு வேடிக்கைப் பார்த்து விளையாடுவர் 

நெடு நா ஒண் மணி Natrinai says 361

மணம் கமழும் முல்லைப் பூவை நெடுந்தகை சூடியிருந்தான்
அவனது இளையரும் சூடியிருந்தனர்
வானத்தைக் கடந்து செல்வது போல் தேரில் பூட்டிய அவன் குதிரை மழை பொழிந்திருக்கும் முல்லை நிலத்தில் தாவிச் சென்றது
தேர் மணி ஒலியுடன் மாலையில் ஊர் வந்து சேர்ந்தது
அவன் மனைவி திருந்திழைக்கு இன்று விருந்து

முல்லை
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.
மதுரைப் பேராலவாயர் பாடல்

ஆண்மகன் தலையில் பூச் சூடல்
சங்க கால ஆண்மகன் இப்படித்தான் சூடிக்கொண்டான்

Monday, 26 November 2018

சிறக்க நின் பரத்தை Natrinai says 360

பெரும 
திருவிழா முடிந்ததும் சிலை மாலை இல்லாமல் கிடப்பது போல
நேற்றுப் புணர்ந்தவளின் நலத்தை வாடும்படி விட்டுவிட்டு
இன்று புதிதாக வேறொருத்தி நல்லழகை நாடும் நின் பரத்தமை சிறக்கட்டும் 
உன்னைப் பலரும் பழிக்கிறார்களே என்று நான் நாணுகிறேன் 

களிற்று யானையைக் காழ் என்னும் அங்குசத்தால் குத்துவர்
கைகளுக்கு இடையே வாயில் சோற்றை வைப்பர்
அந்தப் பரத்தையர் அப்படிக் குத்திய புண் பட்டு நீ வருந்துவது கண்டு மகிழ்கிறேன்

உனக்கு மனை மடி துயில் (மனைவியை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் உறங்குவது) இன்னும் கைகூடும்

செல்க

மருதம்
பரத்தையிற் பிரிந்த தலைமகனைத் 
தோழி, தலைமகள் குறிப்பறிந்து, 
வாயில் மறுத்தது;
தலைமகள் ஊடிச் சொல்லியதூஉம் ஆம்.
ஓரம்போகியார் பாடல்

பரத்தை

உடுக்கும் தழை Natrinai says 359

சேதா (சிவப்புப் பசு) சிலம்பில் மேய்ந்தது
அப்போது காந்தள் பூக்குலையைத் தீண்டியது
காந்தள் தாதுகள் அதன்மீது உதிர்ந்தன
அதனால் சிவப்புப் பசு மஞ்சள் நிறப் பசுவாக மாறியது
அதனைக் கண்ட அதன் கன்று தாயை மருண்டு பார்த்தது
இப்படி மருண்டு பார்க்கும் குன்ற நாடன் அவன்
தலைவி தோழியிடம் கூறுகிறாள் 
குன்ற நாடன் என்னை உடுத்திக்கொள்ளச் சொல்லி தழையாடை தந்தான்
உடுத்திக்கொண்டால் தாய் என்ன செய்வாளோ என்று அஞ்சுகிறேன்
உடுத்திக்கொள்ளாவிட்டால் எங்கள் உறவு கெட்டுவிடுமே என்று அஞ்சுகிறேன்

 • போரிடும் வருடை ஆடுகளும் ஏறாத 
 • அச்சம் தரும் மலை அடுக்கத்தில் ஏறி அவன் பறித்த இலைகளால் தொடுக்கப்பட்டது அந்தத் தழையாடை 
 • இந்தப் பெறற்கரும் தழையாடை

உடுத்திக் கொள்வதா வேண்டாமா என்ற என் போராட்டத்துக்கு இடையே இந்தப் பெறற்கரும் தழையாடை வாடாமல் இருக்குமா

குறிஞ்சி
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று 
தலைமகன் குறிப்பின் ஓடியது
கபிலர் பாடல்

இது ஒருவகைத் தழையாடு (இக்காலம்)
வேப்பிலை ஆடை
இக்கால விழாக்கால ஆட்டம்
சங்க காலத் தழையாடைBlog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி