Friday, 28 July 2017

பழமொழி 372 PalaMoli 372

கடலொடு காட்டு ஒட்டல் இல்
கடலோடு துரும்பு ஒட்டாது
 
372.

மடங்கப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புள்கலாம் மால்கடல் சேர்ப்ப
கடலொடு காட்டொட்டல் இல்.
 
மடங்கப் பசிப்பினும், மாண்புடையாளர், தொடங்கிப் பிறர் உடைமை மேவார்; குடம்பை மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப! கடலொடு காட்டு ஒட்டல் இல்.

தாழை மரத்தில் இருக்கும் கூட்டில் பறவைகள் சண்டையிட்டுகொள்ளும் இருண்ட கடல் சூழ்ந்த  சேர்ப்பு நிலத்தின் வேந்தனே!
கடலில் துரும்பு ஒட்டாது. 
அதுபோல,
உடல் முழுவதும் செயலற்று மடங்குமாறு பசித்தாலும் மாண்பு உடையவர் பிறர் உடைமைகளை விரும்ப மாட்டார்கள். எண்ணவும் தொடங்க மாட்டார்கள். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி