Thursday, 30 November 2017

தொல்காப்பியம் 2-3

உயிரளபெடை
 1. ஓசை குறையும்போது நெட்டெழுத்தை அடுத்து அதன் குற்றெழுத்து சேர்ந்து நின்று நெடிலின் அளபினை ஆஅ, ஈஇ, ஊஉ – கோஒ – என்பது போல் கூட்டித் தரும். 8
 2. இப்படி அளபு எடுக்கும்போது ஐ, ஔ ஆகியவை ஐஇ, ஔஉ என்று வரும். 9
நூற்பா - \ அடி இணைப்புக் குறி

 1. குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் \ நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே. 8
 2. ஐ ஔ என்னும் ஆயீர் எழுத்திற்கு \ இகர உகரம் இசை நிறைவு ஆகும். 9

தொல்காப்பியம் 2-2


கால் மாத்திரை மெய்

செக்குக்கணை, சுக்குக்கோடு என்பது போல் இடைப்பட்டுக் குறுகும் எழுத்துக்களும் உண்டு. 4

கால் மாத்திரை ஆய்தம்

எஃகு, கஃசு என்பன போல் குறிலை அடுத்து வரும் ஆய்தம் குறுகி ஒலிக்கும். 5

கால் மாத்திரை ஆய்தம்

கல், முள் போன்ற ஈற்றெழுத்துக்கள் திரியும்போது கஃறீது, முஃடீது என்று ஆய்தம் தோன்றும். 6

அரை மாத்திரை ஆய்தம்


கஃறென்றது (கல்லுப்போல் ஆகியது) என்பது உருவு. சுஃறென்றது (சுல் என்று முள் குத்தியது) இசை. இப்படிப்பட்ட இடங்களில் ஆய்த எழுத்து ஒலி குன்றாமல் தோன்றும். 7

நூற்பா - \ அடியிணைப்பு
 1. இடைப்படின் குறுகும் இடனுமார் உண்டே \ கடப்பாடு அறிந்த புணரியலான. 4
 2. குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி \ உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே. 5
 3. ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும். 6
 4. உருவினும் இசையினும் அருகித் தோன்றும் \ மொழிக் குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா \ ஆய்தம் அஃகாக் காலையான. 7

தொல்காப்பியம் 2-1

குற்றியலிகரம்

 1. கேள், சொல் என்பன ஏவும் சொற்கள். யா என்பது உரையசைக் கிளவி. இவை புணரும்போது ம் இடையில் சேர்ந்து கேண்மியா, சொன்மியா என வரும். 1
 2. வரகு – இதில் கு குற்றியலுகரம். கு அரைமாத்திரையாக ஒலிக்கும். இது போன்ற குற்றியலுகர மொழியோடு யா எழுத்தை முதலாகக் கொண்ட சொல் வந்து சேருமானால் வரகியாது என்பது போல் புணரும். இதில் கி குற்றியலிகரம். முடிச்சியாது, பூட்டியாது, காதியாது, பார்பியாது, ஊற்றியாது என பிற குற்றியலிகரங்களையும் கண்டுகொள்க. 2 
 3. நா என்னும் நெடிலை அடுத்து நாகு என்றும், வர என்னும் தொடர் எழுத்துக்களை அடுத்து வரகு என்றும் குற்றியலுகரம் வருவது போல் வல்லின எழுத்துக்கள் ஆறனோடும் வரும். (பெயர்ச் சொற்கள் கு சு டு து பு று என்னும் எழுத்துக்களில் முடியும்போது உகரம் குறையும். வினைச்சொல் ஆயின் குறுகாது. வரகு – குற்றியலுகரம். பழகு – இது முற்றியலுகரம்) 3
நூற்பா - \ அடி இணைப்பு 
 1. குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் \ யா என் சினைமிசை உரையசைக் கிளவிக்கு ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே. 1
 2. புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே \ உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். 2
 3. நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் \ குற்றியலுகரம் வல் ஆறு ஊர்ந்தே. 3
தொல்காப்பியம் 1-2 மொழி மரபு

Monday, 27 November 2017

Tirukkural 141-150 Against coveting another’s wife

Against coveting another’s wife 

 1. One’s wife is his property; covert to lust other’s wife, the man of well-versed in the science of virtue and wealth, do not like. 141
 2. Adulterous hunter on another man’s wife is the lowest among fools. 142
 3. The man who aims to lust friend’s wife is a man like dead. 143
 4. The status of a man becomes nothing when he attempts to enter another’s house for adultery. 144
 5. The stain of guilty will be a score to a man who enjoys another man’s wife. 145
 6. Hatred, sin, fear and shame will stand on lusty adulterer on another’s wife. 146
 7. Who avoid adultery on another’s wife is a man of virtue. 147
 8. Avoiding adultery on another’s wife is not only the greatness in manliness but also the great-virtue to his credit. 148
 9. Who is great? The man who does not hug the wife of another man is. 149
 10. Though the sinner does breaking virtue, it is better to him, at least, avoid lust on another man’s wife. 150    


பிறன்-இல் விழையாமை

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 141

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார். 143

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். 144

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். 147

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. 148

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று. 150

திருக்குறள் பிறன் இல் விழையாமை Tirukkural 141-150

பிறன்-இல் விழையாமை

பிறன் மனைவியை விரும்பாமை

பிறன் மனைவியை விரும்புபவர்

 1. பேதையர் 141 
 2. கடைப்பட்டவர் 142
 3. செத்தவருக்குச் சமமானவர் 143 
 4. எப்படிப்பட்டவர் என்றாலும் அற்பர் 144 
 5. பழியே பெறுவர் 145 
 6. பகை, பாவம், அச்சம் ஆகியவற்றையும் சேர்த்துப் பெறுவர் 146 
 7. விரும்பாதவர் அறநெறியாளர் 147 
 8. விரும்பாமை பேராண்மை 148 
 9. விரும்பாதவர் பாராட்டுக்கு உரியவர் 149 
 10. பிறன் மனைவியை விரும்பாமை நல்ல அறம் 150 


பிறனுக்குப் பொருளாகியவளை ஆசைப்பட்டு அடைய நடந்துகொள்ளும் பேதைமை உலக அறநிலை கண்டவர்களிடம் இல்லை. 141
கடைப்பட்ட அறநிலையில் வாழ்பவர்கள் அனைவரிலும் பிறன் வீட்டு வாசலில் அவன் மனைவியை அடைய ஆசைப்பட்டு நிற்பவரைப் போன்ற அறிவில்லாதவர் ஆரும் இல்லை. 142.
நம்பியவன் வீட்டில் அவன் மனைவியை விரும்பித் தீமை செய்பவர் செத்தவர்க்கு ஒப்பானவர். 143
தினை
தினை அளவு சிறிதும் எண்ணாமல், பிறன் மனைவியை விரும்புபவர், எத்தனைப் பெரியவர் ஆனால்தான் என்ன? அற்பரே. 144
எளிது என எண்ணிப் பிறன் மனைவியிடம் வரம்பு கடந்து நடந்துகொள்பவன்மீது பழியானது நீங்காமல் நிற்கும். 145
பிறன் மனைவி என்னும் எல்லையைக் கடந்து நடந்துகொள்பவனிடம் பழி, பாவம், பகை, அச்சம் என்னும் நான்கும் நீங்காமல் நிற்கும். 146
பிறன் இயல்பானவளின் பெண்மையை விரும்பாதவன் அறத்தின் இயல்போடு இல்லத்தில் வாழ்பவன் எனப் போற்றப்படுவான். 147
பிறன் மனைவியை அடைய விரும்பிப் பார்க்ககாமல் இருக்கும் பேராண்மை உடைய சான்றோர்க்கு அது அறமாகவும், ஆன்ற ஒழுக்க நெறியாகவும் இருக்கும். 148
நன்மை பெறுவதற்கு உரிய  யார் என்றால், பிறன் ஒருவனுக்கு உரியவள் ஒருத்தியின் தோளை அணைக்காதவரே ஆவார். 149
அறநெறியை வரையறுத்துக்கொள்ளாமல் அறம் அல்லாதனவற்றைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் இருப்பது நல்லது. 150

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 141

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார். 143

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். 144

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். 147

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு. 148


நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று. 150

Sunday, 26 November 2017

Tirukkural 131-140 Good Decorum, Good habit in society

Good Decorum

Good habit in society 

 1. Good habit yields dignity in society; so it will be guarded more than a life. 131
 2. As the virtue is the only habit that guards one, one must guard it even in disturbance. 132
 3. Good habit is good family; slippery will pull him anomaly. 133
 4. A man in Brahman family, who is considered as high-birth, can recall his forgotten poems; but cannot redeem conduct if loss. 134
 5. The greedy man cannot become rich; so the man of ill-behavior shall not gain dignity. 135
 6. Those who in the firm form of virtue will never slip from their good habit. 136
 7. Good conduct enables Man; slippery decrease a man to mean. 137
 8. Good habit is a seed that yields helping tendency in his part and other’s part. 138
 9. Foul words will not slip from the lips of a good-man. 139
 10. Accordance of good society is good habit; those who do not learn this, is idiot. 140   

ஒழுக்கம் உடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும். 131

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. 132 

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 134

அழுக்கா(று) உடையான்கண் ஆக்கம்போன்(று) இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. 135

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. 136

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 139

உலகத்தோ(டு) ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140

திருக்குறள் ஒழுக்கம் உடைமை Tirukkural 131-140

ஒழுக்கம் உடைமை

 1. ஒழுக்கம் உயிரினும் மேலானது 131 
 2. வருந்தினாலும் அதனைக் காத்துக்கொள்ள வேண்டும். 132
 3. ஒழுக்கந்தான் உயர்குடி 133
 4. பார்ப்பானுக்கும் வேதம் ஓதுவதை விட ஒழுக்கந்தான் மேன்மை 134 
 5. ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை. 135
 6. ஒழுக்கத்திலிருந்து வழுக்கினால் துன்பம் 136
 7. ஒழுக்கத்தால் மேன்மை; இழுக்கத்தால் பழி 137 
 8. ஒழுக்கம் உதவி பெற ஊன்றும் விதை 138 
 9. ஒழுக்கம் உடையவர் தீயன பேசவும் கூடாது 139
 10. ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களோடு ஒட்டிக்கொண்டு செல் 140 
 1. ஒழுக்கம் ஒருவனுக்கு மேன்மையைத் தருவதால் அது உயிரைக் காட்டிலும் மேலானதாகப் போற்றப்படும். 131
 2. எப்படிப் பார்த்தாலும் ஒழுக்கமே ஒருவன் வாழ்க்கைக்குத் துணையாக நிற்கும். அதனால் ஒழுக்கம் பெருஞ் சுமையாக இருந்தாலும் அதனைச் சுமந்து பேணவேண்டும். 132 
 3. ஒழுக்கம் உடைமையே உயர்ந்த குடிமைச் செயல். ஒழுக்கத்திலிருந்து வழுவுதல் இழிபிறப்பு. 133
 4. வேதம் ஓத மறந்தாலும் திரும்பவும் ஓதிக்கொள்ளலாம். ஒழுக்கம் குன்றினால் உயர்ந்ததாகக் கருதப்படும் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும். 134
 5. பொறாமை கொண்டவனிடம் செல்வம் இருக்காது. அதுபோல, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு நிலைபெற்று நிற்பதில்லை. 135 
 6. மனவலிமை கொண்ட சான்றோர் ஒழுக்க நெறியிலிருந்து தவறமாட்டார்கள். வழுக்கினால் பெருந்துன்பம் விளையும் என்பதை அவர்கள் அறிவார்கள். 136 
 7. ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவர். வழுக்கினால் யாரும் அடையாத பழியை அடைவர். 137 
 8. நல்ல ஒழுக்க நெறி பிறர் உதவுவதற்கு நாம் ஊன்றிக்கொள்ளும் விதை. தீய ஒழுக்கம் என்றென்றும் துன்பந்தான் தரும். 138 
 9. ஒழுக்கம் உடையவராக நடந்துகொண்டாலும், தீயவற்றை தவறிப்போயும் தன் வாயால் சொல்லாமல் இருக்க வேண்டும். 139 
 10. ஒழுக்க நெறியைப் பின்பற்றும் உலகத்தவரோடு பொருந்தி வாழ்வதே ஒழுக்கம். இந்த ஒழுக்க நெறியைக் கற்றுக்கொள்ளாதவர் அறிவில்லாதவரே ஆவார். 140 
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும். 131

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. 132 

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். 134

அழுக்கா(று) உடையான்கண் ஆக்கம்போன்(று) இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு. 135

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. 136

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 139

உலகத்தோ(டு) ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140

Tirukkural 121-130 Self control

Self control

 1. Self control leads a man higher society; ignorance pulls him to lower. 121
 2. Self control is a treasure of one’s life. 122
 3. Self control is wisdom that gives benevolence. 123
 4. The appearance of self control is bigger than the mountain 124
 5. Self control of a rich is an ornament to his credit. 125
 6. As a tortoise shrinks its four legs and one head in its shell, a man who controls his five senses gains in all of his births of seven-fold. 126
 7. Control the tongue at least; otherwise you will be scold. 127
 8. If one word yields evil, all words end in evil. 128
 9. Fire burning can be cured; the scar of tongue-burning by evil words cannot be cured. 129
 10. Virtue seeks to join with him who is free of anger. 130 

அடக்கம் உடைமை 


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123

நிலையின் திரியா(து) அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. 125

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கம் ஆற்றின்
எழுமையும் ஏமாப்(பு) உடைத்து. 126

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 127

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். 128

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

திருக்குறள் அடக்கம் உடைமை Tirukkural 121-130

அடக்கம் உடைமை

 1. அடக்கம் மேலோன் ஆக்கும் 121
 2. அடக்கம் உயிருக்குப் பாதுகாப்பு 122
 3. அறிந்துகொண்டு அடங்கி நட 123 
 4. அடங்கியவன் தோற்றம் மலையைக் காட்டிலும் பெரியது 124
 5. அடக்கம் செல்வர்க்கு வேண்டும் 125 
 6. ஐம்புலன்களையும் அடக்கி வாழ் 126
 7. அவற்றில் நா அடக்கம் இன்றியமையாதது 127 
 8. அடங்காத சொல்லால் பொருள் வருமானால் அது நல்லது அன்று 128
 9. நாவினால் சுட்டது ஆறாது 129 
 10. சினத்தை அடக்குதல் மேலான அறம் 130 
 1. அடக்கம் ஒருவனைத் தன்னைக் காட்டிலும் மேம்பட்டு இன்புறும் அமரர்களோடு சேர்க்கும். அடங்காமை துன்ப இருளில் கிடப்பவர்களோடு சேர்த்துத் துன்புற வைக்கும். 121
 2. அடக்கம் என்னும் பொருளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதுதான் உயிரைக் காக்கும். 122 
 3. அறியவேண்டுவனவற்றை அறிந்துகொண்டு அடக்கத்துடன் வாழ்ந்தால், அது அவரைப் பாதுகாப்பாக வைத்து, சிறப்பினையும் தரும். 123 
 4. அறிந்த நிலையில் திரியாமல் அடக்கத்துடன் இருப்பவன் தோற்றம் மலையைக் காட்டிலும் மிகவும் பெரியது 124 
 5. பணிவு என்பது எல்லார்க்கும் நல்லதுதான். என்றாலும், செல்வர் பணிவு அவருக்கு வேறு ஒரு செல்வம் ஆகும் 125 
 6. ஒரு ஓட்டுக்குள் ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புக்களையும் அடக்கிக்கொள்வது போல, ஒருவன் தன் ஐந்து புலன்களையும் அடக்கிக்கொண்டு வாழ்வானேயானால் அது அவனுக்கு ஏழு பிறவியிலும் பாதுகாப்பினைத் தரும். 126
 7. எதனை அடக்கிக்கொள்ளாவிட்டாலும், நாக்கை அடக்கிக்கொள். இல்லாவிட்டால் பழி வந்து துன்புறுவர். 127
 8. தீய சொல்லால் பொருள்-பயன் கிட்டுமானால், அது நல்லதாக இருக்காது. 128 
 9. தீ சுட்டால் புண் ஆகும். அது ஆறிவிடும். நாவினால் சுட்டால், அது வடுவாக மாறி என்றும் ஆறாது. 129 
 10. சினத்தை வெளிக்காட்டாமலும் கற்றதைப் பகட்டாமலும் நடந்துகொள்பவனிடம் அறம் என்னும் தெய்வத் திருமகள் சேர்ந்துகொள்வாள். 130 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123

நிலையின் திரியா(து) அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து. 125

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கம் ஆற்றின்
எழுமையும் ஏமாப்(பு) உடைத்து. 126

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. 127

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். 128

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

Saturday, 25 November 2017

Tirukkural Equity 111-120

Equity

 1. Equity is good; if it is balanced apart from sector.  111
 2. The wealth of the man of equity will never spoil; and will help to his posterity. 112
 3. Turn away the wealth in the day itself, though it is profitable, that comes in the way of non-equity. 113
 4. The worthy and unworthy of a man will be seen in his posterity that he earns. 114
 5. The jewel of mind of equity, the man of wise adorns, for it is natural the wealth will loss and gain. 115
 6. One who leaves equity and does injustice, he is awaiting for his prediction. 116
 7. The poverty of a man of equity, the world will not criticize. 117
 8. As a balance holds equal scale, one must hold his mind; that is his jewel. 118
 9. Justice will be strait, unbending and twisted-less. 119
 10. If a trader treat others as he is, he will gain more profit; so the man of equity will behave. 120 

நடுவு நிலைமை


தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.             111.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.  112.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.       113.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். 114.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்(குஅணி.        115.

கெடுவல்யான் என்ப(துஅறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.               116.

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.               117.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   118

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.                119

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.            120

Friday, 24 November 2017

திருக்குறள் நடுவு நிலைமை Tirukkural 111-120

12 

நடுவு நிலைமை

 1. சூழலுக்கு ஏற்ப நடந்துகொள். 111
 2. அது செப்பம் என்னும் நடுவு-நிலைமை 112
 3. செப்பம் இல்லாச் செல்வம் வேண்டாம் 113
 4. எஞ்சி நிற்கும் புகழுடையார் தக்கார் 114
 5. நப்பாசையால் நெஞ்சம் வளையாதே 115
 6. வளைக்கும் செயல் வாழ்வைக் கெடுக்கும் 116
 7. தக்கார் வறுமை தாழ்வு அன்று 117
 8. தராசு போல் சொல் 118
 9. உள்ளம் வளைந்தால் சொல் வளையும் 119
 10. தன்னைப் போலப் பிறரைப் பேணு 120

 1. சூழ்ந்துள்ள பகுதிக்கு ஏற்ப நடந்துகொள்ளும் தகைமை நல்லது. 111
 2. செப்பம் உடையவன் செல்வம் சிதையாமல் அவன் வழிமுறையினருக்கும் பாதுகாப்பாக இருக்கும். 112
 3. நடுவு நிலைமை தவறி வந்து சேரும் செல்வத்தை அன்றே கைவிட்டு விலக வேண்டும். 113
 4. இவர் தகைமை உடையவர், இவர் தகைமை இல்லாதவர் என்பதை அவருக்குப் பின்னர் எஞ்சிநிற்கும் புகழ், பழி ஆகியவற்றால் தெரிந்துகொள்ளலாம். 114
 5. செல்வம் பெருகுவதும் கெடுதலும் உலகில் நிகழாமல் இருப்பதில்லை. அதனால் நெஞ்சம் வளைந்து ஒருவர் பக்கம் சாயாமல் இருப்பது நல்லது. 115
 6. நெஞ்சம் நடுவு நிலைமை மாறிச் செயல்பட்டால் கெடப்போகிறோம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். 116 
 7. நடுவு நிலைமையோடு நல்லது செய்பவன் வறுமை அடைந்தால் அதனை உலகம் தாழ்வாக எண்ணாது. 117
 8. தராசுக் கோல் போல எந்தப் பக்கமும் சாயாமல் இருக்கும் நடுவுநிலைமைதான் சான்றோர்க்கு அணிகலன் ஆகும். 118
 9. சொல் வளையாமல் இருப்பதுதான் செப்பம். உள்ளம் வளையாமல் இருந்தால் இது தானே அமைந்துவிடும். 119
 10. தன்னைப் போல் பிறரையும் பாதுகாக்கும் நடுவுநிலைமை வாணிகம் செய்தால் அந்த வாணிகம் வருவாயைப் பெருக்கும். 120


தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.             111.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.  112.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.       113.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். 114.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்(கு) அணி.        115.

கெடுவல்யான் என்ப(து) அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.               116.

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.               117.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   118

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.                119

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்.            120
Friday, 17 November 2017

Tirukkural 101-110 Gratitude

11 

Gratitude 

 1. Having done no help, received help is a dept that couldn't be returnable by giving earth or heaven. 101
 2. Help rendered at a time in need is grater than the earth. 102
 3. Help rendered not expecting fruit, is greater than the sea by its credit. 103
 4. Help given though small as a millet, the man of gratitude like it as large as a Palmyra tree. 104
 5. The measurement of help is not at the quantity, but the quality of the mind of the receiver. 105
 6. It is enough not forgetting the friendship of the Pure; but it is the duty of a man not forsaking the friendship of a man who helped him. 106
 7. A good man will remember all the time in whatsoever he maybe, the friendship of a man removed his tears by help. 107
 8. Not forgetting the help is good; forgetting the helpless deed, the day itself is good. 108
 9. If one think the other's only one help, the other deadly harms he received from him will spoil. 109
 10. Virtue-killer may be saved; there is no other way the benefit-killer be saved. 110
செய்ந்நன்றி அறிதல்

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது. 101

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது. 103

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார். 104

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. 107

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 108

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி