Thursday, 31 August 2017

சிலப்பதிகாரம் 7-12 Silappathikaram 7-12

தீம்-கதிர் வாள் முகத்தாள் செவ் வாய் மணி முறுவல் ஒவ்வா வேனும்,
‘வாங்கும் நீர், முத்து’ என்று, வைகலும், மால்-மகன் போல் வருதிர், ஐய!
வீங்கு ஓதம் தந்து, விளங்கு ஒளிய வெண் முத்தம்; விரை சூழ் கானல்
பூங் கோதை கொண்டு; விலைஞர் போல் மீளும் புகாரே, எம் ஊர்.

மறையின் மணந்தாரை வன் பரதர் பாக்கத்து மடவார் செங் கை
இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்-யாங்கு அறிகோம்? ஐய!
நிறை மதியும் மீனும் என, அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த
பொறை மலி பூங் கொம்பு ஏற, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே, எம் ஊர்.

உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள், உறை ஒன்று இன்றித்
தண்டா நோய் மாதர் தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம்? ஐய!
வண்டால் திரை அழிப்ப, கையான் மணல் முகந்து, மதிமேல் நீண்ட,
புண் தோய் வேல் நீர் மல்க, மாதர் கடல் தூர்க்கும் புகாரே, எம் ஊர்.மாதவியின் கானல்வரிப் பாடல்
"சார்த்துவரி"
"புகாரைப் பற்றிய பாடல்கள்"
"கையுறை மறுத்தல்"

தலைவி தலைவன் தந்த காதல் பரிசை வாங்க மறுக்கிறாள் - சொல்கிறாள் - என் புன்னகைக்குக் கதிரவன் ஒளி ஒப்பில்லை என்று "நான் முத்து வாங்க வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல நாள்தோறும் வருகின்றீர், ஐயனே, நீ தரும் முத்து மாலை எனக்கு  வேண்டாம். கடலலை முத்துக்களைக் கொடுத்துவிட்டு நான் எறிந்த பூ மாலைகளை எடுத்துக்கொண்டு மீளும் புகார் எம் ஊர்.


"தோழியிற் கூட்டம் கூடி, பின்பு வந்து வரைவல் என்ற தலைவனுக்குத் தோழி கூறுதல்"

மறைவிடத்தில் என்னைத் தழுவிவிட்டு விட்டுச் சென்றவரை எண்ணி என் கை வளையல்கள் கழன்று விழுந்து தூற்றுகின்றன. இது ஏழைப் பெண் எனக்கு முன்பே எப்படித் தெரியும்? அன்னம் புன்னை மரத்தில் ஏறுவதைப் பார்த்து வானத்து மீன்களிடையே நிலா தோன்றுகிறது என்று எண்ணி, வண்டுகள் ஆம்பல் மலரில் மொய்க்கும் புகார் நகரம் எம் ஊர் - என்கிளாள் தலைவி. 

உண்டாரை வெல்லும் நறவுக் கள்ளும், உணவும் ஒளிக்காமல் வைத்திருக்கும் பாக்கத்தில் கையுறை ஏதுமில்லாமல் வந்து தணிக்க முடியாத காதல் நோயைத் தருகின்றீர், ஐய, விளையாடும் வண்டல் விளையாட்டுக் கரையைக் கடல் அலை வந்து அழிக்கிறது என்று கையில் மணலை அள்ளிக் கடலைத் தூர்த்துக்கொண்டிருக்கும் மகளிர் வாழும் புகார் எம் ஊர் - என்கிறாள், தலைவி. 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-11 Silappathikaram 7-11

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
    மணிப் பூ ஆடை-அது போர்த்து,
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
    நடந்தாய்; வாழி, காவேரி!
கருங் கயல்-கண் விழித்து, ஒல்கி,
    நடந்த எல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை;
    அறிந்தேன்; வாழி, காவேரி!

பூவர் சோலை மயில் ஆல,
     புரிந்து குயில்கள் இசை பாட,
காமர் மாலை அருகு அசைய,
    நடந்தாய்; வாழி, காவேரி!
காமர் மாலை அருகு அசைய,
    நடந்த எல்லாம் நின் கணவன்
நாம வேலின் திறம் கண்டே;
    அறிந்தேன், வாழி, காவேரி!

வாழி அவன்-தன் வள நாடு
    மகவாய், வளர்க்கும் தாய் ஆகி,
ஊழி உய்க்கும் பேர் உதவி
    ஒழியாய்; வாழி, காவேரி!
ஊழி உய்க்கும் பேர் உதவி
    ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி ஆள்வான், பகல் வெய்யோன்
    அருளே; வாழி, காவேரி!

மாதவியின் கானல்வரிப் பாடல்
"ஆற்றுவரி காவிரியை நோக்கிப் பாடியன"

கோவலன் "புலவாய் வாழி காவேரி" - என்று பாடினான்.
காவேரியின் கணவன் (அரசன் சோழன்) செங்கோல் வளையாமை காரணம் - என்று மாதவி  குறிப்பிடுகிறாள்.

 • வண்டுகள் இரு மருங்கும் ஒலிக்க, பூ ஆடையைப் போர்த்திக்கொண்டு கயல் மீன் கண்களை விழித்துக்கொண்டு காவேரி நடப்பது அவள் கணவன் சோழன் செங்கோல் வளையாமையே காரணம் - என்கிறாள் மாதவி (கோவலன் ஒழுக்கம் தவறாமல் இருக்கவேண்டும் என்று இதனால் உணர்த்துகிறாள்) 
 • சோழனின் வேல் வலிமையே காவேரியின் பெருமித ஓட்டத்துக்குக் காரணமாம். - மாதவி சொல்கிறாள். 
 • காவிரி ஆற்றின் பேருதவிக்குச் சூரியனே காரணமாம். 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-10 Silappathikaram 7-10

ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,  140
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்’ என,
கலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,
நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன்.

கட்டுரை (அக்கால உரைநடை)
மாதவியின் கானல்வரிப் பாடல்

"மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல் கோவலனிடம் இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்"

இப்படி, கானல்வரிப் பாடல்களைக் கோவலன் பாடக் கேட்ட மாதவி, இவன் பாடலில் ஏதோ குறிப்பு இருக்கிறது அதனால் இவன் நிலையில் மயங்கிப் பாடுகிறான் என்று எண்ணினாள். அவன் இசையில் இன்பம் கண்டவள் போலப்  புலவி நோக்கில் யாழை வாங்கினாள். தானும் கானல்வரிப் பாடல்பாணி பாடத் தொடங்கினாள். நிலத் தெய்வம் வியக்கும்படியும், நில மக்கள் மகிழும்படியும், யாழ் போன்ற குரலோடு பாடத் தொடங்குகிறாள். 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம்
1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-9 Silappathikaram 7-9

சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்;
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்:
ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின்
சேரல், மட அன்னம்! சேரல், நடை ஒவ்வாய்.

"காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தியோன் சொல்லுதல்"

மடமைக் குணம் கொண்ட அன்னமே, நடையைப் பார்த்துக்கொண்டு இவள் பின்னே செல்லாதே. அது உலகையே மிதித்துத் துவட்டும் நடை.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-8 Silappathikaram 7-8

பவள உலக்கை கையால் பற்றி,
தவள முத்தம் குறுவாள் செங் கண்,
தவள முத்தம் குறுவாள் செங் கண்
குவளை அல்ல! கொடிய, கொடிய!

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,
அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்
கொன்னே வெய்ய! கூற்றம், கூற்றம்!

கள் ‘வாய் நீலம் கையின் ஏந்தி,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்,
புள் வாய் உணங்கல் கடிவாள் செங் கண்
வெள் வேல் அல்ல! வெய்ய, வெய்ய!

"குறியிடத்துத் தலைமகளைக் கண்ட பாங்கன் கூற்று அல்லது
தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைமகன், அவளை
விடுத்தல் அருமையால், ஆற்றானாய்த் தன்
நெஞ்சிற்குச் சொல்லுதல்"

 • அவள் பவள வாயில் முத்துப் பல். அவள் கண் குவளை மலர் அல்ல. கொடியவை. 
 • புன்னை நிழலில் அன்னத்தின் பின்னே நடப்பவள் எனக்கு ஒரு எமன். 
 • நீல மலரை எறிந்து மீனைக் கவறும் பறவையை ஓட்டுபவள் கண் வேலைக் காட்டிலும் கொடியவை. 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-7 Silappathikaram 7-7

கடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வர் நின் ஐயர்;
உடல் புக்கு, உயிர் கொன்று, வாழ்வைமன் நீயும்;
மிடல் புக்கு அடங்காத வெம் முலையோ பாரம்;
இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்!

கொடுங் கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை;
நெடுங் கண் வலையால் உயிர் கொல்வைமன் நீயும்;
வடம் கொள் முலையான் மழை மின்னுப் போல
நுடங்கி உகும் மென் நுசுப்பு இழவல் கண்டாய்!

ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்;
கோடும் புருவத்து உயிர் கொல்வைமன் நீயும்:
பீடும் பிறர் எவ்வம் பாராய்; முலை சுமந்து
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய்!

"திணைநிலை வரி " 
"புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்"

உன் ஐயன்மார் கடலில் புகுந்து மீன்களீன் உயிரைக்  கொன்று வாழ்கின்றனர். நீயோ என் உடலுக்குள் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றாய். உன் முலை பாரமாக இருக்கிறது. இடை ஒடிந்துவிடக் கூடாதே 

உன் ஐயன்மார் கொடிய மீன் வலையால் உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ உன் நீண்ட கண் வலையால் என்னைக் கொல்கிறாய். 

உன் ஐயன்மார் ஓடும் திமிலில் சென்று உயிர்களைக் கொல்கின்றனர். நீயோ வளையும் புருவத்தால் என்னைக் கொல்கிறாய். - அவளைத் தொட அவன் கூறும் சாக்கு போக்கு. 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-6 Silappathikaram 7-6

பொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,
பழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,
முழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,
எழுது-அரு மின் இடையே-எனை இடர் செய்தவையே.

திரை விரிதரு துறையே, திரு மணல் விரி இடமே,
விரை விரி நறு மலரே, மிடைதரு பொழில் இடமே,
மரு விரி புரி குழலே, மதி புரை திரு முகமே,
இரு கயல் இணை விழியே-எனை இடர் செய்தவையே.

வளை வளர்தரு துறையே, மணம் விரிதரு பொழிலே,
தளை அவிழ் நறு மலரே, தனியவள் திரி இடமே,
முளை வளர் இள நகையே, முழு மதி புரை முகமே,
இளையவள் இணை முலையே-எனை இடர் செய்தவையே.


"முரி வரி (ஒடியும் இசை)
பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்"

பொழில், மலர், மணம், மணல், அவள் மொழி, அவள் முலை, மதி போன்ற அவள் முகம், புருவ வளைவு, மின்னல் இடை - இவையே என்னைத் துன்பப் படுத்துகின்றன. 

அலை, துறை, குழல் - பிறவும் என்னைத் துன்புறுத்துகின்றன. 

தனியாக அவள் திரிவது, அவள் புன்னகை - பிறவும் என்னைத் துன்புறுத்துகின்றன. 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-5 Silappathikaram 7-5

கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்த்த முகம் திங்களோ, காணீர்!
திங்களோ, காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம் கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே!

எறி வளைகள் ஆர்ப்ப, இரு மருங்கும் ஓடும்,
கறை கெழு வேல் கண்ணோ கடுங் கூற்றம், காணீர்!
கடுங் கூற்றம், காணீர்-கடல் வாழ்நர் சீறூர்க்கே
மடம் கெழு மென் சாயல் மகள் ஆயதுவே!

புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி, கண்டார்க்கு
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ, காணீர்!
அணங்கு இதுவோ, காணீர்-அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே!

"நிலைவரி 
தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்"

கயல் மீன் போன்ற கண்களை எழுதி, வில் போன்ற  புருவத்தை எழுதி, கார்மேகம் போன்ற கூந்தலை எழுதி, காமன் செயல்களை எழுதி, முழுமை செய்துவிட்ட அவள் முகம் நிலவாக இருக்கும். வானத்தில் இருந்தால் பாம்பு கிரகணமாக வந்து கவ்வும் என்று எண்ணி திமில் பரதவர் ஊரில் பெண் உருவில் வாழ்கிறதே.

கடலில் மீன் பிடித்து மக்கள் வாழும் ஊருக்கு ஒலிக்கும் வளையல்களை அணிந்துகொண்டு, கண் இரண்டு பக்கங்களிலும் ஓட, பெண் உருவத்தில் ஒரு எமன் வந்திருக்கிறதே.

உயிரைக் கொல்லும் அணங்கு ஒன்று, காயும் மீனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டு ஐம்பால் கூந்தல் ஒப்பனையோடு அடுப்பங்கொடி படரும் கானலில் வந்திருக்கிறதே.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் -
1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

Wednesday, 30 August 2017

சிலப்பதிகாரம் 7-4 Silappathikaram 7-4

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல், உழுத தோற்றம் மாய்வான்,
பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து, நுண் தாது போர்க்கும் கானல்,
நிறை மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்.

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று, புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக,
கணம் கொள் வண்டு ஆர்த்து உலாம், கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி,
மணம் கமழ் பூங் கானல் மன்னி,மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன்; அறிவேனேல், அடையேன் மன்னோ.

வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில், மலர் கை ஏந்தி,
விலை மீன் உணங்கல் பொருட்டாக வேண்டு உருவம் கொண்டு, வேறு ஓர்
கொலை வேல் நெடுங் கண் கொடுங் கூற்றம் வாழ்வது
அலை நீர்த் தண் கானல் அறியேன்; அறிவெனேல், அடையேன் மன்னோ.


"முகம் இல் வரி"
" குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதல் மிகுதியைக் குறிப்பினால் அறிந்து கூறுதல்"

கானல் துறையில் மேயும் வலம்புரிச் சங்குகள் மணலில் உழுத கோடுகளைப் புன்னைப் பூக்கள் உதிர்ந்து போர்த்திக்கொண்டிருக்கும் காணல் துறையில் நிறைமதி போன்ற முகத்தில் இருக்கும் கயல் மீன் போன்ற இவள் கண்கள் என் தலைவனுக்குச் செய்த நோயை, சுணங்கு அழகு கொண்ட இவள் முலைதான் தீர்க்க வேண்டும் போலும். - பாங்கன் கூற்று

"கானல் வரி"
"கழற்று எதிர்மறை"

மீனைக் காய வைப்பதைக் காரணமாகக் கொண்டு, ஞாழல் பூவைக் கையில் ஏந்திக்கொண்டு வருத்தும் தொய்வப் பெண் ஒருத்தி இருப்பாள் என்பது தெரியாமல் போயிற்றே, தெரிந்திருந்தால் அங்குச் செல்லாமல் இருந்திருப்பேனே - தலைவன் பாங்கனுக்குச் சொல்கிறான்.

மீன் வலையைக் காய வைத்துக்கொண்டிருக்கும் முற்றத்தில், மீனைக் காயவைப்பது போல, பூவைக் கையில் ஏந்திக்கொண்டு கொல்லும் கண்களுடன் ஒரு பெண்-எமன் வாழும் என்பது தெரிந்திருந்தால் அங்கு நான் செல்லாமல் இருந்திருப்பேனே - தலைவன் பாங்கனுக்குச் சொல்கிறான்.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-3 Silappathikaram 7-3

கரிய மலர் நெடுங் கண் காரிகைமுன் கடல்-தெய்வம் காட்டி காட்டி,
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று, ஏழையம் யாங்கு அறிகோம், ஐய?
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்
புரி வளையும் முத்தும் கண்டு-ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே, எம் ஊர்.

காதலர் ஆகி, கழிக் கானல், கையுறை கொண்டு, எம் பின் வந்தார்
ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப, நிற்பதை யாங்கு அறிகோம், ஐய?
மாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீலப்
போதும், அறியாது-வண்டு ஊசலாடும் புகாரே, எம் ஊர்.

மோது முது திரையான் மொத்துண்டு, போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம்
மாதர் வரி மணல்மேல் வண்டல் உழு து அழிப்ப, மாழ்கி, ஐய!
கோதை பரிந்து அசைய, மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்ப, போவார் கண் போகாப் புகாரே, எம் ஊர்.

"சார்த்து வரி-முகச் சார்த்து"
"புகார் நகரைச் சிறப்பித்துப் பாடுதல் - 
தோழி தலைமகன் முன் நின்று வரைவு கடாதல்"

காரிகை ஒருத்தியிடம் கடல் தெய்வத்தைக் காட்டி, "பிரியமாட்டேன்" என்று சொன்ன சூள்-உரை பொப்பார் என்று ஏழைப் பெண் எங்கனம் உணர்வேன், ஐயனே. கடலில் தோன்றும் சங்கையும் முத்துக்களையும் பார்த்து வானத்து நிலாவும் மீன் கூட்டமும் என்று எண்ணிஇக்கொண்டு ஆம்பல் ஏமாந்து பூக்கும் புகார் நகரம்தான் எம் ஊர் - தலைவி கூற்று 

காதலர் ஆகிக் கானல் நிலத்தில் கையுறைப் பரிசுப் பொருள் எடுத்துக்கொண்டு என் பின் அவர் வந்தார். பின் ஏதும் அறியாதவர் போல இருப்பார் என்று ஏழைப் பெண்ணுக்கு எப்படித் தெரியும், ஐயனே, மாதரார் கண்களையும், மலர்ந்த நீல மலர்களையும் பார்த்து எது உண்மையான பூ என்று தெரியாமல் வண்டு ஊசலாடும் புகார் நகரமே எம் ஊர். - தலைவி கூற்று 

கடல் அலையில் வரும் சங்கு மகளிர் மணலில் விளையாடும் வண்டலை உழுது அழிக்கக் கண்டு மகளிர் தாம் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையைக் கழற்றி எறிந்து சங்குப் பூச்சிகளை ஓட்டுவதைப் பார்த்து, மாலையில் உள்ள குவளைப் பூக்கள் கண் சிமிட்டும் நகரமாகிய புகாரே எம் ஊர். 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் -
1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-2 Silappathikaram 7-2

திங்கள் மாலை வெண்குடையான்,
    சென்னி,செங்கோல்-அது ஓச்சி,
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாய்; வாழி, காவேரி!
கங்கை-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மங்கை மாதர் பெரும் கற்பு என்று
    அறிந்தேன்; வாழி, காவேரி!

 மன்னும் மாலை வெண்குடையான்
    வளையாச் செங்கோல்-அது ஓச்சி,
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாய்; வாழி, காவேரி!
கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,
    புலவாதொழிதல், கயல் கண்ணாய்!
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று
    அறிந்தேன்; வாழி, காவேரி!

உழவர் ஓதை, மதகு ஓதை,
    உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
    நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
    நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
    வளனே; வாழி, காவேரி!

"முகம் உடை வரி-ஆற்று வரி காவிரியை நோக்கிப் பாடியன்"

காவேரி ஆறே, உன் அரசன் சென்னி கங்கை ஆற்றைப் புணர்ந்தாலும் நீ ஊடல் கொள்ளமாட்டாய். இது மாதரின் பெருங் கற்பு என அறிந்துகொண்டேன். நீ வாழி. 

 • சென்னி = சோழன். மாலையில் முளைத்தெழும் திங்கள் போன்ற வெண்கொற்றக் குடை உடைய செங்கோல் அரசன். 
 • இமயத்தில் வில் பொறித்து மீண்டபோது கங்கையில் நீராடியவன்.

காவேரி ஆறே, உன் அரசன் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவி கொள்ள மாட்டாய். இது மாதரின் பெருங் கற்பு என அறிந்துகொண்டேன். நீ வாழி.

 • கன்னி = கன்னியாகுமரி

உழவர் ஓசை, மதகில் நீர் பாயும் ஓசை, கரையை உடைத்துக்கொண்டு ஓடும் நீரின் ஓசை, விழாக் கொண்டாடும் ஓசை, நெல் அடிக்கும் ஓசை, - சிறக்கும்படி நடந்த காவிரியே, இவை அனைத்தும் போராளிகளின் ஓசையைக் கேட்கும் அரசன் வளவனால் வந்த வளம் என்று அறிந்துகொள்.
 • கோவலன் வளம் மாதவியின் சிறப்பு என்பது குறிப்பு.
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி

சிலப்பதிகாரம் 7-1 Silappathikaram 7-1

சித்திரப் படத்துள் புக்கு, செழுங் கோட்டின் மலர் புனைந்து,
மைத் தடங் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி,
பத்தரும், கோடும், ஆணியும், நரம்பும் என்று
இத் திறத்துக் குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி-
பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல்,தைவரல்,
கண்ணிய செலவு, விளையாட்டு, கையூழ்,
நண்ணிய குறும்போக்கு, என்று நாட்டிய
எண் வகையால் இசை எழீஇ;
பண் வகையான் பரிவு தீர்ந்து;
மரகதமணித் தாள் செறிந்தமணிக் காந்தள் மெல் விரல்கள்,
பயிர் வண்டின் கிளை போல, பல் நரம்பின்மிசைப் படர;
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,
ஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்ட வகை தன் செவியின் ஓரத்து-
‘ஏவலன்; பின்,பாணி யாது?’ என,
கோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,
காவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும்,   20
மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன்.

மாதவியின் தோழி வயந்தமாலையின் கையில் யாழ் இருந்தது. மாதவி அந்த யாழைத் தொழுதாள். அதனைத் தன் கையில் வாங்கினாள். அதன் நரம்புகளைத் திருத்தினாள். கோவலனிடம் நீட்டினாள். அதனை அவன் வாங்கி மீட்டிக்கொண்டு கானல்வரிப் பாடல்களைப் பாடத் தொடங்கினான்.

இந்தச் செய்தி இங்குக் கட்டுரை (அக்கால உரைநடை) வடிவில் இங்குத் தரப்பட்டுள்ளது.

சித்திர வேல்லைப்பாடுடைய துணியில் யாழ் போர்த்தப்பட்டிருந்தது, மரத்தில் பறித்த பூக்கள் அதன் மேல் தூவப்பட்டிருந்தன. கண்ணில் மை தீட்டிக்கொண்டு மணக் கோலத்துடன் இருக்கும் பெண் போல அந்த  யாழ் அழகுடன் காணப்பட்டது. அதன் பத்தர், கோடு, ஆணி, நரம்பு ஆகிய பகுதிகளில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டிருந்தன. அதனை மாதவி தொழுது வாங்கினாள்.


 1. பண்ணல், 
 2. பரிவட்டணை, 
 3. ஆராய்தல், 
 4. தைவரல், 
 5. கண்ணிய செலவு, 
 6. விளையாட்டு, 
 7. கையூழ், 
 8. நண்ணிய குறும்போக்கு, 
என்று நாட்டிய எட்டு வகைகளில் இசையைக் கூட்டிப் பார்த்தாள். பண் வகைகளைப் பாடிப் பார்த்தாள். மரகதக் கல் மோதிரம் அணிந்த அவளது விரல்கள் - காந்தள் போன்ற விரல்கள் - குரல் எழுப்பும் வண்டுகள் போல நரம்புகளை வருடின.


 1. வார்தல், 
 2. வடித்தல், 
 3. உந்தல், 
 4. உறழ்தல், 
 5. சீருடன் உருட்டல், 
 6. தெருட்டல், 
 7. அள்ளல், 
 8. ஏர் உடைப் பட்டடை, 

என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் கரணத்துப் பட்ட வகைகளில் தன் காதுகளைக் கொடுத்துக் கேட்டுப் பார்த்தாள்.

"நான் உன்னை ஏவவில்லை, பின்னர் நான் பாடவேண்டிய பாணி யாது" என்று வினவிய வண்ணம் கோவலன் கையில் யாழை யீட்டினாள்.

அவன் அதனை வாங்கி, காவிரியை நோக்கிய ஆற்று-வரி, கடல்நிலம் கானலை நோக்கிய கானல்-வரி ஆகிய வரிப்பாடல்களை வாசிக்கத் தொடங்கினான்.  மாதவியின் மனம் மகி.உமாறு வாசிக்கத் தொடங்கினான்.


யாழ் உறுப்புகளைக் காட்டும் படங்கள் 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - 1 - புகார்க் காண்டம் - 7. கானல் வரி
 

Tuesday, 29 August 2017

பெரியபுராணம் பாயிரம் PeriyaPuranam preface

1. பாயிரம்

1.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
விளக்கம்

2.
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள்
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.
விளக்கம்

3.
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம்.
விளக்கம்

 4.
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.
விளக்கம்

5.
அளவிலாத பெருமையராகிய
அளவிலா  அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.
விளக்கம்

6.
தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம்
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப்
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்
விளக்கம்

7.
செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல்
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால்
விளக்கம்

8.
மேய இவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய
தூய பொன்னணி சோழன் நீடூழிபார்
ஆய சீர் அநபாயன் அரசவை
விளக்கம்

9.
அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற்காம் எனின்
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே
விளக்கம்

10.
இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.
விளக்கம்

சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் - சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் நூற்பயன் PeriyaPuranam 10

10.
இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற 
பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற 
செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.

இருள் இரண்டு வகை. அக-இருள், புற-இருள். புற இருளை ஞாயிறு போக்கும். அக இருளைத் திருத்தொண்டர் புராணம் என்னும் இந்த நூல் போக்கும். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு


பெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 9

9.
அருளின் நீர்மைத் திருத் தொண்டறிவரும் 
தெருளின் நீரிது செப்புதற்காம் எனின் 
வெருளில் மெய் மொழி வான் நிழல் கூறிய 
பொருளின் ஆகும் எனப் புகல்வாம் அன்றே 

திருத்தொண்டு என்பது அருளின் நீர்மை. அறிய முடியாத தெளிவைக் காட்டிலும் நீர்மை உடையது. இதனைச் சொல்வதற்கு அரிது. இது அச்சம் இல்லாத உண்மை விளக்கம். வானத்தின் நிழலைக் காட்ட முடியுமா? காட்ட முனைவது போல தொண்டர் பெருமையைச் சொல்லத் தொடங்குகிறேன். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் அனபாயன் அரசவை PeriyaPuranam 8

8.
மேய இவ் உரை கொண்டு விரும்புமாம் 
சேயவன் திருப் பேர் அம்பலம் செய்ய 
தூய பொன்னணி சோழன் நீடூழிபார் 
ஆய சீர் அநபாயன் அரசவை 

திருத்தொண்டர் பற்றி நான் விரும்பிக் கூறும் இந்த உரையை சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்த அனபாயன் அரசவை (மூன்றாம் குலைத்துங்கன் 1178 - 1218) விரும்பும். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 7

7.
செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் 
அப் பொருட்கு உரை யாவரும் கொள்வர் ஆல் 
இப் பொருட்கு என் உரை சிறிது ஆயினும் 
மெய்ப் பொருட்கு உரியார் கொள்வர் மேன்மையால் 

நான் சொல்லும் பொருளின் சிறப்பினை எண்ணி எல்லாரும் அதனை ஏற்றுக்கொள்வர். என் உரை சிறிது ஆயினும் மெய்பொருளுக்கு உரியவர் அதன் மேன்மையை எண்ணி ஏற்றுக்கொள்வர். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 6

6.
தெரிவரும் பெருமைத் திருத் தொண்டர் தம் 
பொருவரும் சீர் புகலலுற்றேன் முற்றப் 
பெருகு தெண் கடல் ஊற்றுண் பெரு நசை 
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் 

தெரிந்துகொள்ள முடியாத பெருமை உடையவர்கள் திருத்தொண்டர். ஒப்பில்லாத அவர்களின் புகழைச் சொல்லுகிறேன். பெருகிக் கிடக்கும் தெளிந்த ஊற்றுநீர்க் கடலை நாய் நக்குவது போல நக்குகிறேன். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 5

5.
அளவிலாத பெருமையராகிய
அளவிலா  அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பது அரிது ஆயினும்
அளவிலாசை துரைப்ப அறைகுவேன்.

அளவில்லாத பெருமை உடையவர்கள் சிவனடியார். அவர்களின் அளவில்லாத புகழைக் கூறுகிறேன். அவர்களின் பெருமையில் துளி அளவு கூட உரைப்பது அரிது. எனினும் எனக்கு இருக்கும் அளவில்லாத ஆசையால் இதனைச் சொல்கிறேன்.  


பாயிரம்

சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் அவையடக்கம் PeriyaPuranam 4

 4.
மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் 
துதி செயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை 
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே.

நிலாவினை வளர்க்கும் சடைமுடி கொண்ட தில்லை அம்பலவாணன் அவையில் இருக்கும் பெருமக்கள், நாயன்மார்கள் பற்றிய சொல்லைக் கேட்டுத் துய்க்கும் பேரவைப் பெருமக்கள்  விதி முறைமையில் விளங்கி வெல்ல வேண்டும் என வாழ்த்தித் தொடங்குகிறோம். 


பாயிரம்

சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு


பெரியபுராணம் கடக்களிறு PeriyaPuranam 3

3.
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் 
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் 
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்து வாம். 

எடுத்துக்கொண்டிருக்கும் ‘மாக்கதை’ இனிய தமிழால் நடக்க வேண்டி நமக்கு மேன்மை தந்து அருள் புரியும் ஐந்து கையும், அகன்று விரிந்த காதும், நீண்ட முடியும் கொண்ட மதம் பொழியும் களிற்றினை (பிள்ளையாரை) எண்ணத்துக்குள் இருத்திக்கொள்வோம். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு


பெரியபுராணம் தில்லை நடஞ்செய் வரதர் PeriyaPuranam 2

2
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே 
தான் அடைந்த உறுதியைச் சாருமால் 
தேன் அடைந்த மலர்ப் பொழில் தில்லையுள் 
மா நடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ.

தேன் அடைந்துகிடக்கும் பொழில் சூழ்ந்த தில்லையில் நடனமாடிக்கொண்டிருக்கும் வரதனின் பொன்னடிகளைத் தொழ, ஊனில் அடைந்துகொண்டிருக்கும்  உடம்பு பிறவிப் பயனை அடையும். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்
சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம் உலகெலாம் PeriyaPuranam 1

1.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் 
நிலவு லாவிய நீர்மலி வேணியன் 
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். 

அவனை உலகமெல்லாம் உணர்ந்திருக்கிறது. உணராமலும் இருக்கிறது. சொல்ல மட்டும் தெரியவில்லை. அவன் சடையில் நீர் இருக்கிறது. அதில் நிலா உலாவுகிறது. அவன் அளவுக்கு அடங்காத ஒளி வடிவில் இருக்கிறான். விண் வெளி அம்பலத்தில் ஆடுகிறான். அவன் அடிகள் மலர் போன்றவை. அதில் அவன் சிலம்பு அணிந்துகொண்டு ஆடுகிறான். அவனை நாம் வாழ்த்துவோம். வணங்குவோம். 

பாயிரம்
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் - சைவம் - 12 ஆம் திருமுறை - 12 ஆம் நூற்றாண்டு 

Monday, 28 August 2017

கம்பராமாயணம் 32-34 Kambaramayanam 32-34

32.
வாங்கரும் பாதம் நான்கும்
    வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி செவிகள் ஆரத்
    தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு அவன், புகழ்ந்த நாட்டை
    அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான் என்ன
    யான் மொழியல் உற்றேன   1

நீண்ட அடிகள்  நான்கு கொண்ட பாக்களால் வால்மீகி என்பான் தேவர்களின் செவி குளிருமாறு புகழ்ந்த நாட்டை (கோசலம்) அன்பு என்னும் நறவத் தேனைப் பருகி அந்த மயக்கத்தில் ஊமையன் பேசுவது போல, சொல்லத் தொடங்குகிறைன். 

33.
வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.   2

வரப்புகளிலெல்லாம் முத்துகள். நீர் தத்தும் வரப்புகளிலெல்லாம் சங்குகள். ஓடும் நீர்களில் எல்லாம் செம்பொன், எருமைக் கூட்டங்கள் எல்லாம் கழுநீர்ப் பூக்களை மேயும் கொள்ளை. நீர்ப்பரப்பெல்லாம் பவளம். நெல் வயல்களிலில் எல்லாம் அன்னப்பறவைகள். கரம்பு நிலப் பாறைகளில் எல்லாம் தேன் கூடுகள். காடுகளில் எல்லாம் வண்டுகு கூட்டம். 

34.
ஆறு பாய் அரவம்; மள்ளர்
    ஆலை பாய் அமலை; ஆலைச்
சாறு பாய் ஒதை; வேலைச்
    சங்கின் வாய் பொங்கும் ஓசை;
ஏறு பாய் தமரம்; நீரில்
    எருமை பாய் துழனி; இன்ன
மாறு மாறு ஆகி தம்மின்
    மயங்கும் மா மருத வேலி.   3

அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி, என்பன ஒலியைக் குறிக்கும் சொற்கள். ஆறு, உழவரின் கரும்பாலை, கரும்பாலைச் சாறு, சங்கு, எருதுகள், எருமைகள், - இவற்றின் ஒலிகள் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும். 

பாலகாண்டம் - நாட்டுப் படலம்
கம்பன் இயற்றிய இராமாயணம் கம்பராமாயம் - தமிழ் வளம் - கதைமாந்தர்கள் தமிழர் பண்பாடு நோக்கில்

Saturday, 26 August 2017

தொல்காப்பியம் புறத்திணையியல் Tolkaappiyam Public Affairsதமிழ் இலக்கியத்தில் தமிழரின் வாழ்வியல் பாகுபாடு 
புறத்திணையியல்

59.
அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்,
வெட்சிதானே குறிஞ்சியது புறனே;
உட்கு வரத் தோன்றும் ஈர்-ஏழ் துறைத்தே
விளக்கம் 
 
60.
வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும்
விளக்கம் 
 
61.
படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி,
புடை கெடப் போகிய செலவே, புடை கெட
ஒற்றின் ஆகிய வேயே, வேய்ப்புறம்
முற்றின் ஆகிய புறத்து இறை, முற்றிய
ஊர் கொலை, ஆ கோள், பூசல் மாற்றே,
நோய் இன்று உய்த்தல், நுவல்வழித் தோற்றம்,
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என
வந்த ஈர்-ஏழ் வகையிற்று ஆகும்
விளக்கம் 
 
62.
மறம் கடைக்கூட்டிய குடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும்-அத் திணைப் புறனே
விளக்கம் 
 
63.
வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்; உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தை, வேம்பே, ஆர், என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்
வாடா வள்ளி, வயவர் ஏத்திய
ஓடாக் கழல்-நிலை உளப்பட ஓடா
உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்
மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்
தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்
ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்
வரு தார் தாங்கல், வாள் வாய்த்துக் கவிழ்தலென்று
இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க
நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல்
சீர்த்த மரபின் பெரும்படை, வாழ்த்தல், என்று
இரு-மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு-மூன்று துறைத்தே
விளக்கம் 
 
64.
வஞ்சிதானே முல்லையது புறனே;
எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்
அஞ்சு தகத் தலைச் சென்று, அடல் குறித்தன்றே
விளக்கம் 
 
65.
இயங்கு படை அரவம், எரி பரந்து எடுத்தல்,
வயங்கல் எய்திய பெருமையானும்,
கொடுத்தல் எய்திய கொடைமையானும்,
அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்,
மாராயம் பெற்ற நெடுமொழியானும்,
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்,
வரு விசைப் புனலைக் கற் சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்,
பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்,
வென்றோர் விளக்கமும், தோற்றோர் தேய்வும்
,குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்,
அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ,
கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே
விளக்கம் 
 
66.
'உழிஞைதானே மருதத்துப் புறனே;
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
அனை நெறி மரபிற்று ஆகும்' என்ப
விளக்கம் 
 
67.
அதுவேதானும் இரு-நால் வகைத்தே
விளக்கம் 
 
68.
கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்,
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்,
தொல் எயிற்கு இவர்தலும்,தோலது பெருக்கமும்,
அகத்தோன் செல்வமும், அன்றி முரணிய
புறத்தோன் அணங்கிய பக்கமும், திறல் பட
ஒரு தான் மண்டிய குறுமையும், உடன்றோர்
வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட,
சொல்லப்பட்ட நால்-இரு வகைத்தே
விளக்கம் 
 
69.
'குடையும், வாளும், நாள்கோள்; அன்றி,
மடை அமை ஏணிமிசை மயக்கமும்; கடைஇச்
சுற்று அமர் ஒழிய வென்று கைக் கொண்டு,
முற்றிய முதிர்வும்; அன்றி, முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்; மற்று அதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்;
நீர்ச் செரு வீழ்ந்த பாசியும்; அதாஅன்று,
ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்;
மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்;
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்;
வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற,
தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ,
வகை நால்-மூன்றே துறை' என மொழிப
விளக்கம் 
 
70.
'தும்பைதானே நெய்தலது புறனே;
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று' என்ப
விளக்கம் 
 
71.
கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்,
சென்ற உயிரின் நின்ற யாக்கை
இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு
இரு பாற்பட்ட ஒரு சிறப்பின்றே
விளக்கம் 
 
72.
தானை, யானை, குதிரை, என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்;
வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி, ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார் நிலை; அன்றியும்,
இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்;
ஒருவன், ஒருவனை, உடை படை புக்கு,
கூழை தாங்கிய எருமையும்; படை அறுத்து,
பாழி கொள்ளும் ஏமத்தானும்;
களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும்; களிற்றொடு
பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும்; வாள் வாய்த்து,
இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்;
செருவகத்து இறைவன் வீழ்ந்தென, சினைஇ,
ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்;
பல் படை ஒருவற்கு உடைதலின், மற்றவன்
ஒள் வாள் வீசிய நூழிலும்; உளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
விளக்கம் 
 
73.
'வாகைதானே பாலையது புறனே;
தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல்' என்ப
விளக்கம் 
 
74.
'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்,
ஐவகை மரபின் அரசர் பக்கமும்,
இரு-மூன்று மரபின் ஏனோர் பக்கமும்,
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்,
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்,
நால்-இரு வழக்கின் தாபதப் பக்கமும்,
பால் அறி மரபின் பொருநர்கண்ணும்,
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலைபெற்றது' என்மனார் புலவர்
விளக்கம் 
 
75.
கூதிர், வேனில், என்று இரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்;
ஏரோர் களவழி அன்றி, களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்; தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்;
ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்;
பெரும் பகை தாங்கும் வேலினானும்,
அரும் பகை தாங்கும் ஆற்றலானும்,
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்;
ஒல்லார் நாண, பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து,
தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்;
ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்;
பகட்டினானும் ஆவினானும்
துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்;
கடி மனை நீத்த பாலின்கண்ணும்;
எட்டு வகை நுதலிய அவையகத்தானும்;
கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்;
இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்;
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்;
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்;
அருளொடு புணர்ந்த அகற்சியானும்;
காமம் நீத்த பாலினானும்;-என்று
இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே
விளக்கம் 
 
76.
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே;
பாங்கு அருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே
விளக்கம் 
 
77.
மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்,
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்
புண் கிழித்து முடியும் மறத்தினானும்,
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,
"இன்னன்!" என்று இரங்கிய மன்னையானும்
"இன்னது பிழைப்பின் இது ஆகியர்!" எனத்
துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்,
இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்-
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,
நீத்த கணவன்-தீர்த்த வேலின்
பேஎத்த மனைவி அஞ்சியானும்,
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்,
முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ,
ஈர்-ஐந்து ஆகும்' என்ப, பேர் இசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல்-மயக்கத்தானும்,
தாமே எய்திய தாங்க அரும் பையுளும்,
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதானந்தமும்,
நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனி மகள் புலம்பிய முதுபாலையும்,
கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,
காதலி இழந்த தபுதார நிலையும்,
காதலன் இழந்த தாபத நிலையும்,
நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்
சொல் இடையிட்ட பாலை நிலையும்,
மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்,
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்
பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு,
நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே
விளக்கம் 
 
78.
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;
நாடும் காலை, நால்-இரண்டு உடைத்தே
விளக்கம் 
 
79.
'அமரர்கண் முடியும் அறு வகையானும்,
புரை தீர் காமம் புல்லிய வகையினும்,
ஒன்றன் பகுதி ஒன்றும்' என்ப
விளக்கம் 
 
80.
வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ,
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்,
முன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை,
வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே
விளக்கம் 
 
81.
'காமப் பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும்' என்மனார் புலவர்
விளக்கம் 
 
82.
குழவி மருங்கினும் கிழவது ஆகும்
விளக்கம் 
 
83.
'ஊரொடு தோற்றமும் உரித்து' என மொழிப-
'வழக்கொடு சிவணிய வகைமையான'
விளக்கம் 
 
84.
மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே
விளக்கம் 
 
85.
கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
விளக்கம் 
 
86.
கொற்றவள்ளை ஓர் இடத்தான
விளக்கம் 
 
87.
'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப
விளக்கம் 
 
88.
தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்;
கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும்,
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி,
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ,
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;
சிறந்த நாளினில் செற்றம் நீக்கி,
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்;
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்;
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;
மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்;
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி,
நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி,
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;
காலம் கண்ணிய ஓம்படை-உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே
விளக்கம் 

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 88 Tolkaappiyam Public Affairs 88

சூதர் - கூத்தர் - பாணர் - பொருநர் - விறலி - பிறந்த நாள் - மண்ணு மங்கலம் - ஓம்படை

சூதர் - புகழை விரும்பும் மன்னனை அவனது புகழைப் பாடி உறக்கத்திலிருந்து எழுப்புவர். இது  துயிலெடை நிலை
கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலானோரை வழியில் கண்டு வள்ளல் ஒருவனிடம் தான் பெற்றுவந்த பரிசில் பற்றுக் கூறி அவர்களை அவன் பால் அனுப்புதல் ஆற்றுப்படை
பிறந்த நாள் கொண்டாடுவது பெருமங்கலம்
புகழ் பெற்ற நாளைக் கொண்டாடுவது மண்ணுமங்கலம் 
அரசனின் ஆட்சியைப் பாராட்டுவது குடைநிழல்
நல்லிணக்கம் இல்லாதவரை அச்சுறுத்தும் வகையில் கொண்டாடுவது வாள்மங்கலம் 
பகைவர் கோட்டையை அழித்ததை எண்ணிக் கொண்டாடுவது மண்ணுமங்கலம் 
பரிசில் பெறக் காத்திருப்பது கடைக்கூட்டு நிலை
பெற்ற பின்னர் வாழ்த்துவது பரிசில் விடை
அச்சமோ, மகிழ்ச்சியோ இல்லாமல் நல்ல நாளோ, பறவை போன்ற சகுனமோ பார்ப்பது காலம் கண்ணிய ஓம்படை
இவையும் பாடாண் திணையில் வரும்.

Raising the hero
Guiding artists to a patron
Celebrating birthday
Celebrating a day of achievement
Praising the rule of a king
Sward parade
Celebrating the day victory on a fort
Praising received gift
Seeking 'Omen' without fear of happy

All these come into the sector of 'Praising'.


 • தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்; 
 • கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி, பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்; 
 • சிறந்த நாளினில் செற்றம் நீக்கி, பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்; 
 • சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்; 
 • நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்; 
 • மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்; 
 • மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்; 
 • பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்; 
 • பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி, நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்; 
 • அச்சமும் உவகையும் எச்சம் இன்றி, நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்; காலம் கண்ணிய ஓம்படை 
உளப்பட ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே
   
88.

தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்;
கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும்,
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி,
பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ,
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்;
சிறந்த நாளினில் செற்றம் நீக்கி,
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்;
சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்;
நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்;
மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்;
மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்;
பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்;
பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி,
நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்;
அச்சமும் உவகையும் எச்சம் இன்றி,
நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்;
காலம் கண்ணிய ஓம்படை-உளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்
காலம் மூன்றொடு கண்ணிய வருமே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 87 Tolkaappiyam Public Affairs 87

இயன்மொழி - கடைநிலை - கண்படை - வேள்வி நிலை - விளக்கு நிலை -  செவியறிவுறூஉ - புறநிலை வாழ்த்து - கைக்கிளை

 • கொடுப்பவரைப் புகழ்ந்து கொடுக்காதவரைப் பழித்தல்
 • தானே முன்வந்து ஒருவனின் இயல்புகளைப் பாடல்
 • தொலைவிலிருந்து வந்திருக்கும்  தன் வருத்தம் நீங்க அரசனிடம் எடுத்துச் சொல் என்று அரண்மனை வாயில் காவலனை வேண்டும் கடைநிலை  
 • நிரந்தரமாகக் கண்ணுறங்கும் இறப்புப் பற்றிப் பாடும் கண்படை நிலை 
 • வேள்வி செய்யும் பார்ப்பன்னுக்கு பசுக்களை வழங்கும் வேள்வி நிலை 
 • அரசனின் வெற்றி வேலைப் புகழ்ந்து பாடும் விளக்கு நிலை
 • மருந்து போல உதவும் சொற்களால் கூறும் வாயுறை வாழ்த்து 
 • நிலைமையை அறிந்துகொள்ளுமாறு கூறும் செவியறிவுறூஉ 
 • பிறன் ஒருவனைக் காப்பாற்றும்படி தெய்வத்தை வேண்டும் புறநிலை வாழ்த்து 
 • தகாத செயல் புரியும் கைக்கிளை (ஒருதலைக் காமம்) நான்கு வகை

ஆகியவை பாடாண் திணையில் வரும்.

Praising the man who gives donation and blaming the man who did not
Declaring one's attitude
Requesting the watchman to enter into the palace
Death of a hero
Offering cows to perform 'yaga'
Praising the spear of a king 
Words like medicine
Informing the situation to the hero.
Praying the God to save the hero
Trying to get a girl whom he is in love

These are also come under the sector of 'singing the hero'

87.

'கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 86 Tolkaappiyam Public Affairs 86

கொற்ற வள்ளை

கொற்றம் என்பது அரசனின் வெற்றிச் சிறப்பு.
வள்ளை என்பது வளைவு
ஓர் அரசனின் கொற்றம் வளைவது பற்றிப் பேசுவது கொற்ற வள்ளை ஆகும்.

இரவலர் புரவலை நீயும் அல்லை எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

Pointing the misrule is also come under stand-less part part of life-style.
   
86.

கொற்றவள்ளை ஓர் இடத்தான

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

Friday, 25 August 2017

தொல்காப்பியம் புறத்திணையியல் 85 Tolkaappiyam Public Affairs 85

கொடிநிலை - கந்தழி - வள்ளி 

கொடிநிலை - கடவுளின் புகழ் கொடிகட்டிப் பறக்கும் தன்மை
கந்தழி - கடவுள் தகாதவர்களை அழிக்கும் தன்மை
வள்ளி - கடவுளின் வரம் தரும் வள்ளண்மை
இந்த மூன்றும் கடவுள் வாழ்த்துக்குப் பொருந்தி வரும் 

The pride of God
The destroying power of  God
The grace of God
All these qualities are the embodiment in prayer. 
   
85.

கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 84 Tolkaappiyam Public Affairs 84

உலா

ஊரொடு தோற்றம் என்னும் உலா நூலில் பாராட்டும்போது தலைவனுக்குச் சூட்டப்பட்ட மெய்ப்பெயரால் குறிப்பிட்டுப் பாராட்டுவர்.

எடுத்துக்காட்டு
குலோத்துங்க சோழன் உலா
ஏகாம்பரநாதர் உலா

When the hero is praised as he is displaying his bombard in street, the literature will be on his personal name i.e not in common name. 
   
84.

மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 83 Tolkaappiyam Public Affairs 83

உலா

கடவுளையோ, மனிதனையோ தலைவனாக வைத்துப் போற்றும்போது அவன் ஊரில் உலா வருவதாகப் பாடுவதும் உண்டு.

The hero praised as he is bombarding through the street. 

83.

'ஊரொடு தோற்றமும் உரித்து' என மொழிப-
'வழக்கொடு சிவணிய வகைமையான'

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 82 Tolkaappiyam Public Affairs 82

பிள்ளைத் தமிழ்

விரும்பும் தலைவனைக் குழந்தையாகப் பாவித்து வாழ்த்துவதும் உண்டு.

The hero may also be praised treating him as one's own child.
   
82.

குழவி மருங்கினும் கிழவது ஆகும்

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 81 Tolkaappiyam Public Affairs 81

உலா 

கடவுள் மேல் காமம் கொள்வதும் உண்டு.
மக்கள் மீது காமம் கொள்வதுஉம் உண்டு.

அமரர் மேல் காமம் கொள்வது ஒருவகை 

அமரர் என்போர் விரும்பத் தக்க மேல்-உலக மக்கள் 
கடவுள் என்பவர் உணர்வுகளையும் கடந்தவர்

Loving the God of Unknown and Known are different.

81.

'காமப் பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும்' என்மனார் புலவர்

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 80 Tolkaappiyam Public Affairs 80

பரவல் - புகழ்ச்சி

தெய்வத்தைப் பரவுவர்.
மக்களைப் புகழ்வர்.
வழங்கிவரும் பாடல்களில் இது புலனாகும்.
செந்துறை யாப்புப் பாடல்களாலும், இசை வண்ணம் சேர்ந்த பாடல்களாலும் கூட இந்த வாழ்த்துப் பகுதிகள் இரண்டும் அமையும்.

We pray the God
We praise the person.
Both of these kinds can be revealed also in the prosody form of Sendurai and Vannam in Tamil language. 

80.

வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ,
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்,
முன்னோர் கூறிய குறிப்பினும், செந்துறை,
வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே
   

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 79 Tolkaappiyam Public Affairs 79

அமரர் - கடவுள் வாழ்த்து

அமரர் என்போர் தேவர் அல்லது தெய்வம்.
ஆணோ, பெண்ணோ தெய்வத்தைத் தழுவி இன்பம் காண விரும்பிப் போற்றுவது பாடாண் திணையின் ஒரு பகுதி.
மற்றொரு பகுதி மக்களைப் பாடுவது. 

Love and lust behavior on God is one-part of praising-behavior.
   
79.
'அமரர்கண் முடியும் அறு வகையானும்,
புரை தீர் காமம் புல்லிய வகையினும்,
ஒன்றன் பகுதி ஒன்றும்' என்ப

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 78 Tolkaappiyam Public Affairs 78

பாடாண் - கைக்கிளை

புறத்திணையில் வரும் பாடாண் திணை என்பது, அகத்திணையில் வரும் கைக்கிளைத் திணையின் புறப்பகுதியாகக் கொள்ளப்படும்.
இது எட்டுப் பாகுபாடுகளைக் கொண்டது.

Praising a hero in public life is the open culture of the behavior of one-side-love in love-behavior.
There are eight kinds in this behavior.
   
78.

பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே;
நாடும் காலை, நால்-இரண்டு உடைத்தே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 77 Tolkaappiyam Public Affairs 77

பேய் - வஞ்சினம் - தொடாக் காஞ்சி - அஞ்சி - மகட்பால் - மைதானந்தம் - முதுபாலை - கையறு நிலை - தபுதார நிலை  - பாலை நிலை - காடு வாழ்த்து
 1. சாவின் பெருமை 
 2. இளமை நிலையாமையைக் காட்டும் முதுமை 
 3. தன் புண்ணைத் தானே கிழித்துக்கொண்டு சாகும் மறம் 
 4. ஒருவன் போரின்போது பட்ட புண்ணைச் சுற்றத்தாரும் பேயும் பாதுகாத்தல் 
 5. இறந்தபோது ஒருவனை இன்னவன் எனப் போற்றும் மன்னை
 6. இன்னது செய்யாவிட்டால் இன்னவன் ஆவேனாகுக எனக் கூறும் வஞ்சினம் 
 7. கணவன் புண்ணைப் பேய் தொடாமல் மனைவி பாதுகாக்கும் தொடாக் காஞ்சி 
 8. கணவன் மீது பாய்ந்த வேலால் மனைவி தன்னை குத்திக்கொண்டு மாய்ந்த அஞ்சி 
 9. வேந்தனுக்குப் பெண் தர மறுக்கும் மறக்குடி பற்றிப் பேசும் மகட்பாற் காஞ்சி 
 10. தன் முலையையும் முகத்தையும் கணவனோடு வைத்துக்கொண்டு அவனோடு தானும் இறந்துபோன தொகை நிலை  
இவை பத்தும் காஞ்சி

 1. புகழோடு மாய்ந்த மகனைச் சுற்றி வளைத்துக்கொண்டு அவனது சுற்றத்தார் அழும் பூசல் மயக்கம்
 2. தனக்கு நேர்ந்ததை எண்ணித் தாமே துன்புறுதல் - பையுள்
 3. கணவனோடு மாய்ந்த மனைவியை மற்றவர்கள் போற்றும் மூதானந்தம் 
 4. காட்டு வழியில் கணவனை இழந்த மனைவி புலம்பும் முதுபாலை
 5. இறந்தவருக்காக இறக்காமல் இருப்பவர்கள் அழும் கையறுநிலை 
 6. காதலியை இழந்து கணவன் வருந்தும் தபுதார நிலை 
 7. காதலனை இழந்து மனைவி வருந்தும் தாபத நிலை 
 8. கணவன் உடல் எரியும் ஈமத் தீயில் மனைவி தன்னை இட்டு எரித்துக்கொள்ளும் பாலை நிலை 
 9. தாயை இழந்த மகன் வருந்தும் தலைப்பெயல் நிலை 
 10. பலரும் மாண்டு போக, நான் சாகாமல் இருக்கிறேனே - என்று முதியோர் சுடுகாட்டை வாழ்த்தும் காடு வாழ்த்து

இவை காஞ்சித் திணையின் மற்றொரு பத்து

Stand-less part of life (Kanji) can be found in 10 + 10 stages.

 1. the greatness of death 
 2. the old age that shows the young age will fall 
 3. dying of a man himself cutting his wound himself 
 4. the relatives and Ghost guarding the wound of man made in war 
 5. praising deed of a man when he died 
 6. one who praises himself on future bravery 
 7. the wife guards her husband's wound without Ghost touching 
 8. the wife dies hurting herself with the spear that killed her husband 
 9. a bravery family refuses a girl wedding  a king 
 10. the wife dies along with her husband who died in war hugging her breast and face on him
This is one-ten


 1. Melancholy song  of relatives when a man dies 
 2. sadness on one's own life-pain 
 3. praising a girl who dies along with her husband  
 4. a  girl's cry when she lost her husband on the way in forest 
 5. the dying men cries for a died person 
 6. crying of a husband for the  loss of his wife 
 7. wife's cry on loss  of her husband 
 8. a wife dies along with her husband falling in the fire that burns her husband's body 
 9. a son crying on his mother's death. 
 10. praising the field of crematorium 
This is another ten stand-less life
 1. மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும், 
 2. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும், 
 3. பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப் புண் கிழித்து முடியும் மறத்தினானும், 
 4. ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும், 
 5. "இன்னன்!" என்று இரங்கிய மன்னையானும் 
 6. "இன்னது பிழைப்பின் இது ஆகியர்!" எனத் துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும், 
 7. இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்- துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும், 
 8. நீத்த கணவன்-தீர்த்த வேலின் பேஎத்த மனைவி அஞ்சியானும், 
 9. நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும், 
 10. முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ, 
ஈர்-ஐந்து ஆகும்' என்ப,
 1. பேர் இசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல்-மயக்கத்தானும், 
 2. தாமே எய்திய தாங்க அரும் பையுளும், 
 3. கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும், 
 4. நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனி மகள் புலம்பிய முதுபாலையும், 
 5. கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும், 
 6. காதலி இழந்த தபுதார நிலையும், 
 7. காதலன் இழந்த தாபத நிலையும், 
 8. நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச் சொல் இடையிட்ட பாலை நிலையும், 
 9. மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும், 
 10. மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப் பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு, 
நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே

   
77.
மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்,
கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்,
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்
புண் கிழித்து முடியும் மறத்தினானும்,
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்,
"இன்னன்!" என்று இரங்கிய மன்னையானும்
"இன்னது பிழைப்பின் இது ஆகியர்!" எனத்
துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்,
இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்-
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்,
நீத்த கணவன்-தீர்த்த வேலின்
பேஎத்த மனைவி அஞ்சியானும்,
நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்,
முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ,
ஈர்-ஐந்து ஆகும்' என்ப, பேர் இசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல்-மயக்கத்தானும்,
தாமே எய்திய தாங்க அரும் பையுளும்,
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதானந்தமும்,
நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனி மகள் புலம்பிய முதுபாலையும்,
கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்,
காதலி இழந்த தபுதார நிலையும்,
காதலன் இழந்த தாபத நிலையும்,
நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்
சொல் இடையிட்ட பாலை நிலையும்,
மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்,
மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்
பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு,
நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 76 Tolkaappiyam Public Affairs 76

காஞ்சி - பெருந்திணை

காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அத்திணையின் புறப்பகுதி ஆகும்.
உலக வாழ்வின் நிலையற்ற தன்மையைக் கூறுவது காஞ்சித் திணை.

Matter of stand-less life is called Kanchi in life-style.
It is the outer part of personal life "love-affairs". 
   
76.
காஞ்சிதானே பெருந்திணைப் புறனே;
பாங்கு அருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

தொல்காப்பியம் புறத்திணையியல் 75 Tolkaappiyam Public Affairs 75

எண்பேராயம் - ஏரோர் களவழி - தேரோர் களவழி - அவிப்பலி - காமம் நீத்த பால் - கண்ணுமை

வாகைத் திணை
 1. கூதிர்ப் பாசறை
 2. வேனில் பாசறை 
 3. ஏரோர் களவழி 
 4. தேரோர் களவழி 
 5. முன்தேர்க் குரவை
 6. பின்தேர்க் குரவை
 7. வல்லாண் பக்கம் 
 8. அவிப்பலி
 9. பகைவரைத் தழுவிக்கொள்ளல் 
 10. பகட்டின் உழவர், ஆவின் ஆயர் சிறப்பினைச் சொல்லும் பகுதி 
 11. இல்லறம் துறந்த பகுதி 
 12. எண்பேராயம் 
 13. ஒழுக்கக் கட்டுப்பாடு 
 14. கொடைச் சிறப்பு 
 15. பிழை பொறுத்தல் 
 16. பொருளீட்டல் 
 17. அருள் வழங்கல் 
 18. காமம் நீத்தல் 
என்று 18 துறைகளைக் கொண்டது வாகைத்திணை.

Victory part of the life is appears in 18 stages.

 1. winter war-camp 
 2. summer war-camp
 3. farmers victory 
 4. victory of war-carts 
 5. dance before the chariot of the victorious king 
 6. dance behind the chariot of the victorious king 
 7. bravery
 8. sacrifice 
 9. friendship with opponent 
 10. victory in farming and cows-keeping 
 11. leaving from house-hold life 
 12. eight-fold administrates of the king 
 13. strict in virtues 
 14. gift 
 15. endurance of others harms 
 16. earning wealth 
 17. grace 
 18. lust-less 


 1. கூதிர், 
 2. வேனில், என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்; 
 3. ஏரோர் களவழி அன்றி, 
 4. களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்; 
 5. தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்; 
 6. ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்; 
 7. பெரும் பகை தாங்கும் வேலினானும், அரும் பகை தாங்கும் ஆற்றலானும், புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்; 
 8. ஒல்லார் நாண, பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து, தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்; 
 9. ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்; 
 10. பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்; 
 11. கடி மனை நீத்த பாலின்கண்ணும்; 
 12. எட்டு வகை நுதலிய அவையகத்தானும்; 
 13. கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்; 
 14. இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்; 
 15. பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்; 
 16. பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்; 
 17. அருளொடு புணர்ந்த அகற்சியானும்;
 18. காமம் நீத்த பாலினானும்;-
என்று இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே
   
75.

கூதிர், வேனில், என்று இரு பாசறைக்
காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்;
ஏரோர் களவழி அன்றி, களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்; தேரோர்
வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்;
ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்;
பெரும் பகை தாங்கும் வேலினானும்,
அரும் பகை தாங்கும் ஆற்றலானும்,
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்;
ஒல்லார் நாண, பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து,
தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்;
ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்;
பகட்டினானும் ஆவினானும்
துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்;
கடி மனை நீத்த பாலின்கண்ணும்;
எட்டு வகை நுதலிய அவையகத்தானும்;
கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்;
இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்;
பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்;
பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்;
அருளொடு புணர்ந்த அகற்சியானும்;
காமம் நீத்த பாலினானும்;-என்று
இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே

தொல்காப்பியம் பொருள்-அதிகாரம் புறத்திணை-இயல்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி