Saturday, 1 September 2018

மெல்விரல் சேர்த்திய நுதலள் Agananuru says 169

பாலை
தொண்டியாமூர்ச் சாத்தனார் பாடல்

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

நான் இங்கே இருக்கிறேன்

  • மரம் கரிந்துள்ளது 
  • வெயில் சுட்டெரிக்கிறது 
  • புலி யானையை வீழ்த்தி உண்ட மிச்சத்தில் மறவர் உப்புக்கண்டம் போட்டுக்கொண்டனர் 
  • உப்பு விற்கச் செல்லும் உமணர் மீதம் கிடக்கும் கறியை ஞெலிகோலில் (சூட்டுக் கோலில்) மாட்டி சோற்றோடு உலையில் இட்டுச் சமைத்து உண்கின்றனர் 

இப்படிப்பட்ட காடுகள் பலவற்றைக் கடந்து வந்துள்ளேன்

அங்கே

அவள் மாலையில் தனிமையில் வருந்திக்கொண்டிருப்பாள்
விரல்களை நெற்றியில் முட்டுக் கொடுத்துக்கொண்டு கவலையுடன் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பாள்
கயல் மீன் உமிழும் நீர் போல அவள் கண்ணீர் வரும்


மெல்விரல் சேர்த்திய நுதலள்
படம் - மெல்விரல் சேர்த்திய சிந்தனை
பாடல் - மெல்விரல் சேர்த்திய கவலை

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி