Tuesday, 31 October 2017

மணிமேகலை 25-5 Manimegalai 25-5

காயங்கரை மாதவன் சொன்னது
5
புலவன் முழுதும் பொய்இன்று உணர்ந்தோன்
உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்
அந்நாள் அவன்அறம் கேட்டோர் அல்லது
இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை
மாற்றுஅருங் கூற்றம் வருவதன் முன்னம்  50
போற்றுமின் அறம்எனச் சாற்றிக் காட்டி
நாக்கடிப் பாக வாய்ப்பறை அறைந்தீர்

காயங்கரை ஆற்றின் கரையில் இருந்துகொண்டு தவம் செய்தவன் பிரம தருமன் என்னும் முனிவன். அவன் புத்தர் தோன்றி அறம் சொல்லப்போவதை முன்பே அறிந்து சொன்னவர் 

காயங்கரைப் புலவன் முற்றிலும் உணர்ந்து கூறினான். 

உலகு உய்ய ஒருவன் பிறப்பான். 
அவனது அறம்  கேட்டவர் அல்லாதார் கொடுமையான பிறவிகளிலிருந்து விடுபட முடியாது. 
எமன் வருவதற்க்கு  முன்னர் அவன் அறத்தைக் கேட்டு உய்தி பெறுங்கள். 

காயங்கரைப் புலவ, இவ்வாறு சொன்னீர்களே, என்று  பழையதை நினைவு கூர்ந்து இப்போது அவரைக் கண்டு மணிமேகலை அவரைக் கண்டு போற்றினாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை 
[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திற்கு அழைத்துப்
புத்த பீடிகை காட்டிப் பிறப்பு உணர்த்திய காதை ]

மணிமேகலை 25-4 Manimegalai 25-4


காயங் கரைஎனும் பேரியாற்று அடைகரை
மாயம்இல் மாதவன் தன்அடி பணிந்து
தருமம் கேட்டுத் தாள்தொழுது ஏத்திப்  40
பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்
விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்
கலங்குஅஞர்த் தீவினை கடிமின் கடிந்தால்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்
ஆகலின் நல்வினை அயராது ஓம்புமின் 45

காயங்கரை என்னும் பேரியாற்றின் கரையில் தவம் செய்யும் மாதவனின் அடிகளை வணங்கி அவன் கூறும் தருமத்தைக் கேட்டு அவன் கூறும் தரும நெறியில் தீவினைகளை நீக்கி வாழ்வோருக்கு விலங்கு, நரகர், பேய் ஆகிய பிறவிகள் இல்லாமல் போகும். தேவர், மக்கள், பிரமர் ஆகிய உயர் பிறவி கிடைக்கும். ஆதலால் நற்செயல்களை அயராமல் செய்ய வேண்டும். - மணிமேகலை நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்துக் கூறுகிறாள்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை 
[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திற்கு அழைத்துப்
புத்த பீடிகை காட்டிப் பிறப்பு உணர்த்திய காதை ]

மணிமேகலை 25-3 Manimegalai 25-3

கிள்ளி வளவன் - அறவணன் 

காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன்
நாவலம் தீவில்இந் நங்கையை ஒப்பார்
யாவரும் இல்லை இவள்திறம் எல்லாம்
கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக்  15
கள்அவிழ் தாரோய் கலத்தொடும் போகிக்
காவிரிப் படப்பை நல்நகர் புக்கேன்
மாதவன் அறவணன் இவள்பிறப்பு உணர்ந்துஆங்கு
ஓதினன் என்றுயான் அன்றே உரைத்தேன்
ஆங்குஅவள் இவள்அவ் அகல்நகர் நீங்கி  20
ஈங்கு வந்தனள் என்றலும் இளங்கொடி

நின்கைப் பாத்திரம் என்கைப் புகுந்தது
மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய்
அப்பிறப்பு அறிந்திலை ஆயினும் ஆவயிற்று
இப்பிறப்பு அறிந்திலை என்செய் தனையோ 25
மணிபல் லவம்வலம் கொண்டால் அல்லது
பிணிப்புஉறு பிறவியின் பெற்றியை அறியாய்
ஆங்கு வருவாய் அரசநீ என்றுஅப்
பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று
மைஅறு விசும்பின் மடக்கொடி எழுந்து, 30
வெய்யவன் குடபால் வீழா முன்னர்
வான்நின்று இழிந்து மறிதிரை உலாவும்
பூநாறு அடைகரை எங்கணும் போகி
மணிபல் லவம்வலம் கொண்டு மடக்கொடி
பிணிப்புஅறு மாதவன் பீடிகை காண்டலும்  35
தொழுதுவலம் கொள்ளஅத் தூமணிப் பீடிகைப்
பழுதுஇல் காட்சி தன்பிறப்பு உணர்த்தக்

சீருடை அணிந்திருந்த காவலன் தரும சாவகனை (ஆபுத்திரனை) வணங்கிக் கூறுகிறான். 

நாவலந்தீவில் இவளைப் போன்றவர் யாரும் இல்லை. அரசன் கிள்ளி வளவன் நட்பினை வேண்டி அரசனுக்காகக் கப்பலில் காவிரி ஆறு புகும் பட்டினம் சென்றேன். மாதவன் அறவண அடிகள் இவளைப்பற்றிக் கூறியிருக்கிறார். அவள் இங்கு வந்திருக்கிறாள் - என்றான். 

 மணிமேகலை கூறலானாள். 

உன்  கையில் இருந்த பாத்திரம் என் கைக்கு வந்திருக்கிறது. இது உனக்குத் தெரியாமல் மயங்கிக் கிடக்கிறாய். முந்தைய அந்தப் பிறப்பு உனக்குத் தெரியவில்லை. பசு வயிற்றில் பிறந்திருக்கும் உன் இந்தப் பிறப்புப் பற்றியும் உனக்குத் தெரியவில்லை. இப்படி ஏதும் அறியாமல் என்ன செய்துகொண்டிருக்கிறாய்? மணிபல்லவத் தீவை வலமவந்தால் நீ பிணிக்கப்பட்டிருக்கும் பிறவிகளைப் பற்றித் தெரிந்துகொள்வாய். இப்படி அவனிடம் சொல்லிவிட்டு மணிமேகலை எழுந்து வான் வழியாகச் சென்றுவிட்டாள். 

பொழுது மேற்குத் திசையில் விழுந்து மறைவதற்கு முன்னர் மணிபல்லவத் தீவில் பூ மணக்கும் ஆற்றங்கரையில் வந்து இறங்கினாள். புத்த பீடிகையை வணங்கினாள். அந்தப் பீடிகை அவளுக்கு மீண்டும் அவளது பிறப்புகளை உணர்த்தியது. 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை 
[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திற்கு அழைத்துப்
புத்த பீடிகை காட்டிப் பிறப்பு உணர்த்திய காதை ]

மணிமேகலை 25-2 Manimegalai 25-2

பெண்ணிணை இல்லாப் பெருவனப்பு உற்றாள்
கண்இணை இயக்கமும் காமனோடு இயங்கா
அங்கையில் பாத்திரம் கொண்டுஅறம் கேட்கும்  10
இங்குஇணை இல்லாள் இவள்யார் என்ன,

பெண்களில் யாரும் இவளுக்கு இணை இல்லாத பேரழகு கொண்டவளாக இவள் இருக்குறாள். அப்படி இருந்தும் இவளது கண் பார்வையில் காமன் நடமாடவில்லை. கையில் பிச்சைப் பாத்துரத்தை வைத்துக்கொண்டு அறம் புரியும்படிப் பிச்சை கேட்கிறாள். இணையில்லாத இவள் யார் என்று தரும சாகவன் (ஆபுத்திரன்) வினவினான்.  

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை 
[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திற்கு அழைத்துப்
புத்த பீடிகை காட்டிப் பிறப்பு உணர்த்திய காதை ]

மணிமேகலை 25-1 Manimegalai 25-1

தரும சாவகன்

அரசன் உரிமையோடு அப்பொழில் புகுந்து
தரும சாவகன் தன்அடி வணங்கி
அறனும் மறனும் அநித்தமும் நித்தத்
திறனும் துக்கமும் செல்உயிர்ப் புக்கிலும்  5
சார்பில் தோற்றமும் சார்புஅறுத்து உய்தியும்
ஆரியன் அமைதியும் அமைஉறக் கேட்டுப்

தரும சாவகன் என்னும் ஆரியன் (ஆபுத்திரன்) அரசன் என்னும் உரிமையோடு அந்தச் சோலையில் தங்கித் தவம் செய்துவந்தான். மணிமேகலை அவனைக் கண்டு வணங்கினாள். 
அறம் - மறம் 
அநித்தம் - நித்தம் (நிலையாமை - நிலைபேறு) 
திறம் - துக்கம் 
உயிர் சென்று புகுமிடம் 
சார்பில்லாத தோற்றம் - சார்பு அறுத்து உய்தி பெறுதல் 
ஆகிய உண்மைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
25 ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை 
[ மணிமேகலை ஆபுத்திரனை மணிபல்லவத்திற்கு அழைத்துப்
புத்த பீடிகை காட்டிப் பிறப்பு உணர்த்திய காதை ]

மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைந்த காதை விளக்கம் தொடுப்பு Manimegalai 24


24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
1
மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல்முது கணிகைதன் சூழ்ச்சியின் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி 5
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்துஆங்கு,
விளக்கம்

2
அரவுஏர் அல்குல் அருந்தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும்,
ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள 10
மாஇரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்,
ஆங்குஅவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்,
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தன்முன்
உருப்பசி முனிந்த என்குலத்து ஒருத்தியும், 15
ஒன்று கடைநின்ற ஆறிரு பதின்மர்இத்
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள்முதல்
யான்உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந் தேவி மாதர் யாரினும்,
விளக்கம்

3
பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று  20
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்திசென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்.  25
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்
விளக்கம்

4
உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப்
பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல்
கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா  30
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
பூநாறு சோலை யாரும்இல் ஒருசிறைத்
தானே தமியள் ஒருத்தி தோன்ற,
விளக்கம்

5
இன்னள் ஆர்கொல் ஈங்குஇவள் என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்  35
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உற்றுஉணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த  40
மலர்வாய் அம்பின் வாசம் கமழப்
பலர்புறம் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொருவரு பூங்கொடி போயின அந்நாள்
விளக்கம்

6
யாங்குஒளித் தனள்அவ் இளங்கொடி என்றே  45
வேந்தரை அட்டோன் மெல்இயல் தேர்வுழி,
நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறிச்
சலத்தில் திரியும்ஓர் சாரணன் தோன்ற,
விளக்கம்

7
மன்னவன் அவனை வணங்கி முன்நின்று
என்உயிர் அனையாள் ஈங்குஒளித் தாள்உளள்  50
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்
சொல்லுமின் என்று தொழஅவன் உரைப்பான்:
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டுஅறி வுடையேன் பார்த்திப கேளாய்:
விளக்கம்

8
நாக நாடு நடுக்குஇன்று ஆள்பவன்  55
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாச மயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்
இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக்
கருவொடு வரும்எனக் கணிஎடுத்து உரைத்தனன் 60
விளக்கம்

9
ஆங்குஅப் புதல்வன் வரூஉம் அல்லது
பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள்:
தீவகச் சாந்தி செய்யா நாள்உன்
காவல் மாநகர் கடல்வயிறு புகூஉம்
மணிமே கலைதன் வாய்மொழி யால்அது  65
தணியாது இந்திர சாபம்உண் டாகலின்.
விளக்கம்

10
ஆங்குப்பதி அழிதலும் ஈங்குப்பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய் மெய்எனக் கொண்டுஇக்
காசுஇல் மாநகர் கடல்வயிறு புகாமல்
வாசவன் விழாக்கோள் மறவேல் என்று  70
மாதவன் போயின அந்நாள் தொட்டும்இக்
காவல் மாநகர் கலக்குஒழி யாதால்
விளக்கம்

11
தன்பெயர் மடந்தை துயர்உறு மாயின்
தன்பெருந் தெய்வம் வருதலும் உண்டுஎன
அஞ்சினேன் அரசன் தேவிஎன்று ஏத்தி  75
நல்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருகென, இராசமா தேவி
விளக்கம்

12
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும்என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை  80
புலைமைஎன்று அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும்என்று ஈங்குஇவை சொல்வுழி,
விளக்கம்

13
மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத்
துணிகயம் துகள்படத் துவங்கிய வதுபோல்  85
தெளியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளிஎறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி
அறவணர் அடிவீழ்ந்து ஆங்குஅவர் தம்முடன்
மறவேல் மன்னவன் தேவிதன் பால்வரத்
விளக்கம்

14
தேவியும் ஆயமும் சித்திரா பதியும்  90
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்
எழுந்துஎதிர் சென்றுஆங்கு இணைவளைக் கையால்
தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க
அறிவுஉண் டாகஎன்று ஆங்குஅவன் கூறலும்,
விளக்கம்

15
இணைவளை நல்லாள் இராசமா தேவி  95
அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டித்
திருந்துஅடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்
யாண்டுபல புக்கநும் இணைஅடி வருந்தஎன்
காண்தகு நல்வினை நும்மைஈங்கு அழைத்தது
நாத்தொலைவு இல்லாய் ஆயினும் தளர்ந்து  100
மூத்தஇவ் யாக்கை வாழ்கபல் ஆண்டுஎன,
விளக்கம்

16
தேவி கேளாய் செய்தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ்கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இதுகேள்: 105
விளக்கம்

17
பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும்
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்  110
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர்
விளக்கம்

18
பேதைமை என்பது யாதுஎன வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல் 115
விளக்கம்

19
உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகுஇல் பல்உயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்  120
சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்
விளக்கம்

20
தீவினை என்பது யாதுஎன வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய்  125
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று  130
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக்
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர், 135
விளக்கம்

21
நல்வினை என்பது யாதுஎன வினவில்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் மாகி  140
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்
விளக்கம்

22
அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர்
புரைதீர் நல்அறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப்பு உணர்ந்த மணிமே கலைநீ
பிறஅறம் கேட்ட பின்னாள் வந்துஉனக்கு  145
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்துஏர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றுஅவன் எழுதலும், இளங்கொடி எழுந்து
விளக்கம்

23
நன்றுஅறி மாதவன் நல்அடி வணங்கித்
தேவியும் ஆயமும் சித்திரா பதியும்  150
மாதவர் நல்மொழி மறவாது உய்ம்மின்
இந்நகர் மருங்கின்யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்குஇவள் வரும்கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசுஇல் மணிபல் லவம்தொழுது ஏத்தி  155
வஞ்சியுள் புக்கு மாபத் தினிதனக்கு
எஞ்சா நல்அறம் யாங்கணும் செய்குவல்
எனக்குஇடர் உண்டுஎன்று இரங்கல் வேண்டா
மனக்குஇனி யீர்என்று அவரையும் வணங்கி,
விளக்கம்

24
வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த  160
அந்தி மாலை ஆயிழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர்  165
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து
ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன் யார்என மாதவன் கூறும்
விளக்கம்

25
நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்  170
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்
ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத் 175
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என்.
விளக்கம்
 
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை முற்றிற்று.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை 
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை  
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-25 Manimegalai 24-25

நாகபுரம் - பூமிசந்திரன் - புண்ணியராசன்

நாக புரம்இது நல்நகர் ஆள்வோன்  170
பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்
ஈங்குஇவன் பிறந்த அந்நாள் தொட்டும்
ஓங்குஉயர் வானத்துப் பெயல்பிழைப்பு அறியாது
மண்ணும் மரனும் வளம்பல தரூஉம்
உள்நின்று உருக்கும் நோய்உயிர்க்கு இல்எனத் 175
தகைமலர்த் தாரோன் தன்திறம் கூறினன்
நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன் தான்என்.

மாதவன் மணிமேகலைக்குக் கூறுகிறான். 
இது நாகபுரம். 
இதனை ஆள்பவன் பூமிசந்திரன் என்பவனின் மகன் புண்ணியராசன்.
புண்ணியராசன் பிறந்தது முதல் இந்த நாட்டில் மழைவளம் குன்றுவதில்லை. மண்ணும் மரங்களும் பல வளங்களைத் தருகின்றன. உயிரினங்களுக்கு நோய் இல்லை. 
இவ்வாறு முனிவன் கூறினான். 
 
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை முற்றிற்று.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-24 Manimegalai 24-24

வெந்துஉறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த  160
அந்தி மாலை ஆயிழை போகி
உலக அறவியும் முதியாள் குடிகையும்
இலகுஒளிக் கந்தமும் ஏத்தி வலம்கொண்டு
அந்தரம் ஆறாப் பறந்துசென்று ஆயிழை
இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்துஓர்  165
பூம்பொழில் அகவயின் இழிந்து பொறைஉயிர்த்து
ஆங்குவாழ் மாதவன் அடிஇணை வணங்கி,
இந்நகர்ப் பேர்யாது இந்நகர் ஆளும்
மன்னவன் யார்என மாதவன் கூறும்

சுட்டு உருகி நிற்கும் பொன் போன்ற தோற்றத்துடன் கதிரவன் மறைந்தான். அந்தி மாலை வந்தது. 
உலக அறவி, சம்பாபதி குடிகை, கந்திற்பாவை ஆகிய இடங்களை மணிமேகலை வலம்வந்து வணங்கினாள். 
பின்னர் வான் வழியாகப் பறந்து சென்றாள். 
பின்னர் இந்திரனின் மருமகன் முருகன் வாழும் ஊரின் புறத்தே தவம் செய்துகொண்டிருந்த மாதவனை வணங்கி, இந்த நகரின் பெயர் என்ன? இதனை ஆளும் மன்னவன் யார்? என்று வினவினாள். 
அவளுக்கு மாமுனின் கூறலானான். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-23 Manimegalai 24-23

கண்ணகிக்கு நல்லறம்

நன்றுஅறி மாதவன் நல்அடி வணங்கித்
தேவியும் ஆயமும் சித்திரா பதியும்  150
மாதவர் நல்மொழி மறவாது உய்ம்மின்
இந்நகர் மருங்கின்யான் உறைவேன் ஆயின்
மன்னவன் மகற்குஇவள் வரும்கூற்று என்குவர்
ஆபுத்திரன் நாடு அடைந்து அதன் பின் நாள்
மாசுஇல் மணிபல் லவம்தொழுது ஏத்தி  155
வஞ்சியுள் புக்கு மாபத் தினிதனக்கு
எஞ்சா நல்அறம் யாங்கணும் செய்குவல்
எனக்குஇடர் உண்டுஎன்று இரங்கல் வேண்டா
மனக்குஇனி யீர்என்று அவரையும் வணங்கி,

அறவண அடிகளின் நல்லுரையைக் கேட்ட மணிமேகலை அடிகளாரை வணங்கினாள். 
அரசியும், அவள் ஆயத்தாரும், சித்திராபதியும் மாதவரின் நல்லுரையைப் பின்பற்றி வாழுமாறு வேண்டிக்கொண்டாள். 
இந்த நகரத்தில் நான் வாழ்வேனாயின் மன்னன் மகனுக்கு வந்த எமன் என்று இந்த ஊர் மக்கள் கூறுவர். அதனால் ஆபுத்திரன் நாட்டுக்குச் செல்கிறேன். அங்கிருந்து மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த பீடிகையைத் தொழுவேன். அங்கிருந்து வஞ்சி மாநகரம் செல்வேன். அங்கிருந்துகொண்டு மாபத்தினி கண்ணகிக்கு நல்லறம் செய்வேன்
எனக்குத் துன்பம் உண்டு என்று யாரும் கவலை கொள்ள வேண்டாம். 
நீங்கள் அனைவரும் என் மனத்துக்கு இனியவர்கள். 
என்று சொல்லி அனைவரையும் வணங்கினாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-22 Manimegalai 24-22

நல்லறம்

அரசன் தேவியொடு ஆயிழை நல்லீர்
புரைதீர் நல்அறம் போற்றிக் கேண்மின்
மறுபிறப்பு உணர்ந்த மணிமே கலைநீ
பிறஅறம் கேட்ட பின்னாள் வந்துஉனக்கு  145
இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும்
முத்துஏர் நகையாய் முன்னுறக் கூறுவல்
என்றுஅவன் எழுதலும், இளங்கொடி எழுந்து

அரசியோடு மற்ற பெண்டிரும் நான் சொன்ன நல்லறத்தைப் போற்றி வாழுங்கள்.

மறுபிறப்பு உணர்ந்த மணிமேகலையே! நீ பிறர் கூறும் அறநெறிகளைக் கேட்ட பின்னர் மேலும் இந்த நல்லறம் பற்றியும், இதன் பகுதிகளையும் உனக்குக் கூறுவேன் - என்று சொல்லிவிட்டு அறவண அடிகள் செல்லலானார்.

அப்போது மணிமேகலை எழுந்து அறவண அடிகளை வணங்கினாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-21 Manimegalai 24-21

நல்வினை

நல்வினை என்பது யாதுஎன வினவில்
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச்
சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேல்என வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் மாகி  140
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர்

நல்வினை என்பது என்ன என்றால் சொல்கிறேன் கேள் என்று அறவண அடிகள் அரசிக்கு உணர்த்துகிறார்.

தீவினை என்று கூறிய பத்திலிருந்தும் விலகி, நல்லறிவை உள்ளத்தில் கொண்டு, பிறருக்கு வழங்கும் தானம் மேற்கொண்டு, தேவரும், மக்களும், பிரமருமாக வாழ்ந்து, மகிழ்ச்சியோடு வினைப்பயனைத் துய்ப்பதாகும். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-20 Manimegalai 24-20


தீவினை

தீவினை என்பது யாதுஎன வினவின்
ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய்  125
கொலையே களவே காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயன்இல்
சொல்எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்,
வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று  130
உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப்
பத்து வகையால் பயன்தெரி புலவர்
இத்திறம் படரார் படர்குவர் ஆயின்
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக்
கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர், 135

தீவினை என்பது என்ன என்று கேட்டால், நல்லவளே! சொல்கிறேன், கேள். என்று அறவண அடிகள் அரசிக்கு உணர்த்துகிறார். 

 1. கொலை
 2. களவு
 3. காமத் தீ பற்றி ஆசை கொள்ளுதல்

இந்த மூன்றும் உடலில் தோன்றும். 
அதனால் 
 1. பொய் பேசுதல்
 2. புறங்கூறுதல் 
 3. கடுஞ்சொல் கூறுதல் 
 4. பயனில் சொல் பேசிதல் 

ஆகிய நான்கும் நிகழும். 

 1. பேராசை
 2. பெருஞ்சினம்
 3. வஞ்சனை 

ஆகிய மூன்றும் உள்ளத்தில் தோன்றும். 

இந்தப் பத்தும் தோன்றி அவற்றின் வழியில் நடந்துகொண்டால் விலங்கும், பேயும், நரகருமாக வாழ்ந்து கவலையுடன் வாழ்வர். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-19 Manimegalai 24-19

உயிர்

உலகம் மூன்றினும் உயிராம் உலகம்
அலகுஇல் பல்உயிர் அறுவகைத் தாகும்
மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்
தொக்க விலங்கும் பேயும் என்றே
நல்வினை தீவினை என்றுஇரு வகையால்  120
சொல்லப் பட்ட கருவினுள் தோன்றி
வினைப்பயன் விளையுங் காலை உயிர்கட்கு
மனப்பேர் இன்பமும் கவலையும் காட்டும்

மூன்று உலகங்களிலும் உள்ள உயிர்கள் ஆறு வகை. 
 1. மக்கள் 
 2. தேவர் 
 3. பிரமர் 
 4. நரகர் 
 5. விலங்கு
 6. பேய் 

என்பன அந்த ஆறு வகை. 
அவற்றின் செயல்பாடுகள் இரண்டு வகை 

 1. நல்வினை
 2. தீவினை.

இவை கருவிலேயே தோன்றி செய்யும் வினையால் பலனை விளைவிக்கும். 
அப்போது மனத்தில் இன்பமும் கவலையும் தோன்றும். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-18 Manimegalai 24-18

பேதைமை

பேதைமை என்பது யாதுஎன வினவின்
ஓதிய இவற்றை உணராது மயங்கி
இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல் 115

பேதைமை என்பது என்னவென்றால், நல்லன என்று சொல்லப்பட்டவற்றை உணர்ந்துகொள்ளாமல் மயக்கத்தில் இயல்பாக நடைபெறுவதைக் கண்டனவற்றை மறந்து "முயலுக்குக் கொம்பு உண்டு" எனக் காதால் கேட்டதை நம்புதல். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-17 Manimegalai 24-17

பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றுஎன வகுத்த இயல்புஈ ராறும்
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்  110
அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர்
 1. பேதைமை என்னும் அறியாமை
 2. அந்த அறியாமையால் செயல்படுதல்  
 3. உணர்வு பெறுதல் 
 4. இன்பம், துன்பம், நினைப்பு முதலான அருவப் பொருள்கள் 
 5. கண்ணில் புலப்படும் உருவப் பொருள்கள் 
 6. வாயில் ஊறும் இன்பம் நுகர்தல்  
 7. நுகர ஆசைப்படுதல் 
 8. பிறிதொன்றறை பற்ற எண்ணுதல் 
 9. பிறப்பு 
 10. பிறந்தது தோன்ற வளர்தல் 
 11. தோன்றியது செயல்படுதல் 
 12. செயலின் பலனை அனுபவித்தல் 

இந்த 12-ன் இயல்புதான் வாழ்க்கை என்பதைப் பிறந்தவர்கள் அறிந்துகொண்டால் பெறத்தகு பெரும்பேற்றினை அறிந்தவர் ஆவர். அறியாதவர் நரக வாழ்க்கையில் மூழ்குவர். 
இவ்வாறு அறவண அடிகள் அரசியிடம் கூறினார்.   

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

Monday, 30 October 2017

மணிமேகலை 24-16 Manimegalai 24-16

தேவி கேளாய் செய்தவ யாக்கையின்
மேவினேன் ஆயினும் வீழ்கதிர் போன்றேன்
பிறந்தார் மூத்தார் பிணிநோய் உற்றார்
இறந்தார் என்கை இயல்பே இதுகேள்: 105

அரவண அடிகள் அரசியிடம் கூறுகிறார். 
தேவி, இதனைக் கேள். 
தவ வாழ்க்கை மேற்கொண்டேன் என்றாலும் மலையில் மறையும் கதிரவன் போன்ற நிலையில் இருக்கிறேன். 
பிறந்தவர் மூப்பு எய்துவர். 
பிணி நோய் அடைந்தவர் இறப்பர். 
இது இயல்புதானே!

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-9 Manimegalai 24-9

புகார் கடற்கோள்

ஆங்குஅப் புதல்வன் வரூஉம் அல்லது
பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள்:
தீவகச் சாந்தி செய்யா நாள்உன்
காவல் மாநகர் கடல்வயிறு புகூஉம்
மணிமே கலைதன் வாய்மொழி யால்அது  65
தணியாது இந்திர சாபம்உண் டாகலின்.

பீலிவளையின் புதல்வன் வருவானே அல்லாமல் பீலிவளை திரும்பவும் உன்னிடம் வரமாட்டாள். 
புலம்ப வேண்டாம். 
மேலும் சொல்வதைக் கேள். 
புகார் தீவகத்தில் இந்திரனுக்கு விழா கொண்டாடாத நாளில் இந்நகர் கடலின் வயிற்றுக்குள் சென்றுவிடும். 
இது மணிமேகலா தெய்வத்தின் வாக்கு. 
இது இந்திரனின் வாக்கும் கூட. 
இவ்வாறு சாரணன் நெடுமுடிக் கிள்ளியிடம் கூறினான். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-15 Manimegalai 24-15

இணைவளை நல்லாள் இராசமா தேவி  95
அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டித்
திருந்துஅடி விளக்கிச் சிறப்புச் செய்தபின்
யாண்டுபல புக்கநும் இணைஅடி வருந்தஎன்
காண்தகு நல்வினை நும்மைஈங்கு அழைத்தது
நாத்தொலைவு இல்லாய் ஆயினும் தளர்ந்து  100
மூத்தஇவ் யாக்கை வாழ்கபல் ஆண்டுஎன,

அனைவரையும் அறவண அடிகளுடன் கண்ட அரசி தவமுனிவர் அமர இருக்கையைக் காட்டி, அமரச் செய்தாள். பின்னர் அவருக்குச் செய்யவேண்டிய சிறப்புகள் அனைத்தையும் செய்தாள். 
"அண்டுகள் பலவாகி முதிர்ந்த தங்களின் இணையடிகள் வருந்த நடந்து வந்து என்னைக் கண்டது எனது நற்பேறு. நல்லுரை வழங்கும் நாவளம் மிக்க தங்கள் யாக்கை பல்லாண்டு  வாழவேண்டும் என்று வாழ்த்தினாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-14 Manimegalai 24-14

தேவியும் ஆயமும் சித்திரா பதியும்  90
மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்
எழுந்துஎதிர் சென்றுஆங்கு இணைவளைக் கையால்
தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க
அறிவுஉண் டாகஎன்று ஆங்குஅவன் கூறலும்,

அரசி, அவளது தோழிமார், சித்திராபதி, மாதவி, அவள் மகள் மணிமேகலை ஆகியோருடன் மாதவர் அறவண அடிகளை அரசி கண்டாள். அவர்களை வளையல் அணிந்த தம் கைகளால் வணங்கினாள். "அறிவு உண்டாகட்டும்" என்று அறவண அடிகள் அரசியை வாழ்த்தினார். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-13 Manimegalai 24-13

மணிமே கலைதிறம் மாதவி கேட்டுத்
துணிகயம் துகள்படத் துவங்கிய வதுபோல்  85
தெளியாச் சிந்தையள் சுதமதிக்கு உரைத்து
வளிஎறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி
அறவணர் அடிவீழ்ந்து ஆங்குஅவர் தம்முடன்
மறவேல் மன்னவன் தேவிதன் பால்வரத்

இப்படிக் கூறிய மாதவி, மணிமேகலை நிலையை எண்ணி நீர் நிறைந்த குளம் உடைபடுவது போன்ற உணர்வினள் ஆனாள். தெளிவில்லாத சிந்தையுடன் சுதமதியிடம் வினவினாள். காற்றில் ஆடும் மரக்கொம்பு போல் ஆட்டம் கண்ட உள்ளத்துடன் அறவணன் அடிகளை வணங்கினாள். பின் அறவண அடிகளை வேண்டி, அவரையும் அழைத்துக்கொண்டு, மறவேல் மன்னனின் தேவி, அரசி இருக்கும் இடத்துக்கு வந்தாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-12 Manimegalai 24-12

கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும்என்று உரவோர் துறந்தவை
தலைமையாக் கொண்டநின் தலைமைஇல் வாழ்க்கை  80
புலைமைஎன்று அஞ்சிப் போந்த பூங்கொடி
நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள்
என்னொடு இருக்கும்என்று ஈங்குஇவை சொல்வுழி,

கள், பொய், காமம், கொலை, களவு ஆகியவற்றை உரமுடையோர் துறந்தனர். அரசியின் வாழ்க்கை இவற்றைத் தலைமையாகக் கொண்டுள்ளது. இத்தகைய வாழ்க்கை புலைமை என எண்ணுபவள் மணிமேகலை. எனவே மணிமேகலை உன் மனைக்கு வரமாட்டாள், என்னுடன்தான் இருப்பாள் என்று மாதவி கூறிவிட்டாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-11 Manimegalai 24-11

தன்பெயர் மடந்தை துயர்உறு மாயின்
தன்பெருந் தெய்வம் வருதலும் உண்டுஎன
அஞ்சினேன் அரசன் தேவிஎன்று ஏத்தி  75
நல்மனம் பிறந்த நாடகக் கணிகையை
என்மனைத் தருகென, இராசமா தேவி

மணிமேகலை துன்பப் படுவாளேயானால் அவள் பெயரை உடைய மணிமேகலா தெய்வம் துன்பம் துடைக்க வரும். அது சினந்தால் புகார் நகரம் அழியும். ஆகவே அவளை என் மனையிலேயே இருக்க விடுங்கள் என அரசி மாதவியை வேண்டினாள். அதற்கு மாதவி கூறுகிறாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-10 Manimegalai 24-10

ஆங்குப்பதி அழிதலும் ஈங்குப்பதி கெடுதலும்
வேந்தரை அட்டோய் மெய்எனக் கொண்டுஇக்
காசுஇல் மாநகர் கடல்வயிறு புகாமல்
வாசவன் விழாக்கோள் மறவேல் என்று  70
மாதவன் போயின அந்நாள் தொட்டும்இக்
காவல் மாநகர் கலக்குஒழி யாதால்

இவ்வாறு நெடுமுடிக் கிள்ளியிடம் சொல்லிவிட்டு சாரணன் போன பின்னர் புகார் நகரம் கலக்கத்தில் ஆழ்ந்து கிடந்தது. 
அங்கே நாகநாடு அழியும்போது, இங்கே புகார் நகரமும் அழிந்துவிடும் என்பதை உண்மை என நம்பு. 
இந்த நகர் கடல் வயிற்றில் புகாமல் இருப்பதற்காக, இந்திரனுக்கு விழாக் கொண்டாடுவதில் கவனமாக இரு. மறந்துவிடாதே. 
இவ்வாறு சொல்லிவிட்டு மாதவன் சாரணன் போன பின்னர், புகார் நகரம் கலக்கத்தில் ஆழ்ந்து கிடந்தது. 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-8 Manimegalai 24-8

நாக நாடு நடுக்குஇன்று ஆள்பவன்  55
வாகை வேலோன் வளைவணன் தேவி
வாச மயிலை வயிற்றுள் தோன்றிய
பீலிவளை என்போள் பிறந்த அந்நாள்
இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக்
கருவொடு வரும்எனக் கணிஎடுத்து உரைத்தனன் 60

நாக நாட்டைத் துன்பம் இல்லாமல் ஆள்பவன் வெற்றி வேந்தன் வளைவணன். அவன் மனைவி வாசமயிலை. இவள் வயிற்றில் தோன்றும் பீளிவளை சூரிய குலத்தில் தோன்றும் ஒருவனைத் (சோழன் சூரிய குலம்)  தழுவிக் கருவோடு வருவாள் என்று கணியன் ஒருவன் அவள் பிறந்தபோது சொன்னான் - இதனை நான் அறிவேன் என்று அந்தச் சாரணன் கூறினான். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-7 Manimegalai 24-7

மன்னவன் அவனை வணங்கி முன்நின்று
என்உயிர் அனையாள் ஈங்குஒளித் தாள்உளள்  50
அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள்
சொல்லுமின் என்று தொழஅவன் உரைப்பான்:
கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னைப்
பண்டுஅறி வுடையேன் பார்த்திப கேளாய்:

மன்னவன் நெடுமுடிக் கிள்ளி அங்கு வந்த சாரணனை வணங்கினான். 
"என்  உயிர் போன்றாள் இங்கு ஒளிந்துகொண்டாள். அடிகளே, அவளைக் கண்டீரோ? சொல்லுங்கள்" என்றான்.  
"காணவில்லை. என்றாலும் அவள்ளைப் பற்றி முன்பே எனக்குத் தெரியும்" என்றான் சாரணன். 
சாரணன் சொல்கிறான். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-6 Manimegalai 24-6

சாரணன்

யாங்குஒளித் தனள்அவ் இளங்கொடி என்றே  45
வேந்தரை அட்டோன் மெல்இயல் தேர்வுழி,
நிலத்தில் குளித்து நெடுவிசும்பு ஏறிச்
சலத்தில் திரியும்ஓர் சாரணன் தோன்ற,

தன்னை மகிழ்வித்த அந்த இளம்பெண் எங்கே போய்விட்டாள் என்று மன்னன் நெடுமுடிக் கிள்ளி தேடினான். 
அப்போது அங்குச் சாரணன் ஒருவன் தோன்றினான். சாரணர் என்போர் நிலத்தில் குதித்து, வானத்தில் ஏறி, நீரில் திரிபவர்கள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-5 Manimegalai 24-5

காமன் கணை

இன்னள் ஆர்கொல் ஈங்குஇவள் என்று
மன்னவன் அறியான் மயக்கம் எய்தாக்  35
கண்ட கண்ணினும் கேட்ட செவியினும்
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
உற்றுஉணர் உடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையும் செயலையும் மாவும் குவளையும்
பயில்இதழ்க் கமலமும் பருவத்து அலர்ந்த  40
மலர்வாய் அம்பின் வாசம் கமழப்
பலர்புறம் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி எல்லை கழிப்பினும் உரையாள்
பொருவரு பூங்கொடி போயின அந்நாள்

தனியே வந்த இவள் யார்? புன்னையங்கானலுக்கு ஏன் வந்தாள் என்று அறியாமல் நெடுமுடிக் கிள்ளி திகைத்தான்.

 1. அவன் அவளைப் கண்ட கண்களிலும்,
 2. அவள் சொள்களைக் கேட்ட அவன் செவிகளிலும்,
 3. அவன் அவள் இதழை உண்ட வாயிலும்,
 4. அவன் அவளது மேனி மணத்தை முகர்ந்த மூக்கிலும்,
 5. அவன் அவளை அணைத்த உடம்பிலும்,

காமன் விளையாடினான்.

 1. மயிலை, 
 2. செயலை, 
 3. மா, 
 4. குவளை, 
 5. தாமரை 

ஆகிய தன் ஐந்து மலர் அம்புகளை எய்தான்.
அதனால் அரசர் பலரைப் புறங்கண்டவன் அவளிடம் தோற்றான்.
அவளோடு ஒரு மாத காலம் இன்புற்றான்.
அதன் பின்னரும் அவள் தான் யார் என்பதைச் சொல்லாமல் போய்விட்டாள்.
அந்த நாளில் ... 

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள. - திருக்குறள்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-4 Manimegalai 24-4

நெடுமுடிக் கிள்ளி - புன்னையங்கானல்

உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டுப்
பொங்குதிரை உலாவும் புன்னையங் கானல்
கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா  30
இளவேனில் இறுப்ப இறும்பூது சான்ற
பூநாறு சோலை யாரும்இல் ஒருசிறைத்
தானே தமியள் ஒருத்தி தோன்ற,

புகார் நகரத்தில் உப்பளம் தழுவியிருக்கும் மணல்மேடு புன்னையங்கானல் என்னும் இடம். அங்கிருந்த பூ மணக்கும் சோலையில் நெடுமுடிக் கிள்ளி என்னும் சோழ வேந்தன் தனிமையில் இருந்தபோது தனியாகப் பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-3 Manimegalai 24-3

பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று  20
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும்,
பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி
அரங்கக் கூத்திசென்று ஐயம் கொண்டதும்
நகுதல் அல்லது நாடகக் கணிகையர்
தகுதி என்னார் தன்மை அன்மையின்.  25
மன்னவன் மகனே அன்றியும் மாதரால்
இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால்

மாலைக்கு விலை தந்த கோவலன் மாண்டான் என்று என் தாய் மாதவி தவம் புரிபவர் பள்ளியை அடைந்தாள். நான் அரங்கில் வாழும் கூத்தியாக வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து வாழ்கிறேன். இவையெல்லாம் எள்ளி நகையாடத் தக்கதே அல்லாமல் கணிகையின் தகுதி இது என்று யாரும் கொள்ள மாட்டார். இப்படிப்பட்ட பெண்ணால் மன்னன் மகனாய் இருந்தாலும் துன்புறுவர் என்பது இந்த நகருக்கு ஏற்பட்ட விதி. 
இப்படி மணிமேகலை தொடர்கிறாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

மணிமேகலை 24-2 Manimegalai 24-2

121 கணிகையர்

அரவுஏர் அல்குல் அருந்தவ மடவார்
உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும்,
ஆயிரம் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள 10
மாஇரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்,
ஆங்குஅவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்,
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தன்முன்
உருப்பசி முனிந்த என்குலத்து ஒருத்தியும்,  15
ஒன்று கடைநின்ற ஆறிரு பதின்மர்இத்
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள்முதல்
யான்உறு துன்பம் யாவரும் பட்டிலர்
மாபெருந் தேவி மாதர் யாரினும்,


 • பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையுடைய அரிய தவத்தினையுடைய மடவார், இந்திரனுக்கு ஈன்ற பதினொருவரும், 
 • இந்திரன்முன் அவிநயம் வழுவினமையால்,  புவியிடைத் தோன்றிய ஐவரும்,
 • இந்திரன் புதல்வனாகிய சயந்தனோடு அரிய தவத்தினையுடைய அகத்தியனால் முனியப்பட்ட, மிக்க சிறப்பினையுடைய நூற்றுநால்வரும், 
 • அழகு விளங்கும் மணிமுடி யணிந்த இந்திரன் முன், உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும் முனியப்பட்ட உருப்பசியாகிய என் குலத்து தோன்றிய ஒருத்தியும், 

என்ற நூற்றிருபத்தொருவர், 
பழமையாகிய பெரிய இந்நகரிலே தோன்றிய நாள் முதலாக, 
அரசமாதேவியே! கணிகையர் யாரினும் யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் - என்று மணிமேகலை அரசியிடம் கூறுகிறாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]

Sunday, 29 October 2017

மணிமேகலை 24-1 Manimegalai 24-1

மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த
தொல்முது கணிகைதன் சூழ்ச்சியின் போயவன்
விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது
நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி  5
மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக்
காவலன் தேவி கால்கீழ் வீழ்ந்துஆங்கு,

மன்னனின் மகன் உதயகுமரன் பழம்பெரும் கணிகை சித்திராபதியின் சூழ்ச்சியில் விழுந்து விஞ்சையன் வாளால் கொல்லப்பட்டான் என்பதை நெஞ்சம் பதைக்கக் கேட்ட அரசி மாதவியின் மகள் மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து மணிமேகலையை வணங்கினாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை 
24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை  
[ மணிமேகலை மாநகர்ஒழிந்து ஆபுத்திரன் நாடு அடைந்த பாட்டு ]
மணிமேகலை சிறைவிடு காதை விளக்கம் தொடுப்பு Manimegalai 23

23 சிறைவிடு காதை  

மன்னவன் அருளால் வாசந் தவைஎனும்
நல்நெடுங் கூந்தல் நரைமூ தாட்டி
அரசர்க்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும்  5
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்
இலங்குஅரி நெடுங்கண் இராசமா தேவி
கலங்குஅஞர் ஒழியக் கடிதுசென்று எய்தி
அழுதுஅடி வீழாது ஆயிழை தன்னைத்  10
தொழுதுமுன் நின்று தோன்ற வாழ்த்திக்

கொற்றம் கொண்டு குடிபுறம் காத்தும்
செற்ற தெவ்வர் தேஎம்தமது ஆக்கியும்
தருப்பையின் கிடத்தி வாளின் போழ்ந்து
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென  15
மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு
நாப்புடை பெயராது நாணுத்தகவு உடைத்தே

தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று
என்எனப் படுமோ நின்மகன் மடிந்தது!
மன்பதை காக்கும் மன்னவன் தன்முன்  20
துன்பம் கொள்ளேல் என்றுஅவள் போயபின்,
விளக்கம்

2
கையாற்று உள்ளம் கரந்துஅகத்து அடக்கிப்
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டுபுறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமே கலையைஎன்று
அம்சில் ஓதி அரசனுக்கு ஒருநாள்  25
பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசுஇயல் தான்இலன்
கரும்புஉடைத் தடக்கைக் காமன் கையற
அரும்பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்  30
சிறைதக் கன்று செங்கோல் வேந்துஎனச்
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை ஆயின்இவ் ஆயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்கென்று இறைசொல, 35

என்னோடு இருப்பினும் இருக்கஇவ் இளங்கொடி
தன்ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்என்று
அங்குஅவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு
கொங்குஅவிழ் குழலாள் கோயிலுள் புக்குஆங்கு,
விளக்கம்

3
அறிவு திரிந்துஇவ் அகல்நகர் எல்லாம்  40
எறிதரு கோலம்யான் செய்குவல் என்றே
மயல்பகை ஊட்ட மறுபிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக,

கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்  45
இணைவளர் இளமுலை ஏந்துஎழில் ஆகத்துப்
புணர்குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்குஉரை என்றே
காணம் பலவும் கைநிறை கொடுப்ப,

ஆங்குஅவன் சென்றுஅவ் ஆயிழை இருந்த  50
பாங்கில் ஒருசிறைப் பாடுசென்று அணைதலும்,
தேவி வஞ்சம் இதுஎனத் தெளிந்து
நாஇயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்பக்
காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி  55
அரசர் உரிமையில் ஆடவர் அணுகார்
நிரயக் கொடுமகள் நினைப்புஅறி யேன்என்று
அகநகர் கைவிட்டு ஆங்குஅவன் போயபின்,
விளக்கம்

4
மகனைநோய் செய்தாளை வைப்பது என்என்று
உய்யா நோயின் ஊண்ஒழிந் தனள்எனப்  60
பொய்ந்நோய் காட்டிப் புழுக்குஅறை அடைப்ப
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள்நுதல் மேனி வருந்தாது இருப்ப,
ஐஎன விம்மி ஆயிழை நடுங்கிச்
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்  65
என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன்நேர் அனையாய் பொறுக்கென்று அவள்தொழ,
விளக்கம்

5
நீல பதிதன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை
அழல்கண் நாகம் ஆர்உயிர் உண்ண  70
விழித்தல் ஆற்றேன் என்உயிர் சுடுநாள்
யாங்குஇருந்து அமுதனை இளங்கோன் தனக்குப்
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்குஅழு தனையோ உயிர்க்குஅழு தனையோ
உடற்குஅழு தனையேல் உன்மகன் தன்னை  75
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்குஅழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துஉணர்வு அரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும் 80

மற்றுஉன் மகனை மாபெருந் தேவி
செற்ற கள்வன் செய்தது கேளாய்:
மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல்துணி செய்துஆங்கு உருத்துஎழும் வல்வினை
நஞ்சுவிழி அரவின் நல்உயிர் வாங்கி  85
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே!
விளக்கம்

6
யாங்குஅறிந் தனையோ ஈங்குஇது நீஎனில்
பூங்கொடி நல்லாய் புகுந்தது இதுஎன
மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத்
தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா  90
உற்றதை எல்லாம் ஒழிவுஇன்று உரைத்து,
விளக்கம்

7
மற்றும் உரைசெயும் மணிமே கலைதான்
மயல்பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார்இருள் தான்வர  95
நல்லாய் ஆண்உரு நான்கொண்டு இருந்தேன்,
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண்இழை செய்த வஞ்சம் பிழைத்தது.

அந்தரம் சேறலும் அயல்உருக் கோடலும்
சிந்தையின் கொண்டிலேன் சென்ற பிறவியில்  100
காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து
தீதுஉறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்

தையால் உன்தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல்தீர்ந்து இன்உரை கேளாய்:
விளக்கம்

8
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல்நாட்டுக்  105
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான்வேறு ஆகி
மான்றுஓர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப்
புதல்வன் தன்னைஓர் புரிநூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க  110
ஆங்குஅப் புதல்வன் அவள்திறம் அறியான்
தான்புணர்ந்து அறிந்துபின் தன்உயிர் நீத்ததும்,

நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும்
சூல்முதிர் மடமான் வயிறுகிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப  115
மான்மறி விழுந்தது கண்டு மனம்மயங்கிப்
பயிர்க்குரல் கேட்டுஅதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்கண்டு
ஓட்டி எய்தோன் ஓர்உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள்தடங் கண்ணி! 120
விளக்கம்

9
கடாஅ யானைமுன் கள்கா முற்றோர்
விடாஅது சென்றுஅதன் வெண்கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறுசெருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்!

பொய்யாற்று ஒழுக்கம் பொருள்எனக் கொண்டோர்  125
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?

களவுஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர்
இளவேய்த் தோளாய்க்கு இதுஎன வேண்டா

மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்குஇவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் 130
விளக்கம்

10
கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்துஏர் எல்வளை செல்உலகு அறிந்தோர்  135
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்புஒழி யார்என
ஞான நல்நீர் நன்கனம் தெளித்துத்
தேன்ஆர் ஓதி செவிமுதல் வார்த்து  140
மகன்துயர் நெருப்பா மனம்விறகு ஆக
அகம்சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப,
விளக்கம்

11
தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து
மாறுகொண்டு ஓரா மனத்தினன் ஆகி
ஆங்குஅவள் தொழுதலும், ஆயிழை பொறாஅள் 145
தான்தொழுது ஏத்தித் தகுதி செய்திலை
காதலன் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந் தேவிஎன்று எதிர்வணங் கினள்என்.
விளக்கம்
 
சிறைவிடு காதை முற்றிற்று.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை 
23 சிறைவிடு காதை   
[ மணிமேகலையை அரசி சிறைவீடுசெய்த பாட்டு ]

மணிமேகலை 23-11 Manimegalai 23-11

இருவரும் வணங்குதல்

தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து
மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி
ஆங்குஅவள் தொழுதலும், ஆயிழை பொறாஅள் 145
தான்தொழுது ஏத்தித் தகுதி செய்திலை
காதலன் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந் தேவிஎன்று எதிர்வணங் கினள்என்.

நன்னெறி நீரில் நனைந்த அரசி மனம் தெளிவு பெற்று மணிமேகலையை வணங்கினாள். அதனைக் கண்டு மனம் தாங்காத மணிமேகலை "தகாதது செய்கிறாய்" என்று தடுத்தாள். 
நீ என் காதலனைப் பெற்ற தாய். 
அல்லாமலும் அரசி. 
என்று சொல்லிக்கொண்டு அவளுக்கு எதிராக வணங்கினாள். 
 
சிறைவிடு காதை முற்றிற்று.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
23 சிறைவிடு காதை 
[ மணிமேகலையை அரசி சிறைவீடுசெய்த பாட்டு ]

மணிமேகலை 23-10 Manimegalai 23-10

துயரத் தீ அவிந்தது

கடாஅ யானைமுன் கள்கா முற்றோர்
விடாஅது சென்றுஅதன் வெண்கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறுசெருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்!

பொய்யாற்று ஒழுக்கம் பொருள்எனக் கொண்டோர்  125
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?

களவுஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர்
இளவேய்த் தோளாய்க்கு இதுஎன வேண்டா

மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்குஇவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும் 130

கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்துஏர் எல்வளை செல்உலகு அறிந்தோர்  135
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்புஒழி யார்என
ஞான நல்நீர் நன்கனம் தெளித்துத்
தேன்ஆர் ஓதி செவிமுதல் வார்த்து  140
மகன்துயர் நெருப்பா மனம்விறகு ஆக
அகம்சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப,

அழகுள்ள அரசியே, யானைத் தந்தங்களைத் தந்து கள்ளுண்போர் யானையைக் கண்டதும் அதனை விடாது பின்சென்று தாக்கும்போது அந்த யானைத் தந்தத்தால் குத்துப்பட்டு இறப்பதை, நீ கண்டதுண்டா?

ஒழுக்கக் கேட்டையே பொருளாகக் கொண்டவர் அதனால் அவல நிலை அடைவதைக் கண்டதுண்டா?

திருட்டுத் தொழில் புரிபவர் அதனால் படும் வேதனையைக் கண்டதுண்டா?

இளமூங்கில் போன்று தோள் கொண்ட அரசிக்குத் தகாத செயல்கள் வேண்டாம். 

நிலைபெற்ற உலகில் வாழும் மக்கள் இவை போன்ற தகாத செயல்களை விட்டொழிக்க வேண்டும். 

அழகியே! கற்ற கல்வி என்பது இதுதான். 

சினத்தை நீக்கியவர்களே முற்றிலும் உணர்ந்தவர் ஆவார். 
பிறருக்குத் துன்பம் இல்லாமல் வாழ்பவரே  உலகில் வாழ்பவராகக் கருதப்படுவர். 
அழகிய வளையல் அணிந்தவளே!
வருந்தி வந்தோர் பசியைப் போக்கியவர், பிறர் துன்பத்தைப் போக்குபவர் உயிர்களிடம் காட்டும் அன்பிலிருந்து விடுபடமாட்டார். 

இப்படிப்பட்ட ஞான நீரை மணிமேகலை அரசிக்குத் தெளித்தாள். அது அரசி காதில் தேன் போலப் பாய்ந்தது. மகன் துயரம் என்னும் நெருப்பு பற்றி எரிந்துகொண்டிருந்த மன விறகை ஈரமாக்கியது. அரசியின் துயரத் தீ அவிந்தது. 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
23 சிறைவிடு காதை 
[ மணிமேகலையை அரசி சிறைவீடுசெய்த பாட்டு ]

மணிமேகலை 23-9 Manimegalai 23-9

நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும்
சூல்முதிர் மடமான் வயிறுகிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப  115
மான்மறி விழுந்தது கண்டு மனம்மயங்கிப்
பயிர்க்குரல் கேட்டுஅதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்கண்டு
ஓட்டி எய்தோன் ஓர்உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள்தடங் கண்ணி! 120

கரு நிறைவுற்ற மான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு காட்டில் அலைந்தது. ஒரு வேடன் அதன் வயிறு கிழியும்படி அம்பால் எய்தான். மான் இறந்தது. அதன் வயிற்றிலிருந்து வெளிவந்த மான்குட்டி கத்தியது. அதனைப் பார்த்த அந்த வேடன் கண்ணீர் உகுத்துத் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். 

மணிமேகலை அரசிக்கு இந்த நிகழ்வைச் சொல்கிறாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
23 சிறைவிடு காதை 
[ மணிமேகலையை அரசி சிறைவீடுசெய்த பாட்டு ]

மணிமேகலை 23-8 Manimegalai 23-8

தாயைப் புணர்ந்த மகன்

ஆள்பவர் கலக்குற மயங்கிய நல்நாட்டுக்  105
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான்வேறு ஆகி
மான்றுஓர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப்
புதல்வன் தன்னைஓர் புரிநூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க  110
ஆங்குஅப் புதல்வன் அவள்திறம் அறியான்
தான்புணர்ந்து அறிந்துபின் தன்உயிர் நீத்ததும்,

அரசியான உதயகுமரன் தாய்க்கு மணிமேகலை ஒரு நிகழ்வைச் சொல்கிறாள். 

நல்ல நாட்டை ஆளும் மன்னன் குடிமக்களைக் கலக்கினான். அப்போது நெசவாளி குடும்பத்துப் பெண் ஒருத்தியை அவளது கணவன் கைவிட்டுவிட்டான். அதனால் அவள் தன் ஆண் குழந்தையோடு மனம்போன திசையில் சென்றாள். அங்கே அந்தக் குழந்தையையும் விட்டுவிட்டு விலைமகளாக வாழ்ந்துவந்தாள். அந்த ஆண் குழந்தையை மார்பில் பூணூல் அணிந்த ஒருவன் பாங்கு தெரியாமல் வளர்த்து வந்தான். அந்த ஆண்மகன் பெரியவன் ஆகித் தாயிடம் சென்று தாய் என்று தெரியாமல் உடல்-உறவு கொண்டான். தாய் பின்னர் தன்னிடம் உறவு கொண்டவன் தன் மகன் எனத் தெரிந்ததும் தன்  உயிரை மாய்த்துக் கொண்டாள்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
23 சிறைவிடு காதை 
[ மணிமேகலையை அரசி சிறைவீடுசெய்த பாட்டு ]

Saturday, 28 October 2017

மணிமேகலை 23-7 Manimegalai 23-7

மந்திரத்தைப் பயன்படுத்தவில்லை

மற்றும் உரைசெயும் மணிமே கலைதான்
மயல்பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார்இருள் தான்வர  95
நல்லாய் ஆண்உரு நான்கொண்டு இருந்தேன்,
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண்இழை செய்த வஞ்சம் பிழைத்தது.

அந்தரம் சேறலும் அயல்உருக் கோடலும்
சிந்தையின் கொண்டிலேன் சென்ற பிறவியில்  100
காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து
தீதுஉறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்

தையால் உன்தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல்தீர்ந்து இன்உரை கேளாய்:

மேலும் மணிமேகலை அரசியிடம் சொல்கிறாள். 
நீ என்னை மயக்கிப் பகைமை காட்டினாய். அப்போது மறுபிற்றப்பைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். அயரவில்லை. கல்லாத கயவனை அனுப்பினாய். ஆண் உருவம் எடுத்துத் தப்பித்துக்கொண்டேன். ஊண் இல்லாமல் இருக்கும் மந்திரம் எனக்குத் தெரியும். அதனால் புழுக்கறையில் நீ என்னை அடைத்தபோது தப்பினேன். இப்படியெல்லாம் உன் வஞ்சனையிலிருந்து தப்பித்துக் கொண்டேன். 

அப்போதெல்லாம் அந்தரத்தில் செல்லும் மந்திரத்தையும், அயல் உருவம் எடுத்துக்கொள்ளும் மந்திரத்தையும் நான் பயன்படுத்தித் தப்பித்துக் கொண்டிருக்க முடியும். அதனை நான் செய்யவில்லை. சென்ற பிறவியில் என் காதலனாக இருந்தவனை இந்தப் பிறவியில் பெற்ற தாய் என்பதற்காகவே. 

பெருமாட்டியே! தடுமாறும் உன் துன்பத்தை விட்டுவிட்டு நான் சொல்வதைக் கேள் என்று சொல்லி மேலும் மணிமேகலை தொடர்கிறாள். 

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
23 சிறைவிடு காதை 
[ மணிமேகலையை அரசி சிறைவீடுசெய்த பாட்டு ]

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி