Sunday, 30 September 2018

புரையோர் கேண்மை Natrinai says 1

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர்
காலம் காலமாக இனியவர்
என்றும் என் தோளைப் பிரியத் தெரியாதவர்
நீரில் பூக்கும் தாமரையில் தேனை எடுத்து
மலை உச்சியில் இருக்கும் தேன் கூட்டில் தேனைத் தேனீ சேமிப்பது போல
உயர்ந்தவர் நட்பு உயர்ந்தது-தான்
நீர் இல்லாமல் உயிரினம் வாழ முடியாதது போல
அவர் இல்லாமல் வாழ முடியாத என்னை நயந்து அருள்பவர்
அவர் பிரிவுக்கு அஞ்சி என் நெற்றி பசக்குமாறு சிறுமை செய்வாரா
அவருக்குத் துன்பம் செய்யத் தெரியாது

He will keep his words
He will be sweet for ever
He will never part my shoulder
Bee will take honey even in lotus-flowers in low level and save in high mountain
His friendship is great as bee and he is the man of great
The world-beings cannot live without water
So, I cannot  survive without him and so he will bestow me
Will he leave my fore-head suffer on love-sick?
He does not know to do so

நின்ற சொல்லர்;
நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே''
தாமரைத் தண் தாது ஊதி,
மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;    5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ?
செய்பு அறியலரே!

கபிலர் பாடல் 
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

வேத முதல்வன் Natrinai Invocation

அவனுக்கு நிலம் காலடி
கடல் உடுத்தியிருக்கும் ஆடை
விசும்பு உடல்
திசை கைகள் 
கதிரவனும் நிலாவும் கண்கள் 
இவற்றால் செய்ய முடியும் அனைத்தையும் செய்து தன்னுள் அடக்கிக்கொண்டு 
வேத முதல்வனாக 
தீது செய்யாத திகிரிச் சக்கரத்துடன் அவன் விளங்குகிறான் 
அவனை வணங்குவோம்

His
feet are earth
dresses are ocean
body is shy
hands are directions
sun and moon are eyes
he creates every things within him
he is the aims of Vedas
he appears with his action wheel
we worship Him 

மாநிலம் சேவடி யாகத் 
தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக
விசும்பு மெய்யாகத் 
திசை கையாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற வெல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே.

நற்றிணை
பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடல்
நற்றிணை நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்ட பாடல் 

திகிரியோன்

நகை நன்று அம்ம Agananuru says 400

நெய்தல்
உலோச்சனார் பாடல்
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, 
தோழி தலைமகட்குச் சொல்லியது.

வீட்டில் இல்லாமல் வெளியிடத்தில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அலர் தூற்றுவது எனக்குச் சிரிப்பாகத்தான் இருக்கிறது 

பலர் விரும்பி நூல்-நெறி வழக்கத்தில் நல்வினை (திருமணம்) செய்துகொள்ள, நான்கு குதிரை பூட்டிய தேரில் வலவன் ஓட்டிவர, மெல்லம் புலம்பன் கடற்கரைக்கு வந்துள்ளான் 

அவனிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அலர் தூற்றுகின்றர் 


தோழி & தலைவி

திருகுபு முயங்கல் Agananuru says 399

பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்
தலைமகன் பிரிவின்கண் 
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

சாந்து பூசி மணக்கும் உன் கூந்தல்
நல்ல நுதல்
வாயில் ஊறும் அமிழ்தம்
இவற்றைக்
காதலோடு
திருகுபு முயங்கல் \ திரும்பத் திரும்பத் தழுவிச் சுவைத்தல் 
இல்லாமல்
பிரிந்திருக்கும் அவர் காலம் நீட்டிக்க மாட்டார்

ஆனிரை
கணிச்சியால் உடைத்து அமைக்கப்பட்ட கூவலில் நீர் உண்டு
கழுத்து-மணி ஒலிக்க
வறண்ட நிலத்துக்குச் செல்வதைத் தடுக்க,
நிழலில் இருக்கும் கோவலர் குழல் ஊதுவர்

அந்தக் குழல் இசையைக் கேட்டுக்கொண்டு
நெல்லிக்காய்களை மேய்ந்துகொண்டிருக்கும் மரைமான் கூட்டம் மகிழும்

அப்படிப்பட்ட மலை வழியில்-தான் அவர் சென்றுள்ளார்
வந்துவிடுவார்
வருந்தாதே


குழல் ஊதல்

கொன்றை ஊழுறு மலர் Agananuru says 398

குறிஞ்சி
இம்மென்கீரனார் பாடல்
பாடலில் 
இம்மென்று, என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளமையால் 
இவர் இம்மென்கீரனார் என்னும் பெயர் பெற்றுள்ளார்.
காமம் மிக்க கழி படர் கிளவியால், 
வரைவிடத்துக்கண், 
தலைமகள் 
தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, 
சொல்லியது.


கொன்றை மலர் உதிர்ந்து கிடப்பது போல் மேனி பசலை படர்ந்திருக்கும் காலத்தில் அவன் அருள் செய்யவில்லை 

என் கண் மயங்கிக் கண்ணீர் வடிக்கிறது 

அந்தக் குன்றுகெழு நாடனுக்கு எப்படி இருக்குமோ 

அவன் நொதுமலாளன் 

அவன் மலையிலிருந்து ஆறு பாய்ந்து வருகிறது 

அவன் கண்ணோட்டம் இல்லாமல் நொதுமலாளனாக இருப்பதால் ஆறு மலர்களால் தன்னைப் போர்த்திக்கொண்டு நாணத்தோடு வருகிறது

அதனிடம் தலைவி வினவுகிறாள் 

நொதுமலாளன் வரையிலிருந்து வரும் ஆறே!
மழை பொழிந்த வளத்துடன்
ஆரியர் பொன்படு நெடுவரை போல
இருக்கும் என் தந்தையின் கானில் தங்கிச் சென்றால் உனக்குக் குறை என்ன வரப் போகிறது

புலி பொருது புண் பட்ட களிறு
தன் பிடி யானையைத் தழுவிக்கொண்டு
மூங்கில் ஒன்னறோடொன்று உரசிக்கொண்டு ஒலிப்பது போல் ஒலிக்கும் 
மலை வழியில் வருகிறாயே

தங்கிச் செல்லக் கூடாதா


நொதுமல்
அயலார்

துனைவெங்காளை Agananuru says 397

பாலை
கயமனார் பாடல்
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

என் மகளின் மடமை (அறியாமை) பண்பினை நான் பாராட்டுவேன் 
தாயாகிய என் செம்மாப்புக்கு ஏற்ப அவள் நடந்துகொள்வாள் 
அவன் துனை வெம் காளை \ துடிக்கும் துடுக்குத்தனம் கொண்ட காளை போன்றவன் 

 • விடியலில் திருமணம் செய்துகொண்டு அழைத்துக்கொண்டு செல்லவில்லை 
 • மழைக்காலம் அவள் நடந்து வர உகந்த காலம் என்று பார்க்கவில்லை 
 • கடுங் கோடையில் அழைத்துச் சென்றுள்ளான் 
 • யானைகள் போரிட்டுக் கொண்டு இறந்து கிடப்பதை உண்ணக் கழுகு ஓமை மரத்தில் காத்திருக்கும் 
 • அந்த ஓமை மரங்கள் கோடைக் காற்றில் சலசலக்கும்  
 • மூங்கில் நெல் கொட்டும் 
 • வழியில் அழைத்துச் சென்றுள்ளான் 
அகநானூறு 397

மூங்கில் நெல்

வடவரை வணங்கு வில் பொறித்து Agananuru says 396

மருதம்
பரணர் பாடல்
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது.

மகிழ்ந
உன்னை நான் என் வீட்டை விட்டுப் போகாதே என்று கட்டுப்பாடு செய்து வைத்திருக்கிறேன்

புனல்-நாட்டைப் பொலம்பூண் நன்னன் கைப்பற்றிக்கொண்டான் 
அந்நாட்டு மக்களை அஞ்சவேண்டாம் என்று சொல்லி ஆய் எயினன் காப்பாற்றச் சென்றான் 
நன்னன் படைத்தலைவன் மிஞிலி என்பானை எதிர்த்துப் போரிடும்போது எயினன் மாண்டான் 
ஆய் எயினனுக்கு நேர்ந்த நிலைமை வந்துவிடக் கூடாது 

என்னை விட்டுப் பிரியமாட்டேன் என்று கடவுள் முன்னிலையில் சூள் உரைத்தாய் 
இப்போது மற்றொருத்தியிடம் சென்றுவிட்டு வந்திருக்கிறாய் 

ஆதிமந்தி கண்ணீர் விட்டு அழ, காவிரி என்பவள் ஆட்டன் அத்தி நீச்சல் நடன வீரனை வஞ்சகமாகக்  கொண்டு சென்றது போல் உன் மனைவி-கூட உன்னைக் கொண்டு செல்வதற்கு நான் அஞ்சுகிறேன்

ஆரியர் அலரும்படித் தாக்கி பழமையான வடவரை இமயத்தில் வில்லைப் பொறித்த சேரனின் வஞ்சி நகரம் போன்று நேர்த்தியாக இருந்த என் பழைய அழகினைத் தந்துவிட்டு யாரிடம் வேண்டுமானாலும் செல் 


சேரனின் வஞ்சி நகரம் போன்று நேர்த்தியான அழகு

வண்கால் குவளை Agananuru says 395

பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்
பிரிவிடைத் 
தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

வலிமையான காம்பு கொண்ட குவளை மலரிருந்து மழைநீர் சொட்டுவது போல, கண்ணீர் கொட்டும் துன்பம் நீங்க அவர் வந்தால் நல்லது 
தோழி 
அவர் 
 • வெயில் ஈரத்தை நைத்த நிலப்பரப்பு 
 • வெயில்-தீ மேய்ந்து உண்ட நிழல் இருக்கும் வழி 
 • நீருக்காக மறலின் பின்னே ஓடிய ஆண்மான் தன் பெண்மானை அழைக்கும் ஒலி ஆள் கூப்பிடுவது போல் அங்குக் கேட்கும் 
 • ஞெமை மரங்கள் இருக்கும் 
 • மூங்கில் உரசிக்கொள்ளும் ஒலி கேட்கும் 
இப்படிப்பட்ட காட்டு வழியில் அவர் சென்றுள்ளார்


ஞெமை
உசிலை - உசில மரம்

Saturday, 29 September 2018

களவும் புளித்தன Agananuru says 394

முல்லை
நன்பலூர்ச் சிறுமேதாவியார் பாடல்
இரவுக்குறித் தலைமகளை 
இடத்து உய்த்து வந்து, 
தோழி தலைமகனை வரைவு கடாயது.

களாக்காய் துவர்ப்பு நீங்கிப் பழுத்து இளம்புளிப்போடு இனிக்கிறது

களவு ஒழுக்கம் புளித்துவிட்டது - இறைச்சிப் பொருள்

விளா பழுத்துள்ளது

ஆட்டுப்பால் தயிர், வரகரிசி, கறையான் இறகு முளைத்துப் பறக்கும் ஈயல் கலந்து செய்த புளிச்சோற்றை பசு வெண்ணெயில் உருக்கிய நெய் கலந்து இளையர் உண்ண,

நீயும் இவளும் சிற்றில்லில் போட்ட  பந்தலுக்கு அடியில் பால்-சோறு தொட

நடக்கும் திருமண விழவுவுடன் ஒருநாள் வந்து போகவேண்டும்

இடையன் தான் மேய்க்கும் ஆடுகளை இடம் மாற்றம் செய்ய வாயில் வீளை அடிப்பான்

அதனைக் கேட்டு அஞ்சும் முயல் புதருக்குள்  ஓடி ஒளிந்துகொள்ளும் எம் சிற்றூருக்கு நீ வருதல் வேண்டும்

முயல் ஒளிதல் 
அலர் தூற்றுவோர் மறைதல்
இறைச்சிப் பொருள்


விளா

தொடிமாண் உலக்கை Agananuru says 393

பாலை
மாமூலனார் பாடல்
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் 
தோழி வற்புறுத்தியது.

பல குன்றுகளைக் கடந்து
வேங்கட மலையைத் தாண்டி
அவர் சென்றாலும்

 • வரகு அறுத்து வந்து 
 • அதன் கதிர்களின்-மேல் பிளந்த குளம்பகளை உடைய மாடுகளைக் கட்டி ஓட்டி, 
 • உதிர்ந்த வரகைக் கொண்டுவந்து,  
 • பாறையில் காயவைத்து, 
 • சுழல் மரத்தால் அரைத்து, 
 • அரிசியாக்கிச் சுளக்கால் புடைத்து 
 •  உரலில் போட்டு உலக்கையால் குற்றி அரிசியை வெண்மையாக்கி
 • சுனையிலிருந்து கொண்டு வந்த நீர் உலைப்பானையில் இட்டு 
 • அடுப்பில் ஏற்றி 
 • கடுக்கைப் பூந்தாதுடன் புழுங்கிய புன்கம் (பொங்கல்) சோற்றை 
 • குடவர் மக்கள்  
 • ஆன் (பசு) பாலுடன் சேர்த்து விருந்தாகப் படைக்கும் நாடு வேங்கடம் 

இத்தகைய வேங்கடத்தைக் கடந்து சென்றாலும்
உன்

 • மயில் போன்ற கூந்தல் 
 • தகரம் மண்ணிய கூந்தல்
 • கூந்தல் முச்சியில் சூடிய குவளை, அதிரல் பூக்களின் மணம் 
ஆகியவற்றோடு உன்னைத் தழுவிக்கொண்டதை மறந்து
காலம் நீட்டிக்க மாட்டார்
விரைந்து வந்துவிடுவார்

அகநானூறு 393

சுளகு அலை வெண் காழ்
சுளகு முறத்தால் நேம்பிய வெள்ளை அரிசி
படம் - கார் அரிசி

தொடிமாண் உலக்கை ஊழின் போக்கிக்
குற்றுதல்

சுழல்மரம் சொலித்தல்
சுழல்மரம் = திருவை
புன்கம் பொங்குதல்
சமைத்தல்உரிது அல் பண்பின் பிரியுனன் Agananuru says 392

குறிஞ்சி
மோசிகீரனார் பாடல்
பின்னின்ற தலைமகற்குக் 
குறை நேர்ந்த தோழி 
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.

தன் கட்டுக்குள் அகப்பட்ட பிடியைக் களிறு கெடுத்து-விட்டது 
அதனால் பெண்யானை பிடி தழைகளை உண்ணாமல் கவலையுடன் இருக்கிறது 

நானும் அந்தப் பிடி போல் இருக்கிறேன் 
அவன் களிறு போல் மீண்டும் மீண்டும் வருகிறான் 

நீயோ, 
அவன் விருப்பப்படி அவனுப்பு உதவும் படகாக மாறிவிட்டாய் 
"அவன் நெஞ்சு அழியத் திரும்பக் கூடாது" என்று கூறுகிறாய் 

அவன் என்னை அழித்துவிட்டுச் செய்யக் கூடாத பண்பினனாகப்  போய்விடுவானே 

கானவன் இதண்-பந்தல் மேல் இருந்துகொண்டு தினை மேய வரும் யானையை ஓட்டக் கவண்-கல் எறிவான் 

அதனால் யானையைத் தாக்க வரும் புலியும் ஓடும் 
இது நல்லதுதான் 

கவண் கல் வரும் வெடியோசை கேட்டு மயிலும் ஓடுமே 
அவன் பிரிந்தால் என் நிலைமை என்ன ஆகும் 

தலைவி இவ்வாறு கூற, 
தோழி கூறுகிறாள் 

வேந்தன் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்காமல் கோட்டை அழியும்போது காட்டில் மறைவாக இருந்துகொண்டு கோட்டையைக் காக்க உதவிய
நன்னன் போல நான் உதவுவேன்


களிறு பிடியைக் கெடுத்தது 

பொதி மாண் முச்சி Agananuru says 391

பாலை
காவன் முல்லைப் பூதனார் பாடல்
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் 
தலைமகள் சொல்லியது.

அதிரல் மலர்கள் பூனைப் பற்கள் போலப் பூத்திருக்கின்றன 
அவற்றைப் பறித்துக் கட்டி கூடையில் வைத்துக்கொண்டு விற்கும் வட்டியர் (பூக்காரி) என் தலையை இடம் கொள்ளாமல் சூட்டி விட்டனர் 

காட்டில் பூத்திருந்த முல்லை மலர்களைப் பறித்து வந்து, 
தலையில் மீதம் இருக்கும் முச்சியில்  
அவர் சூட்டி விட்டார் 

அந்த மாட்சிமை மிக்க முச்சிக் கொண்டைச் சுமையை இப்போது நினைத்துப் பார்க்கிறேன் 

அந்தப் பழமை நினைவுகள் என் உள்ளத்தில் இருக்கின்றன 

பொருளீட்டப் பிரிந்து சென்றவர் சில நாள் கழித்து வந்தாலும் அந்த நினைவிலேயே இருந்துவிடுவேன்

யானை தன் கொம்பு அசையாமல் வாயில் கை வைத்து உண்ணுவது குன்றில் புகும் பாம்பு போல் தோன்றும்
யானை - குன்று
துதிக்கை - பாம்பு 
அது போல் அவர் பழம் பூக்கள் தலையில் இருக்கும்போதே புதிய பூக்களைச் சூட்டியது நினைவில் இருக்கிறது

அகநானூறு 391

பூக்காரி
வட்டியர்


பொதிமாண் முச்சி

Friday, 28 September 2018

நெல்லும் உப்பும் நேரே Agananuru says 390

நெய்தல்
அம்மூவனார் பாடல்
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது;
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்.

உமணர் உப்பு விற்க ஊர் ஊராகச் செல்வர் 
உமணர் பெண்டிர் வீடு வீடாகச் சென்று உப்பு விற்பர் 
அப்படி உப்பு விற்கும் ஒரு பெண்ணை அவன் பார்த்தான் 
அவளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்ததைக் கூறுகிறான் 
 • உமணர் உப்பு விற்கச் செல்வது கணநிரை வாழ்க்கை (கணம் = கூட்டம், பாரம், - நிரை = வரிசை - உப்பு வண்டி வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாகப் பிணைக்கப்படுவதால் நிரை) இந்தக் கணநிரை வாழ்க்கை நல்லதா, (நாம் மணந்துகொள்ளத் தக்கதா)
 • உப்பு விற்கும் அவள் சுருண்ட கூந்தலை முச்சியாக முடிந்திருந்தாள் 
 • இடையில் தழையாடை அணிந்திருந்தாள்
நெல்லும் உப்பும் சரிக்குச் சரி விலை (ஒருபடி உப்புக்கு ஒரு படு நெல்) 
வாங்குங்கள்  
என்று தெருவில் கூவிக்கொண்டு சென்றாள் 
 • அவளுக்கு அழகிய உந்தி * அவ்வாங்கு உந்தி
 • மூங்கில் போன்ற தோள் 
"நீ உன் உப்பின் விலையைக் கூவுகிறாய் 
உன் உடம்பில் வெளிவரும் உப்பின் விலை எவ்வளவு"
(புணர்ச்சியின்போது உடலில் தோன்றும் 
வியர்வை உப்பின் விலை எவ்வளவு) [எய்யாம்]
என வினவி அவளைத் தடுத்து நிறுத்தினேன் 
"யார் நீர், என்னைத் தடுத்து நிறுத்துகிறீர்" என்று கேட்டுக்கொண்டே  சிரித்தாள் 
நகர்ந்தாள் 
அது ஒப்பதல் சிரிப்பு போல் தோன்றுகிறது 
என் நெஞ்சம் என்னை விட்டுவிட்டு அவள் பின்னே சென்றுவிட்டது 


அவ்வாங்கு உந்தி

தந்து உவக்கும் அரும் பொருள் வேட்டம் Agananuru says 389

பாலை
நக்கீரனார் பாடல்
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் 
வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.

அவர் என்ன செய்தார் என்பதை நீ அறியாய் வாழி, தோழி! 

 • மணக்கும் என் கூந்தலை உலர்த்தினார்
 • நெற்றியில் திலகம் வைத்தார் 
 • மலர்களைப் பறித்துவந்து என் முலையில் அப்பினார் 
 • என் தோளில் தொய்யில் எழுதினார் 
 • கால் பரட்டில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டினார் 
இப்படி என்னை அழகுபடுத்தியதோடு உன்னைப் பாராட்டிப் ஏசினார்
இப்படிப் பூ போன்ற மெத்ததையில் இரவும் பக்கலும் என்னோடு இருப்பவர் அவர்

 • இரப்பவர் வேண்டுவனவற்றறை அவர் கை நிறையத் தரவேண்டும் 
 • தன்னைப் பாதுகாப்பவர் உள்ளம் நிறையும்படி புதியனவற்றைத் தந்து தான் உவக்க வேண்டும் 
 • சினம் கொண்டவர் புன்சொல்லைப் பாழாக்க வேண்டும்
 • புகழை நிலைநாட்ட வேண்டும்

என்னும் எண்ணத்துடன் பொருள் வேட்டைக்குச் சென்றுள்ளார் 
வானவரம்பன் சேரநாட்டைத் தாண்டி மலைப்பாதையில் சென்றுள்ளார் 


நெற்றியில் திலகம்
இது இக்கால ஒட்டுப்பொட்டு
அக்காலத்தில் வேங்கைப்பால் இறுகியதைக் குழைத்து நெற்றியில் திலகம் வைப்பர்
திலகம் = நெற்றிப் பொட்டு
மகளிர் நெற்றியில் திலகம் வைத்துக்கொள்வர்
தாய்மார், தோழியர் போன்றோர் திலகம் தீட்டுவது வழக்கம்
கணவன் திலகம் தீட்டினான் என்று பாடல்  கூறுகிறது

குரீஇ ஓப்பி Agananuru says 388

குறிஞ்சி
ஊட்டியார் பாடல் 
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் 
தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.

அம்ம வாழி, தோழி 
சந்தன மரத்தை வெட்டிப் புகைத்த தினைப் புனத்தில், 

 • மூங்கிலை அறுத்துச் செய்த தட்டையை அடித்து, 
 • வேங்கை மரக் கிளையில் அமைத்த இதணத்தின் மேல் இருந்து 
 • தேன் உண்ணும் வண்டின் ஒலியைக் கேட்டுக்கொண்டு

குருவிகளை ஓட்டிக்கொண்டிருந்தோம் 


நல்லீரே
என் அம்பு பாய்ந்த களிறு ஒன்று இவ் வழியில் வந்ததா - என்று வினவிக்கொண்டு வல்வில் காளை ஒருவன் வந்தான்

சந்தனம் பூசியிருந்த அவன் மார்பையும் தகைமையையும் நினைந்து நான் வாடிக்கொண்டிருக்கிறேன்

இதனை உணராமல் அன்னை வேலனை அழைத்து வெறியாட்டு விழா நடத்த இருக்கிறாள்

வேலன் "எம் இறைவன் முருகன் அணங்கியதால் இவளுக்கு இந்த நோய் வந்தது" என்கிறான்

தோழி

"ஊட்டி போல் குருதி நிறம் படிந்த அம்புடன் உன் முருகன் காட்டுமான் காலடியைப் பார்த்துக்கொண்டு வேட்டைக்குச் செல்லுமோ" என்று நாம் அந்த வேலனிடம் கேட்டு உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன


முருகன் தெய்வம்

இருக்கிற்போர்க்கே Agananuru says 387

பாலை
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
தலைமகளது குறிப்பு அறிந்து, 
தோழி 
தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது.

நான்

 • அணிகலன் நழுவி 
 • தோள் மெலிந்து 
 • கண்ணீர் சிந்த, 

பார்த்துக்கொண்டு செல்கிறீர்

அவர் யானை மேல் செல்பவர் போலச் செம்மாந்து கானம் சென்றுள்ளார் - என்று சொல்லிக்கொண்டு வாழ்பவரிடம்
வந்துவிடுவேன் - என்று சொல்லுங்கள்
நான் வாழ்வது அரிது - எனகிறாள் 
துணி வெளுக்கும் பசையைத் தடவிய கையோடு புலைத்தி தன் சிறுவருடன் சென்று துணி வெளுப்பாள்
துணி வெளுக்கும் வேட்டு ஒலியைக் கேட்டுப் பயந்து, பெண்-இதல் தன் ஆண் இதலை அழைக்கும்

நீ செல்லும் வழியில் நடுகல்லில் இருக்கும் பல்லி என்னைப்பற்றி ஏதாவது சொல்லுமாயின் நல்லது 
சொல்லாதே 


இதல்

பகல் வந்து பெயர்ந்த வாணுதல் Agananuru says 386

மருதம்
பரணர் பாடல்
தோழி வாயில் மறுத்தது; 
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம்.

பாணன்
ஆரியப் பொருநன் 
இருவருக்கும் இடையே மற்போர் 
ஆரியப் பொருநனின் கையை ஒடித்துத் தனியே எடுத்து, 
பாணன் வீசிவிட்டான் 
போருக்குக் காரணமாக இருந்த கணையன் 
நாணினான் 
இது ஒரு நிகழ்வு

தோழி தலைவனிடம் கூறுகிறாள் 
பொய்கையில் இருக்கும் நீர்நாய் வாளைமீன் இரையைத் தேடிக்கொண்டிருக்கும் ஊர 
தலைவன் - நீர்நாய்
பரத்தை - வாளைமீன்
உள்ளுறை உவமம்
பாணன், ஆரியப்பொருநன் போரின்போது கணையன் நாணியது போல உன் செயலுக்கு நான் நாணவேண்டி இருக்கிறது 

உன் மறையினள் (திருட்டு உறவுக்காரி) உன் மனைவியிடம் மெல்ல வந்தாள் 

''மை ஈர் ஓதி மடவோய்! 
யானும் உன் தெருவில் உள்ளேன் 
அடுத்த வீட்டுக்காரி 
உனக்குத் தங்கை உறவுக்காரி ஆகிவிட்டேன் 

என்று சொல்லிக்கொண்டு உன் மனைவியின் விரல் மோதிரத்தைச் சுழற்றிக்கொண்டும் நெற்றியையும் கூந்தலையும் நீவி விட்டுக்கொண்டும் கூறினாள் 
பட்டப் பகலில் வந்து கூறினாள் 

அது கண்டு உன் மனைவியும் நானும் நாணினோம் 


பாடல் - தலைவி & பரத்தை

சிறு வன்கண்ணி Agananuru says 385

பாலை
குடவாயிற் கீரத்தனார் பாடல்
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

வன்கண் = கொடுமை, கல்மனம் 
வன்கண்ணன் = கல் மனத்தன் 
வன்கண்ணி = கல் மனத்தள் 

என் மகள் 
தன்னை ஒத்த அவளது விளையாட்டுத் தோழியரையும் நினைக்கவில்லை 
வெற்ற, வளர்த்த தாய்மார்களையும் நினைக்கவில்லை 

சோழர் நகரம் உறந்தை போல் தான் பிறந்து வளர்ந்த வளமனையில் மேன்மக்கள் தகரம் பூசி நீராட்டி, விழாக் கொண்டாடி, திருமணத்தில் சேர்த்து வைக்கச் செல்லவில்லை 

மூங்கில், நெல்லி மரங்கள் நிறைந்த காட்டு வழியில் சென்றுவிட்டாள் 

அங்கே அவளது காதலன் ஆலம் விழுதில் கட்டிய ஊஞ்சலில் ஆட்டி விடுவான் 
குறங்கை (தொடை) உரசிக்கொண்டு அவளது வளையல் கையைப் பற்றி ஆட்டி விடுவான் 
கோவை அணிந்த அல்குல்-இடுப்பைப் பற்றி ஆட்டி விடுவான் 

அப்போது அவள் கூந்தல் மயில் ஆடுவது போலப் பொங்கும் 
அவள் சிரித்துக்கொண்டே ஆடுவாள் 

அவள் சிறு வன்கண்ணி 

சிலம்பு-கழி விழா (பண்டைய திருமணச் சடங்குகளில் ஒன்று) பற்றி அறியாத தேயத்துக்கு அவள் சென்றது கொடுமை 


ஊசல் - ஊஞ்சல் - இக்காலம்

மனம் பூட்டினையோ Agananuru says 384

முல்லை
ஒக்கூர் மாசாத்தியார் பாடல்
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, 
உழையர் சொல்லியது.

தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான் 

வேந்தன் இட்ட பணியை முடித்துவிட்டேன் - என்றேன்
காதலோடு தேரில் ஏறியது நினைவில் இருக்கிறது
வந்த வழி பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை
முல்லை நிலத்தில் முயல் குட்டிகள் விளையாடும் என் சிற்றூரில் என் இல்லத்துக்கு வந்துவிட்டோம்
இறங்குங்கள் - என்கிறாய்
வியப்பாக இருக்கிறது
தேரில் குதிரைகளைப் பூட்டினாயா
காற்றைப் பூட்டினாயா
மனத்தைப் பூட்டினாயா 

வலவ
நீதான் சொல்ல வேண்டும்

இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் தன் தேர்ப்பாகனைக் கட்டித் தழுவிக்கொண்டான்
நெடுந்தகை வலவனை தன் இல்லத்துக்குள் அழைத்துச் சென்றான்
தலைவி விருதினரைப் பேணும் பேறு பெற்றாள்


முயல் குட்டிகள்

Thursday, 27 September 2018

வாடினை வாழியோ வயலை Agananuru says 383

பாலை
கயமனார் பாடல்
மகட் போக்கிய தாய் சொல்லியது.

என் மகள் 
தன்னைப் பெற்றுப் பேணிய என்னையும் நினைக்கவில்லை 
ஊர் அவளைப் பற்றி அலர் தூற்றுகிறது 
காடு, கானம், நாடு, தேயம் - கடந்து சென்றுவிட்டாள் 

வயலைக் கொடியே
அவளை எண்ணி வாடுகிறாயா 

நாள்தோறும் அவள் தழையாடை புனைய உதவனோமே - இனி யாருக்கு உதவுவோம் என வாடுகிறாயா 
சிலம்பு ஒலிக்க நடந்து வந்து, தாயைப் போல எண்ணி, இனி யார் நீர் ஊற்றுவார் என்று வருந்துகிறாயா 

அவள் இல்லையே 
அளியை நீ 


வயலை - பசலை

அறியக் கூறல் வேண்டும் Agananuru says 382

குறிஞ்சி
கபிலர் பாடல்
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் 
தோழி தலைமகட்குச் சொல்லியது.

பிறருக்குத் துன்பம் நேர்ந்தால் பிறரும் வருந்துவர்
தனக்குத் துன்பம் நேர்ந்தால் தான் மட்டுமே அதில் தஞ்சம் அடையவேண்டும்
இதுதான் இயல்பு

 • கடம்பு மலர் கொடியைக் கட்டி 
 • கடம்பு மாலை சூடி 
 • பல இசைக்கருவிகள் முழங்க 
 • காட்டில் வாழும் வேட்டுவன் வேளனைப் பாடி 
 • அணங்கு-தெய்வத்தை நிறுத்தி 

வெறி விழாவினை நம் இல்லத்தில் நடத்துகின்றனர்

தோழி

அவர்கள் அறியும்படி நாம் மலைநாடனைப் பற்றிக் கூறியாக வேண்டும் 

 • அருவியில் பாய்ந்த மந்தி மிதக்கும் பலாப்பழத்தைப் பற்றிக்கொண்டு ஊர்த்துறைக்கு வந்து சேரும் மலைநாடன் அவன் 

அகநானூறு 382

அணங்கு

ஆளி நன்மான் Agananuru says 381

பாலை
மதுரை இளங்கௌசிகனார் பாடல்
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

 • அணங்கு (வருத்தம்) தரும் ஆளி என்னும் விலங்கின் ஒருத்தல் (ஆண்) மீளி வேழம் (தறுகண்மை கொண்ட ஆண்யானை) புலம்பும்படி அதன் தந்தத்தின் குருத்தினைப் பிடுங்கித் தின்னும் அச்சம் தரும் காட்டுவழி 
 • கதிரவன் நிழலைக்கூட தின்னும் வெயில் 
 • வேட்டைநாய் கொண்ட வடுகர் வில்லின் சினம் தணிந்திருக்கும் நேரம் 
 • வழி பிரியும் கவலை-வழியில் குருதி உண்ட கழுகுகள் பச்சை ஊனை உண்டு செவ்வானில் பறந்துகொண்டிருக்கும் 

இந்த வழியைக் கடந்து செல்கிறேன்
என்னைக் காட்டிலும் அவள் வருந்திக்கொண்டிருப்பாள்

வானவன் தாக்கி இடிந்த கோட்டை போல் பாழ்பட்ட மேனியுடன்
குவளை மலர் போன்ற கண் பனி தெளிக்க புலம்பிக்கொண்டிருப்பாள்

அகநானூறு 381

ஆளி - யாளி - சிம்மம்


தாக்கி இடிந்த கோட்டை

நற்பாற்று இது Agananuru says 380

நெய்தல்
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
பின்னின்ற தலைமகற்குக் 
குறை நேர்ந்த தோழி 
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.

தேரைத் தொலைவில் நிறுத்திவிட்டுத் தனியே வந்தான் 
நும் ஊர் யாது - என்று வினவினான் 
நாம் நாணி ஒதுங்கினோம் 
அன்று அவன் போய்விட்டான் 

நேற்று வந்தான் 
துறையில் விழுந்த நாவல் பழத்தை எடுத்துச் சென்று தாழ மர வேரில் பதுங்கியிக்கும் பெண் நண்டுக்கு ஆண்-நண்டு கொடுப்பதைக் காட்டி "நல்ல பண்பு இது" என்று சொல்லிக் காட்டினான் 
நாம் கண்டுகொள்ளவில்லை 
நேற்றும் பெருமூச்சு விட்டுக்கொண்டு சென்றுவிட்டான் 

இன்று அவன் தேர் வருவதே அதோ பார் 
இன்றும் அவனை நாம் எதிர்கொள்ளாவிட்டால் அவன் வேறு முடிவுக்கு வந்துவிடுவான் 
அவன் பெரிதும் நாணம் உடையவன் 

அதோ அந்த மணல் மேட்டுக்குப் பின்னால் நான் ஒளிந்து-கொள்ளட்டுமா 
தலைவி தலைவனை வரவேற்க வேண்டும் என்பது கருத்து 


ஆண் பெண் நண்டுகள்

நம் நயந்து உறைவி Agananuru says 379

பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
முன் ஒரு காலத்துப் 
பொருள் முற்றிவந்த தலைமகன் 
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

மீளி நெஞ்சே (வீறாப்பு கொண்ட நெஞ்சமே)

நம்மை நம்பி வாழ்பவள் வாடுகிறாளே என்று எண்ணாமல்
அருள் இல்லாத முனைப்புடன்
பொருள் ஈட்டச் செல்வாய் ஆயின்
நான் கூறுவதைக் கேள்

பகல் ஒளி வீசுகிறது என்றால், அது இரவு விட்டுக்கொடுத்து விலகித் தந்த கொடையே ஆகும்

மலர் சூடிய அவள் கூந்தல் மணம் கமழ,
விளக்கு போன்ற  அவள் மேனியில் என்னைப் புகுத்தி முயங்கி நிறைவுறாமல் இருக்கிறேன்

அதற்குள் கரிந்து கிடக்கும் காட்டில் 
மான் தோல் போன்ற புள்ளி நிழலில் 
சென்று பொருளீட்ட நினைக்கிறாய் 
மறக்க முடியாத இவள் பண்பை நினைக்க மறுக்கிறாய் 

புலி தாக்கிக் காயம் பட்ட ஒருத்தலுக்காக (ஆண்யானை) பிடி (பெண்யானை) பூசலிடுவதை அந்தக் காட்டு வழியில் நீ கேட்பாய் அல்லவா 


புலி தாக்கும் யானை

யாங்ஙனம் வாழ்தி என்றி Agananuru says 378

குறிஞ்சி
காவட்டனார் பாடல்
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் 
தோழி சொல் எடுப்ப, 
தலைமகள் சொல்லியது.
காற்று வீசும்

 • வேங்கை மலர் பொன் போல் உதிரும் 
 • மயில் ஆடும் 
 • வருடை ஆடுகள் இசைக்கும் 
 • மூங்கில் அசையும்  
இப்படிக் காடே வயிரியர் கூத்தாடுவது போல் இருக்கும் 
பெருங்கல் நாடன் அப்படிப்பட்ட வழியில் சென்றுள்ளார் 

அன்னை மாறுபாட்டோடு உன்னைப் பார்க்கிறாளே 
வடந்தைக் காற்று வீசிப் பனி கொட்டும் அற்சிரக் காலமாயிற்றே 
அவரை நினைக்கும் மாலைக் காலமாயிற்றே 
எப்படித் தனிமையில் வாழ்கிறாய் - என்று வினவுகிறாயா தோழி 

பிரியமாட்டேன் என்று வஞ்சினம் கூறியவர் பிரிந்தாலும்
பலாப் பழத்தை வைத்துக்கொண்டு கடுவன், மந்தி குரங்குகள் விளையாடும் அவர் நாட்டு மலை-முகடு என் கண் முன் தோன்றுகிறதே
அதனைப் பார்த்துக்கொண்டிப்பதால் வாழ்கிறேன்


மயில் ஆடும்

Wednesday, 26 September 2018

கவைமனத்து இருத்தும் வல்லு Agananuru says 377

பாலை
மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் பாடல்
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் 
தலைமகன் சொல்லியது.
 • எறும்பு சேரத்து வைக்கும் புல் உணவை மறவர் கோடைகாலத்தில் உணவாகப் பயன்படுத்துவர் 
 • மக்கள் குடிபெயர்ந்து போனதால் ஊர் மன்றம் பாழ்பட்டுக் கிடக்கும் 
 • நரைத்த தலை கொண்ட முதியோர் பொதியில் பன்றத்தில் கவைபட்ட வஞ்சக மனத்தோடு வல்லு விளையாடிய இடம் கறையான் மேயும் இடமாக மாறி அழகிழந்து குடக்கும் 
நெஞ்சே 
 • இதன் ஒரு மூலையில் தங்கியிருந்தகொண்டு 
 • விட்டு வந்த தன் காதலியை நினைத்துக்கொண்டு 
 • வம்பலர் (புதிய வழிப்போக்கர்) பொருளீட்டப் பொறுமையுடன் தங்கியிருப்பர் 
ஆசையோடு தன்னை நாடி வந்தவர் 
இரந்து கேட்பதை வழங்குவதற்காகப் 
பொருளீட்ட வந்தவர் தங்கியிருப்பர் 


வல்லு 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி