Saturday, 29 July 2017

பழமொழி 383 PalaMoli 383

பாம்பைக் குட்டி என்று இகழ்வார் இல்லை
 
383.

சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்து எள்ளார் நிலைநோக்கி - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
இளைதென்று பாம்பிகழ்வார் இல்.
 
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும், நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி சீர்த்த கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும், இளைது என்று பாம்பு இகழ்வார் இல்.

மேன்மை மிக்க மன்னர் தன் சிறப்புகள் அனைத்தையும் இழந்து கெட்டாலும், அவனுக்கு எதிரில் நின்று எள்ளி நகையாடி எதுவும் சொல்ல மாட்டார்கள். காரணம் அவன் பெருமை-நிலை அப்படி. குட்டிப் பாம்பு தன் தாய்ப் பாம்பை விட்டுவிட்டுத் தனியே இருந்தாலும் அதனை இளையதுதானே என்று யாரும் இகழமாட்டார். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி