Wednesday, 31 October 2018

காதல் கெழுமிய நலத்தள் Natrinai says 161

அரசன்தன் போர்த்தொழிலை மூடித்துக்கொண்டான்

 • மலையில் உள்ள சுனைகளில் நெய்தல் மகளிர் கண் போல் மலர்கிறது 
 • வழியில் வேங்கை மலர்ந்துள்ளது 
 • வண்டுகள் மொய்க்கின்றன. 
 • மகளிர் வளையல் போன்ற காந்தள் மலர்களை அறுபடும்படி இளையர் தேர் செல்கிறது 

அவள் புள் காட்டிய குறிகளால் நான் வருவதைத் தெரிந்துகொண்டிருப்பாள்

 • அவள் காதல் கெழுமிய நலத்தள் 
 • திதலை அல்குல் தேமொழி 

புதல்வனுக்கு ஏதோ காட்டிப் பொய்யாக ஏமாற்றிக் கொண்டுருப்பாள்

நாம் விரைந்து சென்றடைவோம்

முல்லை
வினை முற்றிப் பெயரும் தலைவன் 
தேர்ப்பாகன் கேட்ப சொல்லியது
பாடியவர் பெயர் தெரியவில்லை

"வளை எனக் காந்தள் வள் இதழ்"
வளையல் போல் காந்தள்நும்மினும் அறிகுவென் Natrinai says 160


 • நயன் 
 • நண்பு 
 • நாண் 

கொண்டவள்

 • பயன் 
 • பண்பு 
 • பாடு 

அறிந்து ஒழுகுபவள்
தோழ

 • தித்தி ஏறிய வனப்பு மிக்க முலை 
 • ஒடிந்துவிடுவது போன்ற  இடை 
 • ஐம்பால் ஒப்பனை
 • செம்பொறி நெற்றி 
 • தேன் பாயும் கூந்தல் 
 • குவளை மலர் போன்ற கண் 

கொண்டவள்

 • இவளைக் காணா முன்னர் உன்னேப் போலத்தான் மனவுறுதி உடையவனாக இருந்தேன் 

இப்போது அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லலை 
தலைவன் தன் பாங்கனுக்குக் கூறுகிறான் 

குறிஞ்சி
கழற்று எதிர்மறை
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

அம் நுண் நுசும்பு - பாடல் தொடர்குருகு ஒழுக்கு Natrinai says 159

மணி நிற (நீல நிற) வெளி
அலை மோதும் துறை
பூ மலிந்த துறை

நிலா வெளிச்சத்தைக் குவித்து வைத்தது போல மணல் குவிந்து இடிந்திருக்கும் மணல் மேடு

அதில் ஏறி நின்றுகொண்டு குருகு கூட்டமாகப் பறப்பதைப் பார்த்து எத்தனைக் குருகுகள் பறக்கின்றன என்று எண்ணிக்கொண்டு பகல் பொழுதைக் கழித்தோம்

இனி இல்லத்திற்குச் செல்வோம் என்றால் அவளால் செல்ல முடியவில்லை

எனவே போக வேண்டாம் என்று சொல்லி நானும் என் தேரை அங்கேயே நிறுத்திவிட்டு ‘கல்’ என்று அமைதியுடன் காணப்படும் அந்தப் பாக்கத்திலேயே தங்கிவிட்டேன்

நெய்தல்
தலைவியின் ஆற்றாமையும் 
உலகியலும் கூறி 
வரைவு கடாயது
கண்ணம் புல்லனார் பாடல்

குருகு - பறவைகள் பறத்தல்
இவற்றை எத்தனை என்று எண்ணிக்கொண்டிருத்தல் ஒரு வகை விளையாட்டுகண் கொல்லும்மே Natrinai says 158

அம்ம வாழி தோழி
மலைநாடன் எப்படி வருகிறானோ தெரியவில்லை

கண்ணு மண்ணு தெரியாத இருட்டு

கல் கிடக்கும் வழி அவன் காலைக் கொல்லும்
இருட்டு அவன் கண்ணைக் கொல்லும்

குகையில் இருக்கும் புலி வேழ-யானையைத் தாக்கி அதன் குருதி பருகிய வாயை வேங்கை மரத்தில் துடைக்கும்

இப்படிப்பட்ட வழியில் மலைநாடன் வருகிறான்

குறிஞ்சி
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் 
சிறைப்புறமாகச் சொல்லியது
வெள்ளைக்குடி நாகனார் பாடல்
நெடுந்தாள் வேங்கை Natrinai says 157

மழை பொழிந்து உலகுக்கு உதவிய பருவம் கடந்து வேனில் வந்துவிட்டது
பாம்பு உரித்த தோல் போல் ஆற்றில் தெளிநீர் ஓடும் அறல் மணலின் படிவு தெரிகிறது
இளந்தளிர்களை கோதிக்கொண்டு குயில் தன் துணையை விளிக்கும் குரல் அவள் இருக்கும் இடத்திலும் கேட்கும்
உயர்ந்த அடிமரம் கொண்ட வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடப்பது போல மேனியில் தித்தி அழகு கொண்ட மாயவளாகிய அவள் என்னை நினைத்து வருந்திக்கொண்டிருப்பாள்
பொருள் ஈட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் நான் என்ன செய்வேன்

பாலை
பொருள்வயிற் பிரிந்த தலைவன் 
பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது
இளவேட்டனார் பாடல்

வேங்கை மலர்அரியல் ஆர்ந்தவர் Natrinai says 156

நீ இருளில் வருகிறாய்
அது, எங்கே கால் வைக்கிறோம் என்று பார்க்க முடியாத இருள்
ஊருக்கும் வீட்டுக்கும் இருக்கும் காவல்காரர்களைக் கடந்து வருகிறாய்
இப்படிப் பேரன்பு கொண்டவராக இருக்கிறாய்

இரவில் வரவேண்டாம்

நாங்கள் உன்னையும் உன் மலையையும் பாடிக்கொண்டு தினைப்புனம் காத்துக்கொண்டிருப்போம்
பகலில் அங்கு வரலாம்

எங்கள் ஊர் எருவை மலர்கள் நிறைந்த சிறுகுடி
இங்கு இருப்பவர் அரியல் கஞ்சி குடித்து வாழ்பவர் என்றாலும் பெரியர் \ பெருந்தன்மை உள்ளவர்

நீ வரலாம்

குறிஞ்சி
இரவுக்குறி மறுத்தது
கண்ணங் கொற்றனார் பாடல்

அணங்கோ Natrinai says 155


 • மகளிருடன் சேரந்து நீ ஓரை விளையாடவில்லை 
 • நெய்தல் மலர்களைப் பறித்துத் தொடலை கன்னும் தழையாடையும் புனையவில்லை 
 • பிரிந்த பூங்கானலில் தனியே ஒருபக்கம் நிற்கிறாய் 
 • யார் ஐயையோ 
உன்னைத் தொழுது வினவுகின்றேன்
 • கடல் பரப்பில் அமர்ந்து வாழும் அணங்கோ 
 • கடலை விட்டுவிட்டுக் கழிக்கு வந்திருக்கிறாயோ 
 • மடந்தையே 

சொல் - என்றான் தலைவன்

அதற்கு அவள் மறுமொழி ஏதும் சொல்லவில்லை

தன் பல்லிலே முறுவலைக் காட்டி
கண்ணிலே பனியைக் காட்டினாள்

நெய்தல்
இரண்டாம் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் 
தலைவன் சொல்லியது
உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் 
தலைவன் சொற்றதூஉம் ஆம்
பராயனார் பாடல்

பெருந்துறைப் பரப்பின் அமர்துறை அணங்கோ - பாடல் அடிதூவிலாட்டி Natrinai says 154

தூவிலாட்டி \ தூய இல்லத்தாள் \ இல்லாள் \ இல்லாட்டி 
தூவிலாட்டியே

அவர் இன்று வராமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன் - தோழி கூறுகிறாள்

காடு கம்-என்று இருண்டு கிடக்கிறது
மலயே கிழிவது போல வானம் மின்னுகிறது
இடி முழங்குகிறது
மேகம் தவழும் மலைக்காட்டில் யானையை வீழ்த்திய புலி உறுமுகிறது

அச்சம் இல்லாமல் நீ உறங்குகிறாயா
என் நெஞ்சம் நீர் தெளித்த நெருப்பு போல் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறது 

இன்று அவர் வாராமல் இருந்தால் நல்லது

குறிஞ்சி
இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக 
வரைவு கடாயது
நல்லாவூர் கிழார் பாடல்

புலி யானையத் தாக்கல்தனிமகன் Natrinai says 153

தலைவி தனக்குள் சொல்லிக்கொண்டு வருந்துகிறாள்

வானம் கீழைக் கடலில் நீரை முகந்தது
மேற்குத் திசைக்குச் சென்று இருண்டது
செம்பினால் பானை செய்யும் கம்மியன் செம்பைக் காய்ச்சி ஊற்றுவது போல மின்னிற்று
பின்னர் தெற்குப் பக்கமாச் சென்றுவிட்டது

அந்த வான்மேகம் போல
என் நெஞ்சம் என்னை இங்கே விட்டுவிட்டு அவரிடம் சென்றுவிட்டது
சினம் கொண்ட வேந்தனின் படை கலக்கும் கொடுக்கு அஞ்சி மக்கள் குடிபோன பாழூரைக் காத்துக்கொண்டு தனிமையில் இருக்கும் ஒருவன் போல என் உடம்பு இங்கே தனிமையில் வருந்திக்கொண்டிருக்கிறது

பாலை
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது
தனிமகனார் பாடல்
பாடலில் வரும் தனிமகன் என்னும் தொடரைக் கொண்டு 
இவருக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

செம்பு உருக்கு
இந்த நிறத்தில் வானம் மின்னியதாம்யாங்கு ஆகுவென்கொல் Natrinai says 152

நான் ஊர்ந்துவரும் மடல் குதிரையை என் காமம் எனக்குத் தந்தத்து

நான் சூடியிருக்கும் எருக்கம் பூ மாலையை ஊரார் தூற்றும் அலர் எனக்குத் தந்தது

என் புலம்பலை பொழுது இறங்கும் மாலைப் பொழுது தந்தது

இவற்றையெல்லாம் தந்தது போதாதென்று வாடைக்காற்று பனித் துவலைகளை வீசுகின்றது

இரவு வந்த பின்னரும் கூட்டில் இருக்கும் அன்றில் பறவை குரல் எழுப்பி என்னை வருத்துகிறது 

அளியேன் (இரங்கத்தக்கவன்) நான் என்ன ஆவேனோ தெரியவில்லை

நெய்தல்
மடல் வலித்த தலைவன்
முன்னிலைப் புறமொழியாக 
தோழி கேட்பச் சொல்லியது
ஆலம்பேரி சாத்தனார் பாடல்

வாடைக் காற்றுகறிவளர் அடுக்கம் Natrinai says 151

நாடன் வராததால்
உன் நெற்றி பசக்கிறது
தோள் மெலிந்து வாடுகிறது
என்றாலும் அவன் இரவில் வரவேண்டாம்

 • வெள்ளைத் தந்தங்களைக் கொண்ட களிறு  குகைக்கே சென்று புலியைக் குத்தியது 
 • அதனால் அதன் தந்தங்கள் அரத்தத்தால் சிவந்தன 
 • அந்தக் குருதிக் கறையை அது கல்லில் இறங்கும் அருவியில் கழுவிக்கொண்டிருக்கும் 

அப்படிப்பட்ட மலைச்சாரல் வழியில் அவர் வரேண்டாம்

 • கடுவன் குரங்கு குறி காட்டி மந்திக் குரங்கை அழைத்து மிளகுக்கொடி படர்ந்திருக்கும் காட்டில் பிற குரங்குகளுக்குத் தெரியாமல் மறையில் புணர்ந்தது 
 • பின்னர் அந்தச் செம்முக மந்தி வேங்கை பூத்திருக்கும் கிளையில் சுனையை நோக்கி அமர்ந்துகொண்டு கடுவன் குரங்கின் பாறு மயிரில் (பறட்டை மயிர்) இருக்கும் பேன்களை பிடுங்கித் தின்று திருத்தும் 

இப்படித் திருத்தும் நாடன் தலைவன்
கடுவன், மந்தி 
தலைவன், தலைவி 
கருப்பொருள் உணர்த்தும் இறைச்சிப் பொருள்

குறிஞ்சி
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் 
தோழி சொல்லியது
இளநாகனார் பாடல்

பாறு மயிர் திருத்தும் குரங்கு Tuesday, 30 October 2018

கண்ணுடைச் சிறு கோல் Natrinai says 150

பாண உன் தலைவன் பெருமகனை நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது 
அவன் வழுதி அரசன் வாழ்க என்று வாழ்த்திக்கொண்டே வந்து என்னைத் தொழுதான்

 • யானைப்படையை நடத்தி பகைவர் அரண்கள் பலவற்றைக் கடந்தவன் என்று வழுதி மன்னனை வாழ்த்தினான் 
நான் எந்த வகையிலும் அவனுக்கு இரக்கம் காட்டவில்லை.
எனவே தன் குதிரை மேல் பகட்டிக்கொண்டு வந்தான்
தான் வழுதியிடம் பெற்ற தாரும் கண்ணியும் காட்டினான்
எப்படியோ என் நெஞ்சத்தைக் கவர்ந்துவிட்டான்
என் தாய் தன் கையில் கணுக்கள் கொண்ட சிறிய மூங்கில் கோலை வைத்துக்கொண்டு சினத்துடன் வந்தவள் யாரையும் துன்புறுத்தாமல் திரும்பிவிட்டாள்

மருதம்
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை 
தலைவனை நெருங்கிப் 
பாணற்கு உரைத்தது
கடுவன் இளமள்ளனார் பாடல்
கடைக்கண் நோக்கி Natrinai says 149

அம்பல் தூற்றும் பெண்டிர் சிலரும் பலருமாகத் தெருவில் நின்றுகொண்டு தம் மூக்கில் ஆள்-சுட்டும் விரலை வைத்துக்கொண்டு என்னைக் கடைக்கண்ணால் நோக்கி அம்பல் தூற்றுகின்றனர்

அன்னை என்னைக் கோலால் அடிக்கிறாள்
நான் துன்புறுகிறேன்

தோழி, வாழி

கானலில் மணக்கும் மலர் மணத்தை நுகர்ந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் நண்பகலில் வரும் கொண்கனுடன் நான் செல்ல இருக்கிறேன்.

இந்த ஊர் என்னைப்பற்றி அலர் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்

நெய்தல்
தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது
சிறைப்புறமாகச் சொல்லியதூஉம் ஆம்
உலோச்சனார் பாடல்

மூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்தி
அம்பல் தூற்றும் பெண்டிர்
சிலரும் பல்லரும் இப்படி விரலை வைத்துக்கொண்டு தூற்றுவார்களாம்வருந்தேன் தோழி Natrinai says 148

அவர் என் மேனியின் மென்மையை எடுத்து மென்மையாக "நீ என்னுடன் காட்டு வழியில் வந்தால் தாங்க மாட்டாய்" என்று கூறிவிட்டுப் பொருள் ஈட்டும் ஆள்வினைக்காகப் பிரிந்து சென்றுள்ளார்

அது நீர் இல்லாத குளம் இருக்கும் வழியாம்
மரா மரத்தில் ஒளிந்துகொண்டு மறவர் அம்பு எய்வார்களாம்
குட்டி போட்டிருக்கும் தன் பெண்புலியின் பசியைப் போக்க ஆண்புலி ஆண்யானையைத் தாக்குமாம்

அப்படிப்பட்ட சுர வழி என்று கூறினார்
அவர் எண்ணிய செயல் நிறைவேறட்டும்

பாலை
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் 
தோழி வற்புறீஇயது
கள்ளம்பாளனார் பாடல்யாங்கு ஆகுவமோ Natrinai says 147

அணி நுதல் குறுமகளே
நாம் என்ன ஆவோமோ தெரியவில்லை

தினைக் கதிர்களைக் கிளியினம் கவரும்படி விட்டுவிட்டு நீ எங்குச் சென்றாய் என்று தாய் வினவினாள்

அருவி ஆர்க்கும் மலைநாடனை எனக்குத் தெரியாது
அவனைக் கண்டதும் இல்லை
மூங்கில்-தட்டையை வைத்துக்கொண்டு பூ கொய்யச் செல்லவும் இல்லை
சுனையில் பாய்ந்து நீராடவும் இல்லை
என்று நினைவில் இருந்ததை நீ கூறிவிட்டாய்

அது கேட்டு அன்னை வெட்கத்துடன் தலை குனிந்தாள்
உன்னைத் தினைப்புனம் காக்க அனுப்பவும் இல்லை

இனி என்ன செய்யப் போகிறாய்

குறிஞ்சி
சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
கொள்ளம்பக்கனார் பாடல்
வில்லாப் பூ Natrinai says 146

வில்லாப்பூ (எருக்கம்பூ) மாலை சூடிக்கொண்டு ஏமுறுவேன் (நிறைவு கொள்வேன்) 

பனைமட்டையால் செய்த குதிரையில் ஏறிக்கொண்டு ஊரில் திரிவேன்

கடமை உணர்ந்து நல்லாட்சி செய்யும் மன்னர் போல ஊரிலுள்ள மக்கள் "வெயில் மிகுதி, தண்ணென்ற மரநிழலில் சற்றே தங்கிச் செல்க" என்று அருளுடன் கூறுவர்

நான் நல்லவன் என்னும் சொல் அவள் வாயிலிருந்து வரவேண்டும்

 • அவள் எழுதிய ஓவியம் போலக் காணத் தகுந்த அழகினைக் கொண்டவள் 
 • ஐயள் (மென்மையானவள்) 
 • மாமை நிறம் கொண்டவள் 
 • இவற்றால் மயக்கி என்னை அணங்கியவள் (வருத்தியவள்) 


குறிஞ்சி
பின்னின்ற தலைவன்
முன்னிலைப் புறமொழியாக 
தோழி கேட்பச் சொல்லியது
கந்தரத்தனார் பாடல்

எருக்கம்பூ மாலை
காதலியை அடைய பனைமட்டைக் குதிரையில் ஏறி வருதல் ஒரு வழக்கம்
இவ்வாறு வருபவன் கழுத்தில் இது போன்ற எருக்கு மாலை அணிந்துகொள்வான்Monday, 29 October 2018

மாக்கொடி அடும்பு Natrinai says 145

மணல் மேட்டில் படரும் மாக் கொடி அடும்பு
அதன் மலர்களை மாலையாகக் கட்டிக் கொண்கன் மகளிர் கூந்தலில் அணியும்படிச் செய்வான்

இப்படி அவன் கேண்மை (நட்பு) ஐது (நுட்பமாக) ஏய்ந்தில்லா (பொருந்தாமல் பொருந்தி) இருக்கிறபோதே அவன் நம்மைப் புணந்தான் என்பது போலக் கூறித் தாய் என்னை அறநெறி இல்லாமல் வருத்துகிறாள்

தோழி
நீயும் உற்றுக் கேள்

இன்று இரவு நேரத்திலும் அவன் வரும் தேரின் மணியொலி நம் புன்னைமரச் சேரியில் கேட்கிறதே

நெய்தல்
இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாக 
தோழி வரைவுகடாயது
நம்பி குட்டுவன் பாடல்

மணல் மேட்டில் படரும் மாக்கொடி அடும்பு தமியர் நீந்தி Natrinai says 144

களிற்றை உழுவைப்புலி தாக்குவது கண்டு பிடி அஞ்சும்
இடி கேட்டு அரவம் அஞ்சும்
பிளந்த வாயுடன் பெண்புலி இரை தேடும்
இப்படிப்பட்ட வழியில் அவர் தனியே வருகிறார்

மணல் அறல் உண்டாகும்படி ஓடும் காட்டாற்று வெள்ளக் குழிகளை நீந்திக் கடந்து வருகிறார்
மலர் பொறித்திருக்கும் தோளராக வருகிறார்

இப்படி இவர் வருவது தெரியாதவர்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகப் பேதையேன் கண்கள் ஏதுமில்லா அச்சத்தில் கலுழ்கின்றன 

குறிஞ்சி
ஆற்றது ஏதத்திற்குக் கவன்று 
சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது
கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் பாடல்

விரவு மலர் பொறித்த தோளர் - பாடல் அடி
இவர் தோளில் ஒப்பனை மலர் பொறிக்கப்பட்டுளது
நீரில் நீந்தி வந்த தலைவன் தோளில் மலர் பொறிக்கப்பட்டிருந்ததாகப் பாடல் கூறுகிறதுஐது ஏகு அம்ம Natrinai says 143

என் மகள் விளையாடிய

 • மணல் முற்றம் 
 • தோழியருடன் ஓரை விளையாடிய நொச்சிச் செடி 

அகியவற்றைப் பார்க்கும்போதெல்லாம் என் கண்கள் அழுகின்றன

அவள் என்னைக் காட்டிலும் தன் கிளியை மேலான உறவாகக் கருதுபவள்
அதனால் குற்றம் ஒன்றும் இல்லை

ஊர்ப் பெண்டிர் அவளைப் பற்றி அலர் தூற்றினர்

அவள் கூந்தலில் தோன்றிய மணம் நன்றாக இருக்கிறது என்று அப்போதெல்லாம் பாராட்டிக்கொண்டிருந்தேன்

இப்போதுதான் தெரிகிறது அந்தக் கூந்தல்-மணம் அவன் உறவால் அவளுக்குத் தோன்றியது என்று

அவள் என்னை விட்டுவிட்டு அவனுடன் சென்றுவிட்டாள்

பாலை
மனை மருட்சி
கண்ணகாரன் கொற்றனார் பாடல்

இந்தக் கிளி அவளுக்கு
செவிலித்தாயைக் காட்டிலும் அதிக உறவாம்
பாடல் கூறும் செய்திபால் நொடை இடையன் Natrinai says 142

பெருமழை பொழிந்த கடைசி நாள்
பாட்டுப் பாடிக்கொண்டே பால் விற்கும் இடையன் அவன்

 • தன் தோளில் மாட்டியிருக்கும் உரியில் முன்பக்கம் பால் வைத்திருப்பான் 
 • பின் பக்கம் தொங்கும் தோல் கலப்பையில் (கலம் = கருவிகள் இடும் பையில்) தீ மூட்டும் ஞெலிகோல் வைத்திருப்பான் 

மழைத் தூறலில் நனைந்துகொண்டு
கையில் ஊன்றிய தடியுடன் நின்றுகொண்டு
வாயை மடித்து ஊதி இசை எழுப்புவான்

அந்த இசையைக் கேட்டு சிறுதலைத் தொழுதி (ஆடுகள்) ஏமார்ந்து (பாதுகாப்பில் இருக்கும் உணர்வோடு) இருக்கும்

இப்படிப்பட்ட முல்லை நிலத்து ஊரில்தான் என்னவள், மெல்லியல் குறுமகள், இருக்கிறாள்
இரவு நேரம் என்றாலும் விருந்து வந்தால் மகிழும் முல்லை சான்ற கற்புக் கொண்டவள் அவள்
அவளை அடைய விரைந்து தேரைச் செலுத்து

முல்லை
வினை முற்றி மீளும் தலைமகன் 
தேர்ப்பாகற்குச் சொல்லியது
இடைக்காடனார் பாடல்

சிறுதலைத் தொழுதி - (ஆட்டு மந்தை)குன்று உறை தவசியர் Natrinaன்றும்ays 141

அந்தச் சுரத்தில் யானை குன்றில் தவம் செய்யும் தவசியர் போலத் தோன்றும்

யானையின் கவுள்களில் (கன்னங்களில்) சேறு படிந்திருக்கும்
தவசியர் நீராடா மேனியுடன் தவம் செய்வர்

யானையின் தலையில் கொன்றைக் காய் உரசிக்கொண்டு தொங்கும்
தவசியர் சடாமுடியுடன் காணப்படுவர்

நெஞ்சே

இப்படிப்பட்ட சுரத்தின் வழியே செல்லுதல் உனக்கு எளிதாக இருக்கலாம்

நான் இவள் கூந்தலில் துயில்வதை விட்டுவிட்டு வரமாட்டேன்

 • இசை வெங் கிள்ளி யானைப்படைத் தலைவன் 
 • பாண்டில் (பாண்டியன்) ஒருவனைத் தன் அரிசில் ஆற்றங்கரையில் போரிட்டு வென்றான் 
 • அந்த அரிசில் ஆற்று அறல்-மணல் படிவு போன்ற கூந்தலை உடையவள் இவள்.  

பாலை
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் 
தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது
சல்லியங் குமரனார் பாடல்

தவசி சடைபோல் கொன்றைக் காய் - உவமை நலம்
 

பரிவிலாட்டி Natrinai says 140

அவள் பந்துடன் செல்கிறாள்
அவள் பரிவிலாட்டி (பரிவு இல்லாத பெண்)
கீழைக்காற்றால் பெய்த மழை
அவள் தன் ஐம்பால் கூந்தலைச் சந்தனக்கட்டைச் சீப்பால் வாரி முடித்திருக்கிறாள்
அவள் கூந்தலை அவளது தோழியர் பெரிதும் விரும்புகின்றனர்
தந்தையின் தேர் செல்லும் நிலாப் போன்ற மணலில் பந்துடன் செல்கிறாள்
அவள் எனக்கு அருள் புரிந்தாலும் சரி, அருள் புரியாவிட்டாலும் சரி
நெஞ்சே
அவளைப் பின் தொடர்ந்து செல்
என் காதல துயரம் போக்கும் மருந்து அவளைத் தவிர வேறு யாரும் இல்லை
தலைவன் இவ்வாறு தன் நெஞ்சை வேண்டுகிறான்

குறிஞ்சி
குறை மறுக்கப்பட்ட தலைவன் 
தன் நெஞ்சினை நெருங்கியது
பூதங் கண்ணனார் பாடல்

கூந்தலை வாரும் சீப்பு
கட்டைச் சீப்பு
படல் சந்தனக் கட்டையில் செய்யப்பட்ட சீப்பைக் குறிப்பிடுகிறதுஉலகிற்கு ஆணி Natrinai says 139

உலகம் என்னும் தேர் ஓட அச்சாணியாணியாக இருப்பது மழை
மேகம் குன்றில் ஏறிக் குளிர்ந்து மழை பொழியும்
யாழில் படுமலைப்பண் ஒலிப்பது போன்ற ஓசையுடன் மழை பொழியும்
முழவு முழங்ககுவது போல இடிக்கும்

மழையே

இன்று நீ இரவெல்லாம் பொழிந்திருக்கிறாய்
என்னவள் கூந்தலில் கிடந்து அவளை நுகர்ந்த இரவு முழுவதும் பொழிந்திருக்கிறாய்
மலர் தூவி வாழ்த்துவது போல மலர்கள் கொட்டும்படிப் பொழிந்திருக்கிறாய்

நீ வாழ்க 
தலைவன் இவ்வாறு மழையை வாழ்த்துகிறான் 

முல்லை
தலைவன் வினைமுற்றி வந்து 
பள்ளி இடத்தானாக 
பெய்த மழையை வாழ்த்தியது
பெருங்கௌசிகனார் பாடல்
Sunday, 28 October 2018

விழவாடு மகளிர் Natrinai says 138

அவன் துறைவன்

உவர் நீரில் விளைவித்த உப்பைக் குன்று போல் குவித்து சுமந்து சென்று விற்றுப் பிழைக்கும் நிலையில்லாத வாழ்க்கை உடையவர் உமணர்

அவர்கள் உப்பு ஏற்றிச் செல்லும்போது  ஒடிந்து கிடக்கும் வண்டியின் பழைய பார் மரத்துக்கு அடியில் குருகு முட்டையிட்டு வாழும் இடம் அவன் துறை

அந்தத் துறைவனுடன் சேர்ந்து பறித்த நெய்தல் மலரால் புனைந்த தொடலை (தழையாடை) அணிந்துகொண்டது உண்டு

இதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் அவனோடு எனக்கு இல்லை

இழை அணிந்துகொண்டு மகளிர் சீர்ப் பண்ணிசையுடன் ஆடும் ஆட்டத்தில்-கூட நான் ஆடவில்லை

நெய்தல்
அலர் ஆயிற்று என ஆற்றாளாய தலைமகட்குத் 
தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
அம்மூவனார் பாடல்


துணங்கை - சீர் ஆட்டம்

சீர் ஆட்டம் 


அல்கு நிழல் ஓமை Natrinai says 137

தலைவன் தன நெஞ்சோடு பேசுகிறான்

அவள் மணம் கமழும் கூந்தலை உடையவள்
அகன்ற தோளை உடையவள்
நல்லவள்

நெஞ்சே

அவளைப் பிரிய எண்ணினாயானால்
களிறு தன் பிடிக்கு ஓமை மரத்தை ஒடித்து உண்ணச் செய்வதைக் கண்டு இவளை நினைக்க வேண்டி வரும்

அந்த ஒமை மரம் நிழல் தரும் சுரத்தின் வழியில் சென்று துன்புற வேண்டியிருக்கும்

இது தேவையா

பாலை
தலைவன் செலவு அழுங்கியது
பெருங்கண்ணனார் பாடல்

ஓமை மரம்பொலந்தொடி செறீஇயினான் Natrinai says 136

அவன் பலைகெழு நாடன்
என் வள்ளையல் அவனை நினைத்துக் கழல்கிறது

நோய் உற்றவருக்குக் கொடுக்க வேண்டிய உணவைக் கொடுக்காமல்
மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் அறவோன் (மருத்துவன்) போல

அவன் எனக்குப் பொன்-வளையல் கொண்டுவந்து  போட்டுவிட்டான்

இது தோள் பழியை மறைக்க அவன் செய்த  வழி

என்னை (என் மூத்தவளே, தோழியே) 
வாழிய பல

அவனுக்கும் எனக்கும் தலைப்பிரிவு உள்ளமையை உணர்ந்தவன் போல அவன் செய்தான்.

குறிஞ்சி
சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது
நற்றங் கொற்றனார் பாடல்

வளையல் போட்டுவிட்டான்தூங்கல் ஓலை Natrinai says 135

தொங்கும் ஓலைகளைக் கொண்ட பனைமரம்
அதனை உடைய முற்றம்
அங்குக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தாரம் (பிறருக்குத் தரும் பொருள்கள்) 
இவற்றை விருந்தினர்க்கு வழங்கும் நம் குடும்பம் இருக்கும் சிற்றூர்
இவை நமக்கு மிகவும் இனிமையாக இருந்தன

எப்போது

அவன் நாம் இருக்கும் திரை முழங்கும் மணல்-பரப்புக்கு, குதிரை பூட்டிய அவன் தேரில் வந்து, உன்னைப் பார்த்துச் சிரிப்பதற்கு முன்பு

இப்போது?

நெய்தல்
வரைவு நீட்டிப்ப 
அலர் ஆம் எனக் கவன்ற தோழி 
சிறைப்புறமாகச் சொல்லியது
கதப்பிள்ளையார் பாடல்

தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணைஇனிப்புக்கு இனிப்பு Natrinai says 134

இனிமையில் இனிமை தோன்றும் என்பார்கள்
அது இதுதானா தோழி

நம் மலை வயலில் தினை விளைந்திருக்கிறது
நீங்கள் உங்களது தட்டைகளை எடுத்துக்கொண்டு சென்று அவற்றைப் புடைத்துத் தினை உண்ண வரும் கிளிகளை ஓட்டுங்கள் - என்று தாய் தந்தையர் கூறுகின்றனர்

தாய் தந்தையர் புன்னகை பூக்கும் பல்லைக் காட்டிக் கூறுகின்றனர்
நான் - அது முடியாது - என்பது போல் அவர்களிடம் உரையாடுகிறேன்.

இது அவர் உறவுக்குத் தரும் இனிப்பு
இனிப்புக்கு இனிப்பு

குறிஞ்சி
இற்செறிப்பார் என 
ஆற்றாளாய தலைவியை 
அ·து இலர் என்பது பட 
தோழி சொல்லியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

தட்டைகொல்லன் உலையில் தெளித்த நீர் Natrinai says 133

என் தோளில் வளையல் நிற்கவில்லை
வாளைப் போல் மின்னும் என் ஈரக் கண்களில் வடிவழகுப் பொலிவு இல்லை
நெற்றி பசலை பாய்ந்துள்ளது

திதலை விம்மிதம் கொண்ட அல்குல்
மணி நிற ஐம்பால் கூந்தல்
ஆகியவற்றைக் கொண்ட மாயோளுக்குக் (எனக்குக்) கௌவை தூற்றுவதற்கென்றே வெவ்வாய்ப் பெண்டிர்  உள்ளனர்

நிலைமை இப்படி இருக்குபோது
என்னை விரும்பும் தோழியே
நீ
அவர் துன்பம் செய்யவில்லை என்கிறாய்

உன் ஆறுதல் மொழி எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா
கொல்லன் பட்டறையில் துருத்தி ஊதும்போது சில வேளையில் தீ கொளுந்து விட்டு எரியும்
உலையில் காயும் இரும்பை எடுக்கும்போது தீ அடக்குவதற்குக் கொல்லன் அந்தத் தீயில் நீரைத் தெளிப்பான்
தெளித்த நீர் சற்றே தீயைத் தணித்துவிட்டு ஆவியாகப் போய்விடும்
கொல்லன் உலைத்தீயில் தெளிக்கும் நீர் போல் உன் சொற்கள் உள்ளன

குறிஞ்சி
வரைவிடை வைத்துப் பிரிவு ஆற்றாளாய தலைவி 
வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது
நற்றமனார் (நற்றாமனார்) பாடல்

கொல்லன் உலைத் தீபல் பூஞ் சேக்கை Natrinai says 132

பேரூரில் யாரும் உறங்கவில்லை

சுறாமீன் வாயிலிருந்து நீரைப் பாய்ச்சுவது போல
தெருவில் காற்றுடன் மழை பொழிகிறது
அது சாரலாகக் கதவில் வீசுகிறது

எகினம் என்னும் அன்னப் பறவை கூரிய பற்கள் கொண்டது
அது குளிரில் நடுங்கிச் சிறகுகளை உதறும்போது விழும் இறகுகளைத் திணித்துப் பல அடுக்குகளாகச் செய்து விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் நான் கிடக்கிறேன்

சுற்றிலும் எனக்குக் காவல்
இது யாம நேரம் என்பதை அறிவிக்க அடிக்கும் மணி-ஓசை கேட்கிறது

அவர் இல்லை
தனிமையில் கிடக்கிறேன்

இன்றுதான் எனக்குச் சாகும் நாளோ
இப்படிப் பிதற்றும் தலைவியைத் தோழி தேற்றுகிறாள்

நெய்தல்
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் 
தோழி சொல்லியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

குளிர் நாட்டில் உள்ள மெத்தைகளில் திணிக்கப்பட்டிருக்கும்
அன்னத் தூவி இங்குக் காட்டப்பட்டுள்ளது
சங்க கால மக்கள் இது போன்ற
அன்னத் தூவி திணிவு மெத்தையைப் பயன்படுத்தினர் என்று
இந்தப் பாடல் குறிப்பிடுகிறது


பொறையாறு அன்ன தோள் Natrinai says 131

உயர் மணல் சேர்ப்ப

இவள் உன்னோடு
விளையாடிய தொழில்
தங்கியிருந்த பொழில்
ஆசை கொண்ட உயவு நெஞ்சம்

இவற்றில் ஊடல் பிணக்கு எங்களுக்கு இருக்குமா

முள் இருக்கும் தாழை மடலில் குருகு இரைக்காக அமர்ந்திருக்கும் துறை பொறையாறு
இது பெரியன் ஆளுகைக்கு உட்பட்ட துறை
இந்தத் துறை போல் தோள் அழகு கொண்டவள் இவள் (என் தலைவி) 
இவளை நீ மறக்க முடியுமா

நெய்தல்
மணமனையில் 
பிற்றை ஞான்று புக்க தோழியைத் 
தலைவன் 
வேறுபடாமை ஆற்றுவித்தாய் பெரியை காண் 
என்றாற்குத் 
தோழி சொல்லியது
உலோச்சனார் பாடல்

சுறாப் பல் போல - தாழை மடலில் முள் - உவமை நலம்இனியது உண்டோ Natrinai says 130

இந்த ஊரில் வாழும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது வேறு உண்டோ

இது வடு இல்லா வாழ்க்கை
நிறைவுற்ற வாழ்க்கை
குதிரை பூட்டிய தேரில் செல்லும் வாழ்க்கை
கோலால் எறியும் தண்ணுமை முழக்கத்துடன் தேரில் செல்லும் வழ்க்கை
கடலில் பாடுபடும் வாழ்க்கை
தமது செய் வாழ்க்கை
இதைக் காட்டிலும் இனியது வேறு உண்டோ

வேறு எந்த விருப்பம் உடையவர் ஆயினும்
அவர் நினைவின்றிச் செயல்படுகிறார்

அவருக்கு உன்னை நேர்ந்த நெஞ்சம்
அவர் நினைவால் நெகிழும் தோள்
வாடும் அல்குல் வரி
ஆகியவற்றுடன் துன்புறுவாளே - என்று ஒருநாள்-கூட அவர் கூறில்லையே

பிரிவுத் துன்ப-நோய் நிலவுலக அளவை விடப் பெரிதாயிற்றே

நெய்தல்
பிரிவிடை மெலிந்த தலைவி 
வன்புறை எதிரழிந்து சொல்லியது
(வன்புறை = வற்புறுத்தல்)
நெய்தல் தத்தனார் பாடல்
Saturday, 27 October 2018

பெரு நகை கேளாய் Natrinai says 129

தோழி
இதனைக் கேள்
சிரிப்பாக  வருகிறது

காதலர் ஒரு நாள் வராமல் இருந்தாலும்
பொம்மல் ஓதி - ஆகிய நீ
உயிரே போய்விடுவது போல் வேறுபடுவாய்

அப்படி நீ இருக்கும்போது உன்னை விட்டுவிட்டுப் பொருள் ஈட்டும் வினை மேற்கொண்டு அவர் செல்வாராம்

அவர் திரும்பி வரும் வரையில் நீயும் நானும் வாழ வேண்டுமாம்

பாம்பே நடுங்கும்படி இடி இடிப்பதைக் கூடக் கேட்டுக்கொண்டே யாமத்தும் அச்சமின்றி இருக்க வேண்டுமாம்

கேட்டால் சிரிப்பு வருகிறது

குறிஞ்சி
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி 
தலைமகளை முகம் புக்கது
(தலைமகளுக்குத் தெரிவித்தது)
ஒளவையார் பாடல்
பகல் எரி சுடர் Natrinai says 128

ஆயிழை, தோழி
ஆன்றிசின் (பொறுத்துக்கொள்) 

பகல் ஒளியில் தோன்றும் விளக்கின் சுடர் போல் உன் மேனி ஒளி மங்கிக் கிடக்கிறது

பாம்பு கௌவிய கிரகண நிலாப் போல உன் நெற்றி ஒளி இழந்து காணப்படுகிறது

இதன் காரணத்தை நீ எனக்குச் சொல்லவில்லை

நான் உன் உயிரைப் பகிர்ந்துகொண்டு வாழ்பவள்
அதனால் காரணத்தை நான் கண்டிசின் (தெரிந்துகொண்டேன்) 

நாம் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்தபோது அவன் வந்தான்
கண்ணி, கழல், தார் அணிந்திருந்தான்
உன்னை முதுகுப் பக்கமாக அணைத்தான்

அந்த உணர்வு-நோய் உன்னை வருத்துகிறது.
அவர் திரும்பவும் வருவார்

குறிஞ்சி
குறை நேர்ந்த தோழி 
தலைவி குறை நயப்பக் கூறியது
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்
நற்சேந்தனார் பாடல்


சுடர் - சுடர் விளக்கு - இரவில் எரியும் சுடர் - படம்
பகல் ஒளியில் எரியும் சுடர் - பாடல்மெல்லம் புலம்பன் Natrinai says 127

நாரை கானல் கழியில் இறா மீனை மேயும்
அந்தக் கழியில் நான் என் ஈனாப் பாவையைக் கிடத்திக்கொண்டிருக்கிறேன்
அதனைத் தலையீடாக்கி (சாக்கு வைத்து) மெல்லம் புலம்பன் வரலாம்
அங்கு அவன் வரவில்லை
இங்கு நீ வருகிறாய்
இறா மீன் இருக்கும் நீரலை போல் மொய்க்கிறாய்
என் பாக்கத்துக்கு வந்து பும்பனை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாய்
இங்கு என் ஐயர் (தந்தை, தமையன்) உள்ளனர்
அவர்கள் கல்லாக் கதவர் (காரணமின்றிச் சினம் கொள்பவர்) 
சென்றுவிடு
நெய்தல்
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
சீத்தலைச் சாத்தனார் பாடல்

இறா - இறவு - இந்த மீனின் பண்டைய தமிழ்ப் பெயர்
இதனை இக்காலத்தில் இறால் என்றும் வழங்குகின்றனர்இளமை கழிந்த பின்றை Natrinai says 126

வெண்மையான புறத்தோற்றம் கொண்ட களரி நிலம்
காய் சிவப்பாகவும், பழம் கருப்பாகவும் இருக்கும் ஈந்து முள் காடு (ஈச்ச-முள் காடு) 
களிற்றியானை புழுதி படிந்து ஆடித் திரியும் காடு
புதியவர்கள் யாரும் நடமாடாத காடு
பனைமர நிழல் மட்டுமே இருக்கும் காடு
இதன் வழியில் செல்ல நினைக்கிறாய்

இளமையைக் காட்டிலும் சிறந்த வளம் இல்லை
இளமை கழிந்த பின்றை இருக்கும் பொருள்-வளம் காம இன்பம் தருவதும் இல்லை.

அதனால்
நெஞ்சே

நிலையில்லாத பொருளை நாடிச் செல்கிறாய்
உன் செயலாளுமை வெற்றி பெறுவதாகுக

பாலை
பொருள் வலித்த நெஞ்சினைத் 
தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

ஈந்து
ஈச்சம் பழம்
பிஞ்சு - வெள்ளை நிறத்
காய் - சிவப்பு நிறம்
பழம் - கரு நிறம்எண்கின் ஏற்றை Natrinai says 125

ஆண் கரடி கறையான் உணவுக்காகப் புற்றைக் கிண்டும்போது புற்றிலிருக்கும் பாம்பு வெளியில் வந்து சீறும்

பாம்பு சீறும் ஓசை கொல்லன் உலைக்களத்தில் துருத்தி காற்றை ஊதும் ஓசை போல் கேட்கும்

இப்படிப்பட்ட நள்ளிரவில் நீ வருவதை எண்ணி நாங்கள்  அஞ்சுகிறோம்
எனவே இவளைத் திருமணம் செய்துகொண்டு இவளுடனேயே வாழுமாறு வேண்டுகிறோம்

என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டால் அவர் நம் மலைக்கு வந்து திருமணம் செய்துகொண்டு அழைத்துச் செல்வார்

உழவர் வேங்கைப் பூ சூடிக்கொண்டு, வயல் பாசறையில் நெல்லம்போர் அடுக்கும் இடத்தில் யானைகள் உறங்கும் பெருங்கல் நாடு நம் நாடு

இங்கு வந்து திருமணம் செய்துகொள்வார்

குறிஞ்சி
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைத் 
தோழி வற்புறுத்தியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கரடி கறையான் உணவுக்காகப் புற்றைக் கிண்டும்முகை வீ அதிரல் Natrinai says 124

அவர் பற்றுக்கோடு இல்லாத காலத்தில்
துணை இல்லாத அன்றில் பறவை புலம்புவது போலப் புலம்பிக்கொண்டு
வாழ்வதென்பது என்னால் முடியாது

அதனால்
ஐய
நீங்காமல் என்னோடு வாழவேண்டும்

மணல் மேட்டில் அதிரல் பூக்கள் மலரும்
நவ்வி-மான் கால் ஊன்றிய காலடிப் பள்ளத்தில் நீர் தேங்கி நிற்கும்
அந்த நீரில் நீர்க் குமிழிகள் தோன்றும்
வெள்ளியை உருக்கும் மண் பாத்திரத்தில் வெள்ளிக் குமிழிகள் தோன்றுவது போல அந்த நீர்க் குமிழிகள் தோன்றும்
அந்த நீர்க் குமிழிகள் தோன்றுவது போல அதிரல் மலர்கள் பூக்கும்

அப்படி அதிரல் மலரும் காலத்தில் 
அவர் இல்லை என்று 
அதனைப் பறித்துச் சூடிக்கொள்ளால்  
நொந்துகொண்டு என்னால் வாழ முடியாது

நெய்தல்
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி 
தலைவற்கு உரைத்தது
மோசி கண்ணத்தனார் பாடல்

அதிரல் கொடி மலர்
தேங்கிய நீரில் நீர்க் குமிழிகள் தோன்றுவது போலப் பூக்கும்
கலத்தில் வெள்ளி உருகுவது போல அதிரல் பூக்கும் சிறு விளையாடல் Natrinai says 123

அலவன் (நண்டு) விளையாடுவதை வேடிக்கை பார்ப்பது ஒரு சிறுவிளையாட்டு

இரை உண்ட குருகு கூட்டில் உறங்கும் காலை வேளையில்
பறித்த காவி மலரும்
அதன் பகையான நிலத் தழையும்
சேர்த்துக் கட்டிய தழையாடை அணிந்துகொண்டு
கடற்கரை மணலில் சிற்றில் கட்டி விளையாடும்போது
அங்குள்ள கண்டல் மரம் இருக்கும் சேர்ப்பு நிலத்தில்
நண்டுகள் ஓடியாடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பாய்

இப்போது நீ விளையாடவில்லை
நோய் கொண்ட உள்ளத்துடன் காணப்படுகிறாய்

தோழி,
என்ன காரணம்
எனக்குச் சொல்
தோழி தலைவியை இவ்வாறு வினவுகிறாள் 

நெய்தல்
தலைவன்சிறைப்புறத்தானாக 
தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது
காஞ்சிப் புலவனார் பாடல்

கண்டல் மரம்பொருந்துமாறே Natrinai says 122

என் ஐயர் (தந்தை, அண்ணன்) உழுது விதைத்த மலையடுக்கத்தில் தினை காக்கும் காலமும் உண்டு.

இதனை உணர்த்தும் அறிகுறியாக, நம் கல்ல வெற்புச் சிறுகுடியில் மௌவல் பூக்கள் அரும்பு விட்டிருக்கின்றன.

நள்ளிருளில் நரைநிற மேகங்கள் இடி முழங்கும் நேரத்தில் வரையக நாடன் வருவானோ என்று அன்னை நினைத்துக்கொண்டு விருப்பம் இல்லா முகத்துடன் மறைந்து மறைந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்

அவரோ இரவில் வந்திருக்கிறார்
மலர் சூடிய மகளே, என்ன செய்வது என்று பொருத்தமாக நீதான் தீர்மானிக்க வேண்டும்

குறிஞ்சி
சிறைப்புறமாகத்
தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் 
தலைவன் கேட்பச் சொல்லியது
செங்கண்ணனார் பாடல்

மௌவல் = மரமல்லி
தினை கதிர் விடும் பருவத்தில் அரும்பும் மலர் ஈர் இலை வரகு Natrinai says 121

விதை வைத்திருப்பவர் முதையல் (வளம் முதிர்ந்த நிலம்) புழுதியில் விதைக்க, ஈர்க்கு போன்ற இலை கொண்ட வரகுப் பயிர் வளரும்
அதனைக் கறித்துக்கொண்டு அழகிய பிணை-மான் தன் அரலைக் காட்டு இரலை ஆண்-மானோடு மகிழ்ந்திருக்கும்
அப்படிப்பட்ட ஊர் நீ விரும்புபவள் வாழும் ஊர், என்பது அறிவேன்

வேந்தன் போரை நிறுத்திவிட்டான்
உன் தலைமாலை கண்ணி வாழ்க

இதோ  குதிரையைத் தேரில் பூட்டுகிறேன்
அது காட்டாற்று மணலைக் கடந்து செல்லும்
இன்று பகலிலேயே உன் மனைவி தோள் தரும் விருந்தினைப் நீ பெறலாம்

முல்லை
வினை முற்றி மறுத்தரும் தலைமகற்குத் 
தேர்ப்பாகன் சொல்லியது
ஒருசிறைப் பெரியனார் பாடல்


வரகு - ஈர் இலை வரகு


Friday, 26 October 2018

அட்டிலோளே Natrinai says 120

ஒவ்வொரு தூணிலும் எருமைக் கன்று கட்டப்பட்டிருக்கும் கறவை எருமைகள் நிறைந்த இல்லம் அது

அந்த மனையின் தலைவி, என் மனைவி, மோதிரம் அணிந்த தன் கைவிரல்களால் வாளை மீனை அரிந்து சமைக்கும்போது கண்ணில் புகை படும்.
நெற்றி வியர்க்கும்

அந்த வியர்வையைத் தன் முன்றானையால் துடைத்துக்கொள்வாள்

இப்படிச் சமைத்துக்கொண்டிருக்கும் அட்டிலோளை (அட்டில் = சமையல்-கட்டு) நான் காண வண்டும்

விருதினரைக் கண்டதும் அவள் முகம்  மலர்வதை நான் காணவேண்டும்

புகை பட்டுச் சிவந்த கண்ணையும், புன்னகை பூக்கும் பல்லழகையும் நான் காண வெண்டும்

மருதம்
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது
மாங்குடி கிழார் பாடல்

எருமைக் கன்றுகள் பெருங் கல் அடாஅர் Natrinai says 119

தினை விளைச்சலை மேய வரும் பன்றியை வீழ்த்துவதற்காகப் புனவன் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி நிறுத்திப் பொறி வைத்திருப்பான்

அந்தப் பொறியில் வரிப்புலி விழுந்து மாட்டிக்கொள்ளும் நாடன் அவன்
அவன் என்னை அடைந்து நிறைவு கொள்ள வந்திருக்கிறான்

முசு, கலை, வருடை ஆகியவை துள்ளி விளையாடிக்கொண்டு மேயும் மலர்க்காட்டு ஆற்றைக் கடந்து வந்துள்ளான்

அவனை நான் தழுவ மாட்டேன்
அவனோடு புலவிப் பிணக்குப் போட்டுக் கொள்வேன்

குறிஞ்சி
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது
பெருங்குன்றூர்கிழார் பாடல்

வருடை ஆடுகள்
முசுக்குரங்கு, கலைமான்கள் ஆகியவற்றோடு சேர்ந்து வருடை ஆடுகள் துள்ளி விளையாடும் என்று பாடல் கூறுகிறது நொதுமலாட்டி Natrinai says 118

ஓவியம் தீட்டும் ஓவ-மாக்கள் துகிலிகை போல மலர்வது பாதிரி மலர்
வண்டு மொய்க்கும் புத்தம்புது பாதிரி மலரை சுமந்துகொண்டு அவள் தெருத் தெருவாக விற்கிறாள்

அவள் நொதுமலாட்டி
அந்தப் பூவை வாங்கிச் சூடிக்கொள்ள  எனக்கு ஆசை

மாஞ்சோலையில் ஆண் பெண் குயில்கள் ஒன்றை ஒன்று அழைத்துக் கூவிக்கொண்டிருக்கும் காலத்திலும் அவர் வரவில்லையே
என்ன செய்வேன்

பாலை
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

புதுமலர் தெருவுதொறும் நுவலும் நொதுமலாட்டி - பாடல்
பூ விற்கும் புதியவள் - படம் - இக்காலம்Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி