Thursday, 27 July 2017

பழமொழி 342 PalaMoli 342

யானை
அதன் வால்
யானை போன வாயிலில் அதன் வால் போகவில்லையாம்
 
342.

சிறந்ததம் சுற்றமும் செய்பொருளும் நீக்கித்
துறந்தார் தொடர்ப்பாடு கோடல் - கறங்கருவி
ஏனல்வாய் வீழும் மலைநாட அஃதன்றோ
யானைபோய் வால்போகா வாறு.
 
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி, துறந்தார் தொடர்ப்பாடு கோடல், கறங்கு அருவி ஏனல்வாய் வீழும் மலை நாட! அஃது அன்றோ, யானை போய், வால் போகாவாறு.

ஒலிக்கும் அருவி விளைந்திருக்கும் தினை-வயல் பக்கத்தில் விழும் மலைநாட்டு வேந்தனே
ஒருவர் தன் மிகச் சிறந்த சுற்றத்தாரையும், தான் சேர்த்து வைத்திருந்த பெரும் பொருளையும் துறந்துவிட்டுத் தவம் செய்கிறாராம். 
ஆனால் அவருக்கு அவர்களையும், அவரது பொருளையும் பற்றிய நினைவுதானாம். 
இதுதான் யானை நுழைந்த வாயிலில் அதன் வால் நுழையவில்லை என்பது போன்றது. 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி