Thursday, 26 July 2018

வெட்சி History in Purananuru 269

வெட்சி - உண்டாட்டு

ஒளவையார் பாடியது.

அதிரல் மலர் குயிலின் வாயைப் போலப் பூக்கும்
மாலையில் பூக்கும்
ஆண்களும் அதனைத் தலையில் சூடிக்கொள்வர்

இந்த வெட்சிப் போர் வீரன் அதனை வந்தவர்களுக்குச் சூட்டிவிடுவதில்லை
அதிரல் பூ போன்ற வயிர மாலை சூட்டிவிடுவான்

பருகும் அகல், புலியின் கண் போன்று இருக்கும்
அதில் சுடச்சுடப் பருகத் தருவான்

இப்படி அவன் தந்ததை ஒருமுறைக்கு இருமுறை உண்ட பின்னர் அமர்ந்திருக்கும்போது துடி முழக்குபவன் வந்தான். 
அவன் உவலைப் பூ மாலை அணிந்திருந்தான் 

அவன் பிழி மகிழ் வல்சி கேட்டான் 
கொள் என அதனையும் அவன் கொடுத்தான் 

அவன் கரந்தைப் போரில் ஆனிரைகளை மீட்டுக் கொண்டவந்தவன் 
பருந்துகள் மகிழும்படிப் பகைவர்களைக் கொன்று ஆனாரைகளை மீட்டுக் கொண்டுவந்தவன் 
வாளால் மீட்டுக் கொண்டுவந்தவன் 


பிழி மகிழ் வல்சி
பிழி - எண்ணெய்
எண்ணெய் ஊற்றிச் சமைத்த சோறு
பிரியாணி

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி