Sunday, 2 September 2018

வினைமுடித்து வருதும் Agananuru says 175

பாலை
ஆலம்பேரி சாத்தனார் பாடல்
பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்;

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.

தோழி!
''வினைமுடித்து வருதும்'' என்றனர் அன்றே 
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே

  • பிழை இன்றி அம்பு எய்யும் ஆடவர் வழியில் செல்லும் வம்பலர் (புதியவர்) உயிரைக் கொல்வர் 
  • பருந்தினம் அவர் உடலைத் தின்னும் 

இப்படிப்பட்ட வெஞ்சுரத்தைக் கடந்து சென்ற காதலர் 

  • நம் நெஞ்சம் நம்புமாறு வஞ்சினம் கூறி 
  • வளையல் கையைப் பற்றிக்கொண்டு 

மழைக்காலம் வந்ததும் வினையை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன் என்று சொன்னார் அல்லவா 

தோழி

கைவண் செழியன் (தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்)
தேரில் சென்று ஆலங்கானத்தில் போரிட்டான் 

  • அவன் வேல் போல் வானம் மின்னுகிறது 
  • அவன் முரசு போல் இடி முழங்குகிறது 
  • அவன் மாலை போல் வானவில் தோன்றுகிறது 

மண் பயன் பூக்கும்படி மழை பொழிகிறது 
இப்படிப் பொழியும் காலத்தில் வந்துவிடுவேன் என்றாரே 

அவர் சொல் என்ன ஆயிற்று 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி