Saturday, 30 June 2018

மாந்தரஞ் சேரல் History in Purananuru 20

முந்நீர் குட்டம் காயம் ஈரம் கண்ணோட்டம் திருவில் நாஞ்சில் வயவு துஞ்சும் புதுப்புள் பழம்புள் விதுப்புறவு 

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
நாட்டை எவ்வாறு ஆளவேண்டும் என்று 
குறுங்கோழியூர் கிழார் 

அறிவுரை கூறுகிறார். 

கடலின் ஆழம், உலகின் பரப்பு, காற்றின் திசை, ஒன்றுமில்லாத ஆகாயம் இவற்றையெல்லாம் அளந்தறிந்தாலும் அளக்க முடியாத பண்புகளை உடையவன் நீ. 
அறிவு, அன்பு இரக்கம் ஆகிய உன் பண்புகள் அளக்க முடியாதவை 

உன் நாட்டில் சோறாக்கும் தீ, வெயில் ஆகியவற்றைத் தவிர வேறு சூடு இல்லை. 
வானவில் தவிர வேறு கொலை வில் தெரியாதவர் உன் மக்கள். 
உழும் பலப்பை தவிர வேறு படைக்கருவி உன் நாட்டில் இல்லை 
கருவுற்ற பெண் உன் நாட்டு மண்ணை உண்டாலன்றி பகைவர்களால் தொடவும் முடியாது 
அம்புகள் பயன்படுத்தப்படாமல் தூங்குகின்றன
அடுத்து நாட்டில் என்ன நிகழுமோ என்னும் கவலை இல்லாமல் மக்கள் வாழ்கின்றனர்

இப்படியெல்லாம் இருக்கும்படி நீ உன் நாட்டைக் காப்பாற்றினால்
உன் திறமையைக் கண்டு உலகமே அஞ்சும்.

புறநானூறு 20

கொலைவில்
வானவில்


நெடுஞ்செழியன் History in Purananuru 19

தமிழ் தலைமயங்கிய இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை தலையாலங்கானம் புலி வேட்டுவன் முயங்கினேன் குரீஇ தூம்பு நாஞ்சில் வலத்தர் விறல் எழுவர் கழூஉ கவைஇய

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில் பெற்ற வெற்றியை, 
குடபுலவியனார் பாடுகிறார். 

வேண்டா விருப்புடன்

பாராட்டுவது போல் பழிப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. 

தலையாலங்கானத்தில் தமிழ் அரசர்கள் அனைவரும் உன்னை எதிர்த்துப் போரிட்டபோது நீ எமன் போலத் தனித்துப் போரிட்டு வென்றாய். 
ஏழு பேர் கூட்டணியை வென்றாய். 
புலி வேட்டைக்காரன் பொறி வைத்த கற்பாறை போல் அவர்கள் மேல் விழுந்து கொன்றாய். 
உன் அம்புகள் குன்றத்திலிருந்து பறந்துவரும் அம்புகள் போலப் பாய்ந்தன. 
யானையின் துதிக்கை வெட்டுப்பட்டு நிலத்தை உழும் கலப்பை போலக் கிடந்தது. 
வெட்டி வீழ்த்திய உன் வீரர்களும் உடன் போராடிய மகனும் போர்க்களத்தில் கிடந்தனர். அவர்களின் மனைவி இப்படிப்பட்ட வெற்றியில் என்ன பெருமிதம் இருக்கிறது என்று மனம் கசிந்து அழுதுகொண்டிருக்கின்றனர். 
இவர்கள் அழுவதைப் பார்த்து எமனே இரக்கப்படுகிறான். 
நீயோ உன் மார்பில் உள்ள முத்தாரத்தை குருதிக்கறையைக் கழுவிக் கழுவி அணிந்துகொள்கிறாய். 


நாஞ்சில் போல் யானைக் கை

பாண்டியன் நெடுஞ்செழியன் History in Purananuru 18

முழங்கு முந்நீர் உம்பல் கோடி ஆயுள் கதூஉம் வாளை ஆரல் வரால் முருக்கி புணரியோர் படைத்திசினோர் தட்டோர் தள்ளாதோர்

பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் 
குடபுலவியனார் கூறும் அறிவுரை 

போரை விரும்பும் செழியனே!

நான் சொல்வதை ஏளனம் செய்யாமல் 
நிலம் நெளிந்து பள்ளமாய்க் கிடக்கும் இடங்களிலெல்லாம் 
நீர்நிலை பெருகும்படி 
தடுத்து நிறுத்தியவர் 
இவ்வுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் ஆவர். 

அவ்வாறு நீரைத் தடுத்து நிறுத்தாதவர் 
இவ்வுலகில் பதியாதவர் ஆவார்.

நீ நீர்நிலைகளைப் பெருகச் செய்து 
உன்னை இவ் உலகில் நிலைநிறுத்திக்கொள்க!

புறநானூறு 18

நீர்நிலை பெருகத் தடுத்தல் 

மாந்தரஞ்சேரல் - நெடுஞ்செழியன் History in Purananuru 17

தென்குமரி வடபெருங்கல் வழிமொழிய தாழை தொண்டியோர் அடுபொருந முன்பு மீக்கூறல் தாயம் அருப்பம் வைகுதும் காண்கு வந்திசின் உடலுநர் உட்க 

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் 
சிறை வைக்கப்பட்டிருந்தான் 
சிறையை உடைத்துக்கொண்டு மாந்தரஞ்சேரல் வெளியேறித் தன் தலைநகர் வந்தடைந்தான். 

புலவர் குறுங்கோழியூர் கிழார் 
மாந்தரஞ்சேரல் கொடை வழங்கும் இடத்துக்கு வந்து 
அவனைப் பாராட்டி இந்தப் பாடலைப் பாடினார். 

தமிழ்நாடு முழுவதையும் ஒருங்கு ஆண்ட சேரர் வழியில் வந்த காவலனே!
தொண்டி மக்கள் புரட்சியை அடக்கியவனே
குடவர் கோவே! 

பொய்க்குழியில் விழுந்த யானை குழியைத் தூர்த்துக்கொண்டு மேலேறித் தன் இனத்துடன் சேர்ந்துகொண்டது போலச் சிறையை உடைத்துக்கொண்டு வெளியேறி உன் தலைநகர் வந்தாய். 

இதைப் பார்த்த பகையரசர்கள் நடுங்கி உன் புகழைப் பாடுகின்றனர். 
நீ முரசு முழக்கத்துடன் கொடை வழங்கிக்கொண்டிருக்கிறாய்.
இதனைக் காண நான் இங்கு வந்திருக்கிறேன்.


குழியில் விழுந்த யானை

பெருநற்கிள்ளி - இராசசூயம் வேட்டவன் History in Purananuru 16

புரவி தோல் முருங்க தலைச்சென்று செக்கர் புலம்பு இறுக்கும் முருகன் சீற்றம் குருசில் நாம நல்லமர் பணை 

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 
போர் வெற்றி பற்றி,
பாண்டரங்கண்ணனார் பாடியது.

குதிரை, தோல் கவசப் படை ஆகியவற்றுடன் சென்று 
முருகன் போல் சினங்கொண்டு போராடி வென்று 
குளங்களை உன் யானைகள் கலக்க, 
நெல்லும் கரும்பும் விளைந்திருக்கும் வயல்களில் வீட்டுக் கூரை மரங்களைப் பிடுங்கிப்போட்டு எரித்தாய். 
அதன் வெளிச்சம் மாலைக் காலத்துச் செவ்வானம் போலத் தோன்றியது.
இது பிறரது துணையை விரும்பாத போர் வெற்றி. 
அமைதியாக இருந்த ஏம நன்னாட்டின்மீது செய்த போர். 
அச்சம் தரும் நாமப் போர். 

இவ்வாறு போர் வெற்றியைப் புகழும் புலவர் 
பகைவர் நாட்டை ஏம (அமைதியான) நன்னாடு என்றும்
உன் போர் நாமப் (வெறுக்கத் தக்க) போர் என்றும் குறிப்பிட்டுப் போரைக் கடிந்துரைக்கிறார். 

பகை நாட்டை 
இவ்வாறு தீ வைத்துக் கொளுத்தல் 
இராச்சூயம் போலும் 
சூயம் - சூழம் - சூழ்ச்சி - சுழியம்


முருகன் சீற்றம்

பெருவழுதி - பல்யாகசாலை முதுகுடுமி History in Purananuru 15

ஞெள்ளல் கழுதை வெள்ளுளை கலிமான் செறல் நோக்கு பலகை நசை பனுவல் வேதம் கண்ணுறை ஆவுதி வேள்வி யூபம் வஞ்சி 

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை 
நெட்டிமையார் வினவுகிறார்

முரசு முழக்கத்துடன் பாடினி உன் வஞ்சிப் போர் வெற்றியைப் பாடக் கேட்டு மகிழும் வெந்தே!
நீ பகைவர் நாட்டை அழித்து அவர்கள் வேல் நிழலில் நிற்க உன் வசை தோன்றும்படி வாழ்ந்தோர் பலரா? 
நீ நால் வேத முறைப்படி நெய் ஊற்றிப் போர்க்கள வேள்வி செய்து வெற்றித் தூண் நாட்டிய களங்கள் பலவா? 
எவை அதிகம்?
ஆங்காங்கே வெற்றித்தூண் நட்டிருக்கும் உன் வேள்விச் சாலையா?
உன்னால் மாண்ட பகைவர் வேல் வடிவாகி நிற்கும் காஞ்சிச் சாலையா?

பல்யாகசாலை என்னும் அடைமொழி இவனுக்கு வழங்கப்பட்டதன் காரணத்தை விளக்கும் பாடலாக இது உள்ளது 


வேல் நிழல் வாழ்நர்
வேல் உருவமாக வாழும் போர்வீரர்கள்

செல்வக் கடுங்கோ வாழியாதன் - சேரமான் History in Purananuru 14

முருக்கி தோட்டி சமம் ஆவம் சாபம் தடி கறிசோறு அணங்கு சேஎய் 

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் 
புலவர் கபிலர் கையைப் பற்றிக்கொண்டு, 
உன் கை மென்மையாக இருக்கிறதே
என்றான் 

புலவர் சொல்கிறார் 

போரின்போது யானையைச் செலுத்தும் தோட்டி, வில்லம்பு ஆகியவற்றைப் பிடித்தும், 
பரிசிலர்க்குக் கொடை வழங்கியும் 
உன் கைகள் வலிமையாக உள்ளன. 

புலவு நாற்றப் புலால் துண்டுகளைப் பூ மணக்கச் சமைத்துத் தர உண்பது அல்லது வேறு தொழில் அறியாமையால் உன்னைப் பாடுபவரின் கைகள் மென்மையாக இருக்கின்றன

பதிற்றுப்பத்து 7 ஆம் பத்து பாடல்கள் 
இவனை இவர் பாடியவை


மென்மையான கை


பெருநற்கிள்ளி அந்துவஞ்சேரல் History in Purananuru 13

இவன் யார் புலிநிறம் கவசம் நாவாய் மைந்து பெயர்கதில் தில் பீலி

சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி 
கருவூருக்குச் சென்றான்.
அவன் ஏறிவந்த யானை மதம் பிடித்து ஓடியது 
அப்போது
புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையோடு 
வேண்மாடத்தின் (விருந்தினர் மாளிகை) மேல்மாடியில் இருந்தார். 

இவன் யார் என்று சேரமான் வினவினான். 
இவன் சோழன் 
இவன் வந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டது. 
இவன் துன்பம் இல்லாமல் நாடு திரும்ப வேண்டும் என்று புலவர் கூறினார். 
சேரன் தன் பகைவன் சோழனைக் காப்பாற்றினான்.
இருவரும் நண்பராயினர்.


இதுபோல் சோழன் வந்தான் போலும்

பெருவழுதி, பல்யாகசாலை முதுகுடுமி History in Purananuru 12

பாணர் தாமரை புலவர் விறல் மாண் வழுதி 

அறிவுரை வினா

குடுமி மன்னா!
பாணர் சூடிக்கொள்ளப் பொன்னால் செய்யப்பட்ட தாமரைப் பூவை வழங்குகிறாய். 
புலவர்களுக்கு யானையும் தேரும் பரிசிலாக வழங்குகிற்றாய் 
பிறர் நாட்டை வென்று அந்த நாட்டுச் செல்வங்களை அள்ளிக்கொண்டு வந்து கொடையாக வழங்குவது அறம் ஆகுமா? 
வேண்டாதவர்க்குத் துன்பம் செய்து வேண்டியவருக்கு இன்பம் செய்தல் அறம் ஆகுமா?

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை 
நெட்டிமையார் பாடியது.


பரிசில் பொருள் - சங்க காலம்

Friday, 29 June 2018

புகழூர், தமிழி, கல்வெட்டு Chera Tamil-Brahmi Inscription

ஆதன் இரும்பொறை மகன் பெருங்கடுங்கோ இளங்கடுங்கோ 

வரிகள்

யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்

செல்வக் கடுங்கோ வாழி ஆதன்
பாலை பாடிய பெருங் கடுங்கோ
மருதம் பாடிய இளங்கடுங்கோ

வாழியாதன் மகன் பெருங்கடுங்கோ
பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ
என்னும் மரபு வழியினை இந்தக் கல் புலப்படுத்துகிறது

பெயர் குறியீட்டு ஒப்புமை 

ஆதன் - வாழி ஆதன் - வாழியாதன்
செல் இரும்பொறை - செல் - செல்வ

பொறையர்  மரபு இரண்டு 

  1. மாந்தரஞ்சேரல் இரும்பொறை மரபு - பதிற்றுப்பத்து 7, 8, 9 -ன் பான்னுடைத் தலைவர்கள் 
  2. இவர்களுக்குப் பின்னர் நாடாண்டவர் கடுங்கோ மரபினர் 

எனவே செல்வக் கடுங்கோ வாழியாதன் "இரும்பொறை" என்னும் மரபடையும் கல்வெட்டில் பெற்றுள்ளான்.

சேரன் தமிழி எழுத்துக் கல்வெட்டு, புகழூர்
எழுத்து

அசோகன் பயன்படுத்தியது வட-பிராமி , வடமொழி எழுத்துக்களைக்  கொண்டது. மொழி - பாலி
தமிழ்நாட்டில் உள்ள இந்த எழுத்துக்களில் வட-எழுத்துக்கள்  இல்லை. ழ ற ன - எழுத்துக்கள் உள்ளன. அதனால் இதனைத் "தமிழி" என்றும், "தாமிழி" என்றும் கல்வெட்டியலார் குறிப்பிடுகின்றனர்.  

பெருங்கடுங்கோ, பாலைக்கலி பாடியவன் History in Purananuru 11

அரிமயிர் பொருநை வஞ்சி துப்பு உறுவர் கழஞ்சு பெற்றிசின் குரல் கொளை தாமரை வெள்ளிநார் பேய்மகள் இளவெயினி

பொருநை ஆறு பாயும் வஞ்சி (இக்காலக் கருவூர்) நகர மகளிர் தாம் விளையாடும் மணல் பாவைக்குப் பூக்களைக் கொய்து கொண்டுவந்து சூட்டிய பின்னர் ஆற்றுப் புனலில் பாய்ந்து விளையாடுவர். 
இந்த வஞ்சி நகர வேந்தன் பல கோட்டைகளை வென்று பகைவரைப் புறங்கண்டான். 
அவனைப் பாடிய பாடினி கழஞ்சு நிறை அளவு பொன் அணிகலன்களைப் பரிசாகப் பெற்றாள். 
அவள் பாட்டுக்கு யாழில் இசை கூட்டித் தந்த பாணன் பொன்னாலான தாமரைப் பூ மாலை பெற்றான். 
கொடுத்தவன் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 
பாடியது பேய்மகள் இளவெயினி 


பாடினி இவை போன்ற பொன்னணிகளைப் பெற்றாள் 


பறளி - பஃறுளி River Pahruli

பறளியாறு (பஃறுளி யாறு) கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும்.


பெருச்சாணி நீர்தேக்கத்திற்கு மேலாக பாலமூர் தோட்டத்துக்கு வடகிழக்காக சுமார் 8 கி.மீ. தோலைவில் அமைந்துள்ள இடத்தில் பறளி ஆறு தோன்றுகிறது.
அக்காலப் பஃறுளி ஆற்றின் இச்சமிச்சமாக இக்காலப் பறளியாறு ஓடுகிறது போலும்.

பெருச்சாணி அணை
இதில் தோன்றும் பறளியாறு
இந்த அணை இல்லாத காலத்தில்
பஃறுளி ஆறாகத் தோன்றி ஓடியது போலும்இளஞ்சேட்சென்னி - நெய்தலங்கானல் History in Purananuru 10

வழிபடுவோர் தேறலை ஒறுத்தி தண்டம் தணிதி அமிழ்து அடிசில் மலைதல் நெய்தலங்கானல் வந்தனம் ஏத்துகம் 


அறிவுரை 

வழிபடுவோர், பழி கூறுவோர் பற்றித் தெரிந்துகொள்
நன்மை தீமை கண்டு தண்டனை வழங்கு
வழிபடும் அரசனுக்குத் தண்டனையைக் குறை
மள்ளர் தழுவ முடியாத உன் தோளை மகளிர் தழுவட்டும்
குற்றம் செய்துவிட்டு வருந்தாமல் குற்றம் செய்யாமல் இருக்க எண்ணிப்பார்.
வந்தவர்க்கெல்லாம் வழங்கு.
இவற்றைத்தான் நான் கேட்க வந்தேன்.

சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை 
ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.


இது நுங்கு வைத்திருக்கும் பசுங்குடை
இதுபோல் புலால் உணவு வைத்திருக்கும் பசுங்குடை
இலையில் உணவு உண்ணும் பழக்கம் உடையவர்
ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர்


வழுதி - பெருவழுதி - முதுகுடுமி - பல்யாகசாலை History in Purananuru 9

நெட்டிமையார் தென்புல வாழ்நர் அறத்தாறு பூட்கை மீமிசை நிழற்றும் வயிரியர் முந்நீர் விழவு நெடியோன் குடுமி தங்கோ பஃறுளி


வாழ்த்து 
சங்ககால போர்முறையில் அறநெறி

பசு, பார்ப்பனர், பெண்டிர், நோயாளி, பிள்ளை இல்லாதவர் போர்க்காலத்தில் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என்று பறை சாற்றி அவர்கள் சென்ற பின்னர் போரிட்டவன் இவன். 
இவன் குடுமி தங்கோ எனவும், நெடியோன் எனவும் பாராட்டப்பட்டுள்ளான் 
பஃறுளி ஆறு கடலோடு கலக்குமிடத்தில் இவன் விழா நடத்தினான். 
அப்போது பொன்னணிகளைப் பாணர்களுக்கு வழங்கினான்.  
இவன் பஃறுளி ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக நாள் வாழவேண்டும்

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை 
நெட்டிமையார் பாடியது.

பஃறுளி பற்றி ஒரு கருத்து


சேரன் வாழியாதன் History in Purananuru 8

வையம் வழிமொழிந்து போகம் ஊக்கம் துரப்ப சேரலாதன் மண்டிலம் வரைதி ஒளித்தி சேரமான் கடுங்கோ 

புகழ்தல் 

சூரியன் மறைந்து தோன்றுகிறது
சேரலாதன் காலம் கருதாமல் வழங்கிக்கொண்டே இருக்கிறான்
மன்னர்கள் எல்லாம் வழிமொழிந்து இவனைப்  பின்பற்றி ஆட்சி புரிகின்றனர்
இது அவனுக்குப் போதவில்லை
மேல் உலகமும் புகழவேண்டும் என்று கொடை வழங்கிக்கொண்டே இருக்கிறான்
அதனால் சூரியன் இவனுக்கு ஒப்பு இல்லை
இவ்வாறு புலவர் புகழ்கிறார்.

சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.

புறநானூறு 8

Thursday, 28 June 2018

கரிகாலன், பெருவளத்தான் History in Purananuru 7

 களிறு கடைஇய தாள் கழல் சாபம் எறுழ் முன்பின் எல்லை  கம்பலை மேவலை ஆகுபவால் வளவ தேர்வளவ இயல்தேர் கரிகாலன் கரிகாற் பெருவளத்தான் வளத்தான் கருங்குழல் ஆதனார்

கரிகாலனுக்கு அறிவுரை

இயல்தேர் வளவ
யானைமேல் இருந்துகொண்டு வில்லால் எய்கிறாய்
ஆற்றில் மண் அணை கட்டி மீன் பிடிக்கும் வருவாய் பெறும் நாட்டில் ஊரைச் சுடுகிறாய். (பாண்டிய நாடு போலும்)
அந்த வெளிச்சத்தில் அந்த நாட்டு மக்கள் அழுவதை விரும்புகிறாய்
இது நல்லதல்ல

என்று கரிகால் பெருவளத்தானுக்கு,
புலவர் கருங்குழல் ஆத்தனார்
அறிவுரை கூறுகிறார்.

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

புறநானூறு 7


இப்படிச் சுட விரும்பலாமா


வழுதி - பெருவழுதி - பல்யாகசாலை முதுகுடுமி History in Purananuru 6

வடாஅது பல்யாகசாலை முதுகுடுமி குமரி தொடுகடல் பௌவம் கீழது மேலது ஆனிலை உலகம் தெரிகோல் ஞமன் இலியரோ கடற்படை பாசவல் பணியியர் அத்தை முக்கட்செல்வர் நகர்வலம் இறைஞ்சுக வாடுக செலியர் குடுமி தண்டா

வடக்கில் பனிமலை, தெற்கில் குமரி, கிழக்கில் தொடுகடல், மேற்கில் தொன்று முதிர் பௌவம், கீழே முப்புணர் அடுக்கிய நீர்நிலை உலகம், மேலே ஆனிலை உலகம் – இந்த எல்லைக்குட்பட்ட அனைத்திலும் புகழ் பெறுக.
அதற்காக எமன் கோலோச்சுவது போல ஒருதிறம் பற்றாமல் நடந்துகொள்.
கடற்படை நடத்தி, யானை நடத்தி கோட்டைகளை வென்று கொண்டுவந்த அணிகலன்களைப் பரிசிலர்க்கு வழங்குக. 
சிவன் நகர்வலம் வரும்போது உன் குடை வணங்கட்டும்.
நான்மறை முனிவர் கையேந்தும்போது உன் தலை வணங்கட்டும். 
பகைவர் நாட்டைச் சுடும் புகையால் உன் மலர்மாலை வாடட்டும்.
மனைவியர் ஊடும்போது உன் சினம்  தணியட்டும். 
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
மதியம் போலவும், ஞாயிறு போலவும் நிலமிசை வாழிய பெரும.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை

காரி கிழார் பாடியது.

புறநானூறு 6


முக்கட் செல்வர் நகர்வலம்

இதுபோல்
கடற்படை குளிர்ப்ப மண்டி
போரிட்டான் பெருஞ்சேரல் இரும்பொறை - சேரமான், கருவூர் ஏறியவன், ஒள்வாட் கோ History in Purananuru 5

எருமை கானகநாடன் முன்பின் மொழிவல் நிரயம் குழவி ஓம்புமதி அளிதோ குரைத்தே

எருமை மாடு போல் கருங்கல் பாறை.
பாறைகளுக்கு இடையே யானைகள் மேயும்
ஆடுமாடு போல் அதிக அளவில் மேயும்
இப்படிப்பட்ட கானக நாட்டு மன்னன்
புலவர் கூறுக்கிறார்
பெரும
அருளும் அன்பும் நீக்கியவர் நிரயம் செல்வர்
அவர்களுடன் சேராதே
குழந்தையை வளர்க்கும் தாய் போல் நாட்டைக் காப்பாற்று.

இவனை
சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
என்று புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடுகிறார்
புலவர் நரிவெரூஉத்தலையார்
நரியும் கண்டு பயந்தோடும் தலை உடையவராம்
இந்த அரசனைக் கண்டால் உன் உடம்பு நல்ல உடம்பாகும்
என்று கூறினார்களாம்
அவ்வாறே இவனைக் கண்டதும் புலவருக்கு நல்ல உடம்பு வந்துவிட்டதாம்
அதன் பின் இந்தப் பாடலைப் பாடினாராம்
பாடல்களைத் தொகுத்தவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
இதற்கான சான்று எதுவும் இந்தப் பாடலில் இல்லை

புறநானூறு 5

காட்டில் யானைகள்இளஞ்சேட்சென்னி - உருவப் பல்தேர் History in Purananuru 4

சென்னி பல்தேர் வாள் தாள் தோல் கொல்ல் எருத்து வவ்விய இவுளி தூவா குழவி உடற்றியோர் சென்னி பரணர் 

வாள் – வெற்றியைத் தந்து குருதி படிந்து செவ்வானம் போன்று உள்ளது
தாள் – குருதி படிந்த யானைத் தந்தம் போன்றுள்ளது
தோல் கவசம் – அம்பால் துளை பட்டுள்ளது
குதிரை – கடிவாளம் கடித்த வாயால் சிவந்துள்ளது
களிறு – கோட்டைக் கதவைக் குத்தி நுனி மழுங்கி எமன் போல் உள்ளது
நீயோ – கடலில் தோன்றும் கதிரவன் போலத் தேரில் வருகிறாய்
உன்னைச் சினமூட்டியவர் நாடு – தாய்ப்பால் இல்லாக் குழந்தை போல் அழுகிறது

சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னியை,
பரணர் பாடியது.


அம்பின் துளை படாத தோல்

வழுதி - பெரும்பெயர் - கருங்கை ஒள்வாள் History in Purananuru 3

உவவு ஓங்கல் நிழற்ற நேஎம் கவுரியர் மருக இரும்பிடர் மருந்தில் கூற்றம் பிடர்த்தலை பெரும்பெயர் வழுதி இல்ல பார்வல் பதுக்கை முன்னம் பருந்து உன்னமரம் கவலை நசை கருங்கை 

கவுரியர் குலப் பாண்டியரின் மருகன்
ஈகை குணத்தவன்
கற்பரசியின் கணவன்
கயிற்றால் பிணித்த யானைமேல் இருந்துகொண்டு போரிட்டு மருந்தில் கூற்றம் என்னும் நிலப்பகுதியைக் கைப்பற்றியவன்.
சொன்ன சொல் தவறாதே.
போரில் வீழ்ந்த படைவீரர்களுக்கும் இரவலர்களுக்கும் உதவுவாயாக என்று புலவர் இவனை வேண்டுகிறார்.

வழுதி - கருங்கை ஒள்வாள் ஏந்தியவன்
பெரும்பெயர் வழுதியை
இரும்பிடர்த்தலையார் பாடியது.

புறநானூறு 3

இரும்பிடர்த் தலையில் ஏறியவன்

உதியஞ்சேரலாதன் History in Purananuru 2


மண் நிலம் விசும்பு வளி புணரி வானவரம்பன் ஐவர் ஈரைம்பதின்மர் பெருஞ்சோறு நிலியரோ அத்தை இமயம் பொதியம் நவ்வி உதியஞ்சேரலாதன் முரஞ்சியூர் முடிநாகராயர்


நிலம் நீர் தீ காற்று விசும்பு பற்றிய அறிவியல் கண்ணோட்டம் 
இவற்றின் தன்மை போல, குணம் படைத்தவன் 
பால் புளிக்காதது போல நிறைகுணத்துடன் இருப்பாயாக 
இமயமலை பொதியமலை போல விளங்குக. 

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை 
முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.


முத்தீ வெளிச்சம்
இந்த வெளிச்சத்தில் இமய மலையிலுள்ள நவ்விமான் உறங்குமாம்


தவத்தோன் History in Purananuru 1


கண்ணி கொன்றை காமர் ஊர்தி மிடறு அந்தணர் நுவல் கரக்கினும் பதினெண் ஏமம் கரகம்

தலையிலும் மார்பிலும் கொன்றை மாலை
ஊர்தியும் கொடியும் ஏறு
கழுத்தில் நஞ்சு
ஒருபக்கம் பெண்ணை மறைத்து வைத்துள்ளான்
நெற்றியில் பிறை
கையில் கரகம்
தலையில் சடைமுடி
எல்லா உயிரையும் காப்பவன்
தவம் செய்துகொண்டிருப்பவன்
யார்
சிவன்


      பெருந்தேவனார் – பாரதம் பாடியவர்     

தவத்தோன்

திருக்குறள் அறிவுடைமை Tirukkural possession of wisdom

421 
உள் அழிக்கல் ஆகா அரண் 

422
சென்ற விடத்தால் செலவிடாத் தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு

423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்ப தறிவு

424 
எண்பொருள ஆச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் 

425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

426
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வது உறைவது அறிவு 

427
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

430
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

திருக்குறள் அறிவுடைமை possession of wisdom

எல்லாம் உடையார் Tirukkural 430

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் 
என்னுடையர் ஏனும் இலர் 

அறிவுடைமை possession of wisdom

Those who have wisdom have everything in life.
Those who have no wisdom have nothing even though he has any other things.

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

அறிவுடையார் அனைத்தும் உடையவர் ஆவார்
அறிவில்லாதவர் வேறு எதனைப் பெற்றிருந்ததாலும் 
இல்லாதவரே ஆவர்.

அதிர வருவது ஓர் நோய் Tirukkural 429

எதிர் அதா காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர் நோய்

அறிவுடைமை possession of wisdom

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

No evil attack them who know the evil in advance and prevent it not to attack. 

வரும் துன்பத்தை முன்கூட்டியே அறிந்து 
வராமல் காத்துக்கொள்ளும் அறிவுடையவர்களுக்கு 
அதிர்ச்சி தரும் துன்பம் வராது.

அஞ்சாமை, அஞ்சல் Tirukkural 428

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில் 

அறிவுடைமை possession of wisdom

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்

Not to dread the dread-worthy is folly.  
To dread for the dread-worthy is the character of men of wisdom. 

அஞ்சும் செயலுக்கு அஞ்சாமல் இருப்பது அறிவு இல்லாமை
அஞ்சும் செயல் செய்ய அஞ்சுவது அறிவுடையவர் செயல்


Wednesday, 27 June 2018

ஆவது அறிவார் Tirukkural 427

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் 
அஃது அறிகு அல்லாதவர் 

அறிவுடைமை possession of wisdom
The wise are those who know what will happen. 
The unwise are those who know not will happen.  
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

அறிவுடையார் ஒரு செயலால் விளைய இருப்பதை முன்கூட்டியே அறிவர்.
விளைவை அறிய முடியாதவர் அறிவில்லாதவர் 

உலகத்தோடு உறைவது அறிவு Tirukkural 426

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு 
அவ்வது உறைவது அறிவு 

அறிவுடைமை possession of wisdom


To live adjusting the world is wisdom; that the world is adopting the way of life. 

எவ்வ துறைவ துலகம் உலகத்தோ
டவ்வ  துறைவ தறிவு

உலகம் எவ்வாறு வாழ்கிறது? 
அவ்வாறே உலகத்தோடு ஒத்து வாழ்வதுதான் அறிவுடைமை. 

ஒட்பம் Tirukkural 425

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் 
கூம்பலும் இல்லது அறிவு 

அறிவுடைமை possession of wisdom

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு

Adjusting to world behavior is wisdom. Knowledge of a man will not shrink or enlarge. 
  • ஒப்பு நோக்குக - உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் - திருக்குறள் 
ஒட்பம் - பலர் போற்ற ஒளிரும் நல்லறிவு 

உலகில் உள்ளவர்களை அரவணைத்துக்கொண்டு வாழ்வதுதான் ஒட்பம். அறிவு மலர்வதும் கூம்புதலும் இல்லை. 
  • நுண்ணிய நூல் பல கற்பினும் தன் உண்மை அறிவே மிகும் - திருக்குறள் எண்பொருள் Tirukkural 424

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர் வாய் 
நுண் பொருள் காண்பது அறிவு 

அறிவுடைமை possession of wisdom

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு

Saying simple words to understand thoroughly and understanding intending point of others’ sayings is wisdom.  

எளிதாகப் பொருள் விளங்கும்படி, கேட்பவர் காதுகளில் ஏறும்படிச் சொல்லுதலும், பிறர் வாயிலிருந்து வரும் சொற்களில் நுட்பமான பொருளைக் கண்டறிவதும் அறிவுடைமை ஆகும்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு Tirukkural 423

எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் 
மெய் பொருள்  காண்பது அறிவு 

அறிவுடைமை possession of wisdom


It is what kind of word, from what kind of men, one heard, to find out the truth of the message is called wisdom  

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்ப தறிவு

எந்தச் செய்தியை  யார் யார் சொல்லக் கேட்டாலும் அந்தச் செய்தியில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிவது  அறிவுடைமை ஆகும்.

நன்றின்பால் உய்ப்பது அறிவு Tirukkural 422

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ 
நன்றின்பால் உய்ப்பது அறிவு 

அறிவுடைமை possession of wisdom

Controlling the sensitive knowledge and diverting towards right direction is wisdom.

சென்ற விடத்தால் செலவிடாத் தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு

மனம் செல்லும் இடத்திற்குச் செல்ல விடாமல்,
நல்லவை இருக்கும் இடத்திற்குச் செலுத்துவது அறிவு ஆகும்.

அற்றம் காக்கும் கருவி Tirukkural 421

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள் அழிக்கல் ஆகா அரண் 

அறிவுடைமை possession of wisdom


Wisdom is a kind of defensive fort against one’s ruin. This inner fortress could not be destroyed by his enemies.  

அறிவற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

அற்றம் - அற்றுப்போதல், அழிவு - பரிமேலழகர் 
அற்றம் - குறைபாடு - மணக்குடவர் 

அற்றம் மறைக்கும் பெருமை 

அறிவுடைமை தன்னிடமுள்ள குறைபாடுகளை மறைக்க உதவும் கருவி ஆகும். இது உள்ளே புகுந்து அழிக்க முடியாத பாதுகாப்புக் கோட்டையாக ஒருவனுக்கு இருக்கும்.

அறிவுடைமை அரசனை அழிவிலிருந்து பாதுகாக்கும் மனக்கோட்டை.

தொல்காப்பியம் 2-6 வினையியல் verbs

நூற்பா விளக்கம் தொடுப்பு

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்.    1

காலம்தாமே மூன்று என மொழிப.       2

இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந் நிலை உடைய தோன்றலாறே.             3

குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்
அம் மூ உருபின தோன்றலாறே.            4

அவைதாம்,
அம் ஆம் எம் ஏம் என்னும் கிளவியும்
உம்மொடு வரூஉம் என்னும்
அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்

என்னும்
அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு
என் ஏன் அல் என வரூஉம் ஏழும்
தன் வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.              6

அவற்றுள்,
செய்கு என் கிளவிவினையொடு முடியினும்
அவ் இயல் திரியாது என்மனார் புலவர்.           7

அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்

அர் ஆர் என வரூஉம் மூன்றும்

மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை
காலக் கிளவியொடு முடியும் என்ப.    10

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட
முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே.        11

அவற்றுள்,
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி

அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே.           13

பால் அறி மரபின் அம் மூ ஈற்றும்

ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும்.            15

அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்
கண் என் வேற்றுமை நிலத்தினானும்
ஒப்பினானும் பண்பினானும் என்று

அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பேகாலம்.        17

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்

என வரூஉம் இறுதி
அப் பால் மூன்றே பலவற்றுப் படர்க்கை.        19

ஒன்றன் படர்க்கை ஊர்ந்த
குன்றியலுகரத்து இறுதி ஆகும்.              20

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அம் மூ இரண்டும் அஃறிணையவ்வே.               21

அத் திணை மருங்கின் இரு பால் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்என் வினாவே.      22

இன்று இல உடைய என்னும் கிளவியும்
அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும்
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும்
பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ

பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த
அன்ன மரபின் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி அஃறிணை மருங்கின்

முன்னிலை வியங்கோள் வினையெஞ்சுகிளவி
இன்மை செப்பல் வேறு என் கிளவி
செய்ம்மன செய்யும் செய்த என்னும்
அம் முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி

அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும்.            26

பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல் ஓரனைய என்மனார் புலவர்.     27

எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம் பாற்கும் உரிய தோன்றல் ஆறே. 28

அவற்றுள்,
முன்னிலை தன்மை ஆயீர் இடத்தொடு
மன்னாது ஆகும் வியங்கோட்கிளவி.               29

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ் வயின் மூன்றும் நிகழும் காலத்துச்

செய்து செய்யூ செய்பு செய்தென
செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என

பின் முன் கால் கடை வழி இடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் அவற்றுஇயல்பினவே.     32

அவற்றுள்,
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின.     33

அம் முக் கிளவியும் சினை வினை தோன்றின்
வினை ஓரனைய என்மனார் புலவர்.  34

ஏனை எச்சம் வினைமுதலானும்
ஆன் வந்து இயையும் வினைநிலையானும்
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப.               35

பல் முறையானும் வினையெஞ்சுகிளவி
சொல் முறை முடியாது அடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.            36

நிலனும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ் அறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே.   37

அவற்றொடு வரு வழி செய்யும்என் கிளவி
முதற்கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே.      38

பெயரெஞ்சுகிளவியும் வினையெஞ்சுகிளவியும்
எதிர் மறுத்து மொழியினும் பொருள் நிலை திரியா.             39

தம்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின்
எச் சொல் ஆயினும் இடைநிலை வரையார்.               40

அவற்றுள்,
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ் இடன் அறிதல் என்மனார் புலவர்.             41

எய்து இடன் உடைத்தே வாராக் காலம்.           42

முந் நிலைக் காலமும் தோன்றும் இயற்கை
எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து
மெய்ந் நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்.            43

வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
விரைந்த பொருள என்மனார் புலவர். 44

மிக்கதன் மருங்கின் வினைச்சொல் சுட்டி
அப் பண்பு குறித்த வினைமுதற் கிளவி
செய்வது இல் வழி நிகழும் காலத்து
மெய் பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே.           45

இது செயல் வேண்டும் என்னும் கிளவி
தன் பாலானும் பிறன் பாலானும்.          46

வன்புற வரூஉம் வினா உடை வினைச்சொல்

வாராக் காலத்து வினைச்சொல் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்

செயப்படுபொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே.       49

இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி.               50Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி