Monday, 31 July 2017

திணைமாலை 88 Tinaimalai 88

அல்லாத என்னையும் தீரமற் றையன்மார்
பொல்லாத்தார் என்பது நீபொருந்தா - எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்
புல்லி ஒழிவன் புலந்து.

என் போக்கில் விடாத என் தாயும், 
தீர்க்கமாக என் தந்தை, அண்ணன் ஆகிய ஐயன்மாரும், 
பொல்லாதார் என்று நீ கூறுவது பொருந்தாது. 
எல்லாருக்கும் ‘வல்லி’ நான். 
நான் ஒழிந்துபோனால் என்ன? 
வகைமையாக நீண்டு வாள் போல் தோன்றும் கண்ணை உடையவளே!
அவர்களிடம் புலவி வெறுப்போடு செல்கிறேன். 
என்றாலும் அவர்களைத்  தழுவிவிட்டுதான் செல்வேன். 

தலைவனுடன் செல்லும் தலைவி தன் தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 87 Tinaimalai 87

ஒன்றானும் நாமொழியல் ஆமோ செலவுதான்
பிறாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்கரிதாச் சேய சுரம்.

உடன்போக்குக்கு ஒப்புதல் அளித்துவிட்டு வந்த தோழிக்குத் தலைவி சொல்கிறாள்.

விதியில் ஒன்றையேனும் நாம் ஒதுக்கித் தள்ள முடியுமா? 
சொன்ன சொல் தவறாமல் பேணும் புகழ் நிறைந்தவன் பின்னே செல்வதும் அப்படித்தான். 
அவன் வெல்வதற்கு அரியவன். 
வில் வலிமை உள்ளவன். 
வேல் தாங்கி நிற்கும் காளை. 
அவன் பாங்கில்தானே செல்கிறேன். 
அது எப்படிச் செல்வதற்கு அரிய சுரம் ஆகும்?

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 86 Tinaimalai 86

ஒவ்வார் உளரேல் உரையாய் ஒளியாது
செல்வாரென் றாய்நீ சிறந்தாயே - செல்லா(து)
அசைந்தொழிந்த யானை பசியாலாட் பார்த்து
மிசைத்தொழியும் அத்தம் விரைந்து.

பிரிய விரும்பாதவர் என்றால் எனக்குச் சொல். 
மறைக்காமல் சொல். 
அவர் செல்ல விரும்புகிறார் என்று சிறப்பாகச் சொல்கிறாயே. 
நடக்க முடியாமல் அசைந்து சென்று விழுந்த யானையை அங்குள்ள ஆட்கள் உணவாக்கிக்கொள்ளும் வழியில் அல்லவா விரைந்து செல்கிறார். 

தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 85 Tinaimalai 85

பொருள்பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி
அருள்பொருள் ஆகாமை ஆக - அருளான்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணரல் இசை.

பொருள் பொருள் என்று சொல்லி அதனை ஈட்டிக்கொள்ளுமாறு எல்லாரும் சொல்வதைப் பொன்னே போல் போற்றிக்கொண்டு அவர் பொருஉளீட்டச் சென்றுள்ளார். 
அவருக்கு அருள் என்று ஒரு பொருள், பொருளாகத் தெரியவில்லை. 
அதனால், 
எனக்கு அருள் புரியவில்லை. 
வளமையாகிய பொருளைக் கொண்டுவரும் வகையில் சென்றுள்ளார். 
இளமை பயன்படுத்தப்படாமல் கழிந்துகொண்டிருக்கிறதே, அதனை அவரால் மீட்டுக் கொண்டுவந்து தர முடியுமா? 

தலைவி தன் ஆற்றாமையைத் தோழியுடன் பகிர்ந்துகொள்கிறாள்.  

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 84 Tinaimalai 84

கள்ளிக் காடு
கள்ளியம் காடு
கள்ளியங்காடு
கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத்
தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும்
பொருளில ராயினும் பொங்கெனப் போந்தெய்யும்
மருளின் மறவர் அதர்.

கள்ளி படர்ந்திருக்கும் காடு. 
அங்குக் ‘கடமா’ மருண்டு ஓடும். 
அதனைப் பொருட்படுத்தாமல் என்னைத் தள்ளி வைத்துவிட்டு அவர் செல்கிறாரா? 
அங்குள்ள மறவர் தம்முடையவர் பிடுங்கிக்கொள்ளும் பொருள்   யாதொன்றும் இல்லை ஆயினும் ‘பொக்’ எனப் புகுந்து அம்பு எய்து தாக்குவர். 
அத்தகைய வழியில் செல்கிறாரா? 

தலைவன் பிரிவதை எண்ணி வருந்தும் தலைவி தோழியிடம் கூறுகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 83 Tinaimalai 83

செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்செரியும்
வெல்பவோ சென்றார் வினைமுடிய  - நல்லாய்
இதடி கரையும்கல் மாபோலத் தோன்றி
சிதடி கரையும் திரிந்து.

செல்கிறாரா 
நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை 
நினைத்தால் நெஞ்சே  பற்றி எரிகிறது. 
வெற்றி கொள்ளவா சென்றார் 
எடுத்துக்கொண்ட  செயல் நிறைவேறச் சென்றுள்ளார் 
நல்லவளே 
பெண் காட்டெருமைகள் ஆண் எருமையை அழைத்துக் கதறும் 
மலையில் இருக்கும் கல்லை ஆண் எருமை என மயங்கிக் கதறும். 
சில்லு-வண்டுகளும் அங்கு ஆணும் பெண்ணும் அழைக்கும் ஒலி எழுப்பும். 

பிரிவை எண்ணிக் கலங்கும் தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 82 Tinaimalai 82

தலைவியும் தோழியும்
ஆண்கடன் ஆமாற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றி புரிந்தமையால் - பூண்கடனாப்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி நீசிறிது
 நைபொருட்கண் செல்லாமை நன்று.

உலகியல் கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். 

ஆண்மகனின் கடமை என்பது என்ன என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது 
ஆடவர் தாம் பூண்டிருக்கும் கடமையையே போற்றிச் செய்ய வேண்டும். 
அதனைச் செய்யவே அவரும் பொருள் செய்யச் செல்ல உள்ளார். 
சிலவாகிய ஆசை மொழிகளைப் பேசுபவளே 
நீ சற்றே நொந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 81 Tinaimalai 81

கொன்றாய் குருந்தே கொடிமுல்லாய் வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்(கு)
என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாள் என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாள்
மின்னிமிர்த்த பூண்மிளிர விட்டு.
அவளா இவள்

குறியிடத்தில் காதலியைக் காணாத காதலன் அங்குள்ள பூக்களைப் பார்த்துப் பிதற்றுகிறான். 

பூத்திருக்கும் குருந்தே 
முல்லைக் கொடியே 
என்னைக் கொன்றுவிட்டீர்கள். 
நான் தனிநே இங்கே நின்றேன். 
தெரிந்துகொண்டேன். 
என் ‘நெடுங்கண்ணாள்’ வந்து சென்றாளா? 
வந்து சென்றவளுக்கு என்ன சொன்னீர்கள்?
அவள் உங்களிடம் என்ன சொன்னாள்?
அவள் சொன்னதற்கு என்ன கூறினீர்கள்?
அவள் மீண்டும் என்ன சொன்னாள்? 
அவள் மின்னல் நிமிர்ந்தது போல அணிகலன் பூண்டு ஒளி வீசியிருப்பாளே. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 80 Tinaimalai 80

ஒரு கால் தேர்ச் செல்வன்
உருவவேல் கண்ணாய் ஒருகால்தேர்ச் செல்வன்
வெருவிவீந் துக்கநீள் அத்தம் - வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஓடும் இடம்.

அச்சம் தருவது வேல். 
அந்த வேல் போன்ற கண்ணை உடையவளே 
ஒற்றைச் சக்கரத் தேரில் ஊர்ந்து செல்பவன் கதிரவன். 
அவன் சினம் கொண்டு வெயிலைக் கொண்டும் நீண்ட காடு. 
வருவார் என்று நீ சொல்லலிக்கொண்டிருப்பவர் சிறந்த பொருளை ஈட்டிக்கொண்டு வருவதற்காக அந்தக் காட்டில் அல்லவா வெகு தூரம் சென்றிருக்கிறார். 
அவர் வருவார் என்பதன் அறிகுறியாக என் இடக்கண் துடிக்கிறது. 

இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள். 

பெண்களுக்கு இடக்கண் துடிப்பது நல்லது நடக்கப்போவதன் அறிகுறியாக நம்பப்பட்டது. 

கானல் வரி பாட்டுக்குப் பின்னர் கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வருகிறான். 
அப்போது 

"கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன"

என்று இளங்கோவடிகள் குறிப்பிவதும் இதே நம்பிக்கையை வெளிப்படுத்துவத்தாக உள்ளது. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 79 Tinaimalai 79

செறிதொடி
செறிந்த வளையல் அணிந்தவள் 
சென்றார் வருதல் செறிதொடி சேய்த்தன்றோ
நின்றார்சொல் தேறாதாய் நீடின்றி - வென்றார்
எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும்
கடுத்த மலைநாடு காண்.

அவர் சென்ற நாடு மிகத் தொலைவில் அல்லவா இருக்கிறது. 
செறிந்த வளையல் அணிந்தவளே 
அங்குச் சென்றவர் திரும்பி வரக் காலமாகும் அல்லவா? 
சொல் தவறாமல் நிற்கக் கூடியவர் " வந்துவிடுவேன்" என்று கூறிய சொல்லை நம்பு. 
காலம் தாழ்த்தாமல் வந்துவிடுவார். 
வெற்றி பெற்றவர் தூக்கிப் பிடிக்கும் கொடி போல அருவி விளங்குத் தோன்றும் கடுமையான மலைநாடுகாண் அது. 

இவ்வாறு சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.  

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 78 Tinaimalai 78

விழுந்து கிடக்கும் யானை
ஒருகை இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனைநிற் காணா(து) - அருகல்
வழிவிலங்கி வீழும் வரையத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்.

ஒரு கை, இரண்டு கொம்புகளுடன் மூன்று மதம் (காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று உணர்வுகளால் மூன்று மதநீர்) பொழியும் யானை பருகுவதற்குச் சுனையில் நீரைக் காணாமல் அருகாமை அல்லாத வழியில் விலகிச் சென்று விழும்படியான மலைப்பாதையில் அவர் சென்றுள்ளார்.  அழிவு ஏதும் இல்லாதவராக அவர் இருக்க வேண்டும். 

தலைவன் பிரிவைத் தலைவி ஆற்ற மாட்டாள் எனக் கவலை கொண்ட தோழியிடம் தலைவி இவ்வாறு கூறுகிறாள்.  

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 77 Tinaimalai 77

மகரக் குழை மறித்த நோக்கு - பாடல்
தொங்கட்டான் மறித்த பார்வை - படம்
வந்தாற்றாள் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால்
வெந்தாற்போன்று தோன்றும் வேயத்தம் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை ஏந்தி
மகரக் குழைமறித்த நோக்கு.

அவள் என் கண் முன் வந்து தன் தாங்க முடியாத ஆற்றாமையைக் காட்டிகொண்டு நிற்கிறாள். நெஞ்சே! நாம் அவளிடம் செல்லலாமா? 
பொருள் தேட அல்லவா போந்க்கொண்டிருக்கிறோம். 
நீண்ட வெயில் கதிர்களால் மூங்கிலே வெந்தாற் போன்று தோன்றும் காட்டு வழி ஆயிற்றே. 
தலையில் அணிந்திருக்கும் அவள் தார் மாலை அவளது தகரம் மணக்கும் கூந்தலில் தாழ்ந்து தொங்குகிறது. 
தன் முந்தானையைக் கையில் ஏந்திக்கொண்டு நிற்கிறாள். 
அவள் கடைக்கண்ணால் பார்க்கிறாள். 
அவள் பார்வையை அவள் காதில் அணிந்திருக்கும் மகரக் குழை வழி மறிக்கிறது. 

பொருள் தேடச் செல்லும் தலைவன் இடை வழியில் தன் காதலி வருவது போல நினைத்துக்கொண்டு தன் நெஞ்சோடு பேசுகிறான்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 76 Tinaimalai 76

புடை நெடுங் கண்
காதுறப் போழ்ந்து
அகன்று நீண்ட
படை நெடுங் கண்
நெஞ்சம் நினைப்பினும் நெல்பொரியும் நீள்அத்தம்
அஞ்சல் என-ஆற்றின் நெஞ்சிற்றால் - அஞ்சிப்
புடைநெடுங்கண் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண்  கொண்ட பனி

வெயிலில் மூங்கில் நெல்லே பொரியும் நீண்ட காட்டு வழி. 
நெஞ்சம் இதனை நினைக்கும்போதே வெந்துபோகிறது. 
அஞ்சாதே என்று என் நெஞ்சிற்குச் சொல்லிப் பார்க்கிறேன். 
அது கேட்காமல் இற்றுப் போகிறது. 
காரணம் அச்சத்துடன் அவள் கண்ணிலிருந்து பனிநீர் பொழிகிறது. 
இரு பக்கமும் நீண்டு காதுவரை ஓடிய கண்கள் அவை. 

இவ்வாறு தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லிக்கொண்டு பொருள் தேடச் செல்லாமல் இருந்துவிடுகிறான். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 75 Tinaimalai 75

மாசுணம்
மலைப்பாம்பு
எரிந்து சுடுமிரவி ஈடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெஃகாப் - புரிந்து
விடுகயிற்றில் மாசுணம் வீயும்நீள் அத்தம்
அடுதிறலான் பின்சென்ற வாறு.

காதலனுடன் மகளைப் போக விட்ட தாய் புலம்பிக் கூறுகிறாள். 

கதிரவன் எரிந்து வீசும் வெயில் வெம்மை தாங்காமல் சுருண்டுகிடக்கும் முறுக்குக் கயிறு போல மலைப்பாம்பு விழுந்து கிடக்கும் வழியில் 
காய்ந்து விரிந்து கிடக்கும் கூந்துடன் 
என் மகள் 
பகையை அழித்தொழிக்கும் திறமை கொண்ட காதலனுடன் சென்றுவிட்டாளே. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 74 Tinaimalai 74

புன்புறவே சேவலோ டூடல் பொருளன்றால்
அன்புற வேயுடையார் ஆயினும் - வன்புற்(று)
இதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்(து)
இதுகாண்என் வண்ணம் இனி.

சிறிய பெண்-புறாவே 
நீ உன் சேவலோடு ஊடுவது பொருளற்ற செயல். 
என் காதலர் என் மீது அன்புடையவர் ஆயினும் என்னை வற்புறுத்தி இங்கேயே விட்டுவிட்டு அகன்று சென்றுவிட்டார். 
இதோ பார். 
அவர் வரும் வழியை நோக்கி என் மேனி பொன்னிறப் பசலை பூத்துக் கிடக்கிறது. 

காமத்தால் மயங்கித் தலைவி புறாவிடம் சொல்லிப் புலம்புகிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

தஞ்சை பெரியகோவில் ஓவியங்கள் Drawings in Tanjavur big temple

தஞ்சை பெரியகோவில் ஓவியங்கள் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கலைத்திறனை எடுத்துக் காட்டுகின்றன. 
சிதையா வண்ணப் பூச்சும் வியக்க வைக்கிறது

How the underlying Chola   murals again saw the light of the day after incarceration of about four hundred years, is an interesting story. It is said that, during the year 1930, while late Professor S.K. Govindasamy of Annamalai University was inspecting the walls of the six-foot wide dim lit  ambulatory (pradakshina patha) around the sanctum of the Brihadisvara, he noticed that the painted surfaces on the walls on either side of the ambulatory had,  at places, crumbled exposing some exquisite ancient paintings. He examined it further; and was thrilled when he discovered that the paintings hidden underneath the Nayak paintings were the thousand-year-old murals of the time of Rajaraja Chola. Professor S.K. Govindasamy published his findings in the Journal of the Annamalai University, Vol. II, 1933. Thereafter, attempts were made to bring to light the Chola murals; and at the same time to preserve the paintings of the Nayak period.

The Department of Archaeology has done a remarkable conservation of scientifically cleaning the exposed portions revealing the excellence of the Chola paintings and at the same time retaining intact the upper layer on which the Nayak paintings are drawn. It is said that during the 1980s, the chemical branch of the ASI came out with a unique `destucco’ process to remove the upper layer of Nayak paintings and display the same on fibreglass boards. For a report on that, please check:

The panel on the west wall depicts the episodes in the life of Saint Sundaramurti Nayanar. In this panel the scenes of Sundara’s wedding are depicted in detail. These include scenes of Lord Shiva appearing in the guise of an old man clutching a document proving his claim over the bridegroom Sundara, an angry Sundara in a white coat , examination of the document by the villagers assembled there, and Sundara appealing to the mercy of Shiva etc.

The panel on the west wall depicts the episodes in the life of Saint Sundaramurti Nayanar. In this panel the scenes of Sundara’s wedding are depicted in detail. These include scenes of Lord Shiva appearing in the guise of an old man clutching a document proving his claim over the bridegroom Sundara, an angry Sundara in a white coat , examination of the document by the villagers assembled there, and Sundara appealing to the mercy of Shiva etc.

The scene of Indra (the king of gods)   worshiping the Linga is on the opposite wall.

The next panel in northwest corner is the scene of four disciples who are now \ identified as disciples (Kuravars: Sanka, Sananda, Sanathana, and Sanathkumara) of Sri Dakshinamurthy. Two figures among them were earlier assumed to be that of Rajaraja standing behind his Guru, Karuvurdevar, portraying a sense of humility. Now, the scholars seem to doubt that plausible explanation.

Tripuranthaka theme of Shiva raiding a chariot like a warrior, going into a war fully armed and wielding a bow, followed by an army of his supporters was a favourite of the Cholas. The Brihadisvara too has a panel dedicated to Tripurantaka. It must have once been a magnificent and awe inspiring painting, bringing to life the power, glory and the grandeur of the imperial Cholas and their Lord. It is said that Shiva in the mural had a twin expression: the ferociousness in the eye and the sweet smile on the lips. The daemons too have been depicted in detail. The panel, sadly, has not survived in its entirety.

The themes depicted in the panels so far exposed (1,200 sq ft) are : Shiva as Dakshinamurthy; the story of Sundarar; Rajaraja and his three queens worshipping Nataraja at Chidambaram; Tripurantaka; the marriage of Shiva and Parvathi; Rajaraja worshipping the Linga to be enshrined in the temple; and Ravana at Kailasa mountain.
Sadly, none of these is panels is complete. The figures too are not very clear; and it is difficult to make out the details. But for the efforts of ASI these ancient wall-paintings would have been totally lost.

There is a picture of Ravana at Kailasa the snow-abode of Shiva; labouring hard to destabilize mountain peak.

 According to Prof. C. Sivaramamurthy, “If expression has to be taken as the criterion, by which a great art has to be judged, it is here in abundance in these Chola paintings. The sentiment of heroism – vira rasa– is clearly seen in Tripurantaka’s face and form; the figures and attitude of the Rakshasas (demons) … wailing tear-stained faces of their women… suggest an emotion of pity – karuna– and terror – raudra; Siva as Dakshinamurthy… is the mirror of peace – shanta; the hands… of the dancer suggests the spirit of wonder – adbhuta… the ganas (Shiva’s followers) in comic attitude represent hasya. The commingling of emotions is complete in this which is a jumble ofviraraudraand karuna” (Paintings of South India).


There are also the graceful pictures of the Apsaras.

There are also the graceful pictures of the Apsaras.

The demon with his consort on the Tripurantaka panel

Prof. C. Sivaramamurthy , a scholar and art historian of great distinction, described the Chola frescoes of the Thanjavur Big Temple as a masterpiece of Chola art, distinguished by power, grandeur, rhythm and composition, and unparalleled by any other contemporary painting. What is significant about the Chola paintings of Thanjavur is that there is great emotion in all the faces, whether it is the compassion of the guru counselling Rajaraja, or a contemplative rishi, a devout queen, an animated dancer or an angry Shiva.

Those who have examined the Chola paintings closely have observed that even while depicting a sombre theme of devotion, the artist does not neglect the mundane aspects. The bedecked royal ladies continue to chatter among themselves, in spite of their being in a holy place. In contrast, the common ladies and elders seem absorbed in the performance.

The Chola artists of the Brihadisvara murals were the inheritors of the hoary tradition of Chitrasutra. They preserved and practiced the concepts and the techniques of the Chitrasutra. The delineation of lines, use of colours and shades, arrangement of the figures on the canvass and treatment of the subject strongly resemble the murals of Ajanta. Its figures are alive with rhythm and movement.

The saints, kings and queens are celebrated in their idealized forms; the emphasis was on the ideal person behind the human lineaments rather than on their physical likeness. They figures of humans, animals, birds and vegetation always seem to suggest to something beyond the obvious. Its gods and goddesses too are full of virtue, vitality and grace; and have a universal appeal. They not merely stimulate the senses but also ignite the imagination of the viewer and set the viewer free from the confines of place, time and ego (self).The Chola murals of Brihadisvara have that magical quality, which brings out the essence of life and the grace that permeate the whole of existence.

The Dakshinamurthi panel is rather huge and occupies almost the entire  space  on the southern wall. It is often cited as an example for lucidity and display of imagination in Chola paintings. It depicts Shiva as Dakshinamurthi under a banyan tree.
However, the figure of Dakshinamurthy is barely visible. The panel is very rich in details; it is populated with sages, Bhirava as dog, playful monkeys and birds such as peacocks, swans and owls.
There is a stillness of body and reverence on the face of the sages worshipping Dakshinamurthi, in contrast to the vivacious animals. Flying apsaras and gandharvas (celestial beings)complete the scene .But as a cobra enters the picture; there is a sudden change in the scenery. A monkey rushes away while another stares at the new entrant. Another, on a faraway branch, is not yet aware of the danger. A few sensitive swans flutter their wings in fear. The owls do not react as the whole thing happens in daylight. A peacock bends his long neck to watch. A squirrel, unmindful of all this, happily bites into a nut. Below the tree is a herd of elephants; one ferociously breaks a branch and another runs uphill with its trunk coiled around the branch. Another one calmly enjoys the peaceful surroundings.
The other panels are fragmentary but they, too, contain some marvellously drawn figures, bearing testimony to the skilful brushwork of the Chola artists.


நன்றி - நூ த லோகசுந்தரம்  மின்னஞ்சல்

திணைமாலை 73 Tinaimalai 73

செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ்வாய்அம்
தார்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும்
ஓர்ந்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து

சிவந்த வாய், கருமை நிறக் கண்கள், இவற்றின் சிறப்பால் எதையும் கேளாமல் ஊரார் அலர் தூற்றுவதை எண்ணி முன்பு உன்னுடன் வர ஒப்புக்கொண்டாள். 
இப்போது அவள் வாய் கிளி போல் குளறுகிறது. 
நீரில் பூத்திருக்கும்  நீல  மலர் போன்ற கண்கள் கலங்குவதை நினைக்கிறாள். 
(மணம் முடித்துத் தர ஒப்புதல் கிடைத்துவிட்டது)

முன்பு உடன்போக்குக்கு உடன்பட்ட தலைவி பின்னர் தாயின் ஒப்புதலினால் மனம் மாறினாள் என்று தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 72 Tinaimalai 72

முகம்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம்
இகந்தார் விரல்காந்தள் என்(று)என்(று) - உகந்தியைந்த
மாழைமா வண்டிற்கா நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது.

முகம் தாமரை 
வாயின் புன்முறுவல் ஆம்பல் மலர் 
கண் நீல மலர் 
விரிந்திருக்கும் விரல் காந்தள் 
என்று  அந்த மலர்களை விரும்பி 
பொன்வண்டு வந்து மொய்க்கும் காட்டு நிழலில் 
அந்தத் தகைமை உடைய பெண் (ஏழை) இனிதாகச் செல்வதை நாங்கள் பார்த்தோம். வருந்தவேண்டாம். 

உடன்போகும் காதலரைக் கண்டவர் தேடி வரும் செவிலிக்குச் சொல்கின்றனர்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 71 Tinaimalai 71

அஞ்சுடர்நீள் வாள்முகத் தாயிழையும் மாறிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி
ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனவென் றார்.

அழகிய சுடரை வீசும் நிலா போன்ற ஒளிமுகம் கொண்ட ஆயிழை அவள். 
தனக்கு நிகர் இல்லாத வெம்மையான சுடர் வீசும் கதிரவன் போன்ற வேல் தாங்கியவன் அவன். 
அவர்கள் இருவரும் வருவது கண்டு அஞ்சி 
ஞாயிறும் திங்களுமாகிய இரு சுடர்களும் அவர்களின் ஆணைக்கு உட்பட்டு நடப்பன போல மேற்கிலும் கிழக்கிலும் தோன்றின 
என்று சிலர் கூறினராம். 

உடன்போக்கு மேற்கொண்டிருந்த காதலன் காதலியை 
அந்தி வேளையில் பார்த்தோம் 
என்று சிலர் கூறியதாக 
வழியில் செல்வோர் 
மகளைத் தேடிச் செல்லும் செவிலியிடம் கூறினர். 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 70 Tinaimalai 70

கோங்கம் பூ
நின்னோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண்
பொன்னோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன்னோக்கம்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்
வண்டல் அயர்மணல்மேல் வந்து.

உன்னைப் போலவே மருண்டு பார்க்கும் அந்த மானைக் குரவ மரத்து நிழலில் பார். 
பொன் நிறத்தில் மலர்ந்திருக்கும் கோங்கம் பூக்களைப் பார். 
பொன்னின் நிறம் கொண்ட சுணங்கு படர்ந்திருக்கும் முலையினைக் கொண்ட கொம்பு போன்றவளே 
இந்த மணலில் வண்டல் விளையாடலாமே. 

உடன் கொக்கின்போது தன்னுடன் வரும் காதலிக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு காதலன் அழைத்துச் செல்கிறான்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 69 Tinaimalai 69

அத்தம் நெடிய அழல்கதிரோன் செம்பாக
மத்தமறைத் தானிவ் அணியிழையோ(டு) - ஒத்த
தகையினால் எஞ்சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு.

நீங்கள் செல்லவேண்டிய வழியோ மிக நீண்டதாக இருக்கிறது. 
எரியும் தீ போன்ற கதிர்களை வீசிக்கொண்டு கதிரவன் செம்பு நிறத்தில் மலையில் மறைகிறான். 
மனம் ஒத்த தகைமையோடு நீங்கள் எங்களுடைய சிற்றூரில் தங்கி இருந்துவிட்டு நாளை உங்கள் விருப்பம் போலச் செல்வது அழகாகும். 

உடன் செல்லும் காதலரைக் கண்டவர் சொல்கிறார்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 68 Tinaimalai 68

சென்றக்கால் செல்லும்வாய் என்னோ இருஞ்சுரத்து
நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்றல்
இழைக்கமர்ந்த  ஏயேர் இளமுலையாள் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு.

பொருள் தேடச் சென்றக்கால் என்ன ஆகும்? 
காட்டின் இடையிலே நின்றுகொண்டிருக்கும்போது அவளது பார்வைக் குறிப்பு நினைவுக்கு வருகிறதே. 
நீண்டு ஒளிவிடும் அவள் கண். 
பூண்டிருக்கும் அணிகலனை விரும்பும் அவளது உயர்ந்த அழகிய முலை. 
காதில் உள்ள குழையை விரும்பிப் பாயும் கடைக்கண் பார்வை. 
இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றனவே. 

பொருள் தேடச் செல்ல நினைக்கும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லிச் செல்லாமல் நின்றது.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 67 Tinaimalai 67

முருக்கம் பூ
வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார்
பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ -  ஒறுப்பபோல்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது.

பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொன்னது

"விளங்கும் அணிகலன் பூண்டவளே, அவர் ணெல்வம் தேடிக்கொண்டு வருவதற்காகச் சென்றுள்ளார். இப்போது தோன்ற மாட்டார். பொறுத்துக்கொள்" என்று நீ சொன்னால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லேயே. பொன்னில் பவளம் பதித்துத் தோன்றும் அணிகலன் போலக் கொத்தாக முருக்கம் பூ பூத்துக் கிடக்கிறது. அவர் வரும் பருவம் ஆயிற்றே. அவர் வரவில்லையே என்று எனக்குள் தோன்றும் துன்பம் பெரிதாக இருக்கிறதே.  

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

Sunday, 30 July 2017

திணைமாலை 66 Tinaimalai 66

முருக்கம் பூ
வல்வரும் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த்
திகழக்கான் றிட்டன தேர்ந்து.

பருவ வரவு காட்டித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

அவர் விரைந்து வரும் பருவம் வந்திருப்பதைப் பார். 
செல்வரின் சிறுவர்கள் பொன்னாலான தாலி அணிந்திருப்பர். 
அது செந்நிறப் பவளக் கொழுந்தின் மேல் பொன்னிறத்தில் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். 
பொற்கொல்லர் அதனைச் செய்து தரத் தீயில் இடுவது போல முருக்க மரம் பூத்திருக்கிறது. 
இது அவர் திரும்பி வரும் பருவம். 
மகிழ்ச்சியாக இரு. 

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 65 Tinaimalai 65

தான்றாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங்குரவே - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து.

குரவ மரமே, நீ உன் பூவாகிய பாவைக் குந்தையைப் பெற்றெடுத்துள்ளாய். 
அந்தப் பொம்மைக் குழந்தைக்குத் தாயாக இருப்பது போல் கோங்கம் பூக்கள் தளர்ந்து முலைப்பால் ஊட்டுகின்றன. 
நீங்களோ பெற்ற தாய் போல் எதுவும் பேசாமல் பூத்துக் கிடக்கிறீர்கள்.  
என் மகள் முள் போன்ற பற்களை உடையவள். 
அவள் சென்ற வழியையாவது காட்டுவாயாக. 

காதலனுடன் சென்ற மகளைத் தேடிக்கொண்டு செல்லும் செவிலி இவ்வாறு கோங்கம், குரவம் பூக்களிடம் பேசுகிறாள்.   

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 64 Tinaimalai 64

பொறி சிதறியது போல் புன்கம் பூ
பொறி
பேணாய் இதன்திறத் தென்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய் நாணின்மை - காணாய்
எரிசிதறி விட்டன்ன ஈர்முருக் கீடில்
பொறிசிதறி விட்டன புன்கு.

நாணத்துடன் வளையல் அணிந்திருப்பவளே 
இனி நாணம் இல்லாமல் இருப்பாயாக 
எரியும் நெருப்பு சிதறிக் கிடப்பது போல ஈரம் கொண்ட முருக்கம் பூ பூத்துக் கிடக்கிறது. 
நெல்லம் பொறி சிதறிக் கிடப்பது போல புன்கம் பூக்கள் சிதறிக் கிடக்கின்றன. 
இவற்றைப் பார். 
இதன் திறத்தைப் பேணி அவர் பிரிவுக் கவலையை விட்டுவிட்டு இரு. 
இதன் திறத்தைப் பேணாமல் இருக்காதே. 

தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

திணைமாலை 63 Tinaimalai 63

எரிநிறநீள் பிண்டி இணரினம் எல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர்முலையாய் பூந்தொடித்தோள்
என்னணிந்த ஈடில் பசப்பு.

எரியும் தீ நிறத்தில் பூத்திருக்கும் அசோகம் பூங்கொத்துகளில் எல்லாம் கோடுகளை உடைய வண்டுகள் அமர்ந்து பாடுகின்றன. 
சுழலும் நிறம் கொண்ட கோங்கம் பூக்கள் போல பொன் நிறம் கொண்ட இணக்கமான முலையை உடையவளே 
வளையல் அணிந்த உன் அழகிய தோள்களில் ஈடில்லாத எண்ணமுடியாத பசலை நிறம் ஏன் வந்தது? 

தோழி தலைவியை வினவுகிறாள்.

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது - பாலை 

சிவன் தாண்டவம் Dancing poses of Siva

சிவபெருமான் தாண்டவம் ஆடிய காட்சிகளில் சில ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. 
அரிகோனன் (அரிசோனன்) என்பவர் சில குறிப்புகளுடன் இதனை வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு படங்கள் பதிவாக்கப்படுகின்றன.


நிருஞ்சிதம்
விருச்சிக-குட்டிதம்


லதா-விருச்சிகம்
விருச்சிகம்
லலாட-திலகம்
நிஸ்தம்பிதம்
சூசி
மயூர-லலிதம்
அரிண-பலுதம்
பிரேங்கோலிதம்
விஷ்ணுகிராத்தம்
நாகாபசர்ப்பிதம்
காரகாலன் மாய்குதல்
அரிகோனன் மடல்

அன்புநிறை அரிகோனன் 
யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம் அய்யா 

என்னிடம்  உள்ள >> 108 தாண்டவ பேதங்கள் தன்னை விளக்கும் />>  ஆ டல் வல்லான் எனும் நூல் திருவாவடுதுறை ஆதீனம்மிகப்பெரு முயற்சியுடன் செய்த திட்டம் வழி 50 ஆண்டுகளுக்கு முன் 1967 ல் வெளியீடு எண் 224 வெளிவந்த தமிழ்  நூலில் உள்ளதுதான்  அவர்களு க்கு நன்றி சொல்லி வைத்தல் தான் தகும் மேலும் இவ்வகை தொண்டு நிறுவனங்கள்  மக்கள்பொது பொருளாதாரத்தில் பணி  செய்பவை வாணிக நோக்கம் காட்டுவது மறைமுகமாக இல்லை எனினும் Claimed copyright can be offset by  invoking 'fair use' 

பழமொழி தற்சிறப்புப் பாயிரம் 2 PalaMoli About 2

பிண்டி நீழல் பெருமான்
அருகன்
தற்சிறப்புப் பாயிரம்
நூல் தன்னை உணர்த்தும் முன்னுரை, முடிவுரை

பிண்டியின் நீழற் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.

பிண்டியின் நீழற் பெருமான் அடி வணங்கி, பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா, முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான், இன் துறை வெண்பா இவை.

முன்றுறை அரையனாரை இப் பாடல் "முன்றுறை மன்னவன்" என்று குறிப்பிடுகிறது. 
பிண்டி என்னும் அசோக மரத்தடியில் அமர்ந்து தவம் புரியும் பெருமான் அருகனை வணங்கி நூலை இனிதாக இயற்றினான்.
இவற்றில் பண்டைய பழமொழிகள் 400 உள்ளன. 
நான்கு அடிகள் கொண்ட இனிய பாடல் துறையாகிய வெண்பாவால் இயற்றினான். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி மிகை 3 PalaMoli Extra 3

தானே ஆடும் பேய் பறை முழக்கம் கேட்டால் ஆடாதோ

அறியாமை யோடிளமை ஆவதாம் ஆங்கே
செறியப் பெறுவதாம் செல்வம் - சிறிய
பிறைபெற்ற வாணுதலாய் தானேயா டும்பேய்
பறைபெற்றால் ஆடாதோ பாய்ந்து

(புறத்திரட்டு-1139)

அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே, செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய பிறைபெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய், பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?

அறியாமையோடு வளர்வதுதான் இளமை. 
இளமையில் சேர்ப்பதுதான் செல்வம். 
சிறிய பிறை போன்ற நெற்றியை உடையவளே 
தானாகவே ஆடும் பழக்கம் கொண்ட  பேய் பறை-முழக்கம் கேட்டால் ஆடாதோ?

அறியா இளமை மூதாதையர் செல்வத்தால் சீரழியும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி மிகை 2 PalaMoli Extra 2

நகையே ஆற்றுவிடும்
நகைப்பே ஆற வைக்கும் 

அமையப் பொருளில்லார் ஆற்றாதா ரென்ப
திமையத் தனையார்கண் இல்லை - சிமைய
நகையேர் இலங்கருவி நல்வரை நாட
நகையேதான் ஆற்று விடும்.

(புறத்திரட்டு-1107)

'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது இமையத்து அனையார்கண் இல்லை; சிமைய நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட! நகையேதான் ஆற்றுவிடும்.

வேண்டிய அளவு பொருள் இல்லாதவர் 
வாழ முடியாமல் இருப்பவர் 
என்பது 
இமயம் போன்ற பெரியவர்களிடம் இல்லை. 
மலை முகட்டிலிருந்து நகைத்துக்கொண்டு அருவி இறங்கும் நல்ல மலைநாட்டு வேந்தனே 
செயலாற்றல் நகைப்பை ஆறுமாறு செய்யும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி மிகை 1 PalaMoli Extra 1

வெள்ளத்தில் தீர்த்தம் மிகை
வெள்ளத்தில் வரும் நீர் இரண்டாவது 
உள்ளத்தில் நீர்மை முதலாவது

அருளுடைமை கொல்லாமை ஐந்தடக்கல் வாய்மை
இருளடையாக் கல்வியோ டீகை - புரையில்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவையுளவா கப்பெற்றால்
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.

(புறத்திரட்டு-146)

அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை, இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால், வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.

உயிர்களிடம் இரக்கம் காட்டுதல் 
உயிர்களைக் கொல்லாமை 
ஐம்புலன்களை அடக்குதல் 
வாய்மை பேசுதல் 
இருள் இல்லாத தெளிவான கல்வி 
ஈகைக் குணம் 
புரை ஓடாத உள்ளத்தில் நீர்மை 
இவை உளவாகப் பெற்றால் 
ஆற்று வெள்ளத்தில் வரும் நீர் இரண்டாவதாக அமையும். 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 400 PalaMoli 400

வித்து இன்றிச் சம்பிரதம் இல்
விதை இல்லாமல் விளைச்சல் இல்லை
 
400.

நாணின்றி ஆகாது பெண்மை நயவிய
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல்.
 
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால், கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்! வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

நாணம் இல்லாவிட்டால் பெண்மை இல்லை. 
நயமான உனவு இல்லாவிட்டால் உயிர்-வாழ்க்கை இல்லை. 
எதைச் செய்தாலும் கையில் வளம் இல்லாவிட்டால் செயல் ஈடேறாது. 
அழகியே
விதை இல்லாமல் விளைச்சல் இல்லை அல்லவா?

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

பழமொழி 399 PalaMoli 399

உரைத்தாலும் பேதைக்கு உணர்வு தோன்றாது
 
399.

பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.
 
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

பூத்தாலும் காய் காய்க்காத மரங்கள் உள்ளன. 
அதுபோல,
வயதில் மூத்தாலும் நல்லனவற்றை அறிந்துகொள்ளாத மக்கள் உள்ளனர். 

பாத்தியில் விதைத்தாலும் முளைக்காத சில விதைகள் உள்ளன. 
அதுபோல,
அறியாப் பேதைகளுக்கு என்னதான் எடுத்துச் சொன்னாலும் உணர்வு தோன்றாது. 

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி (பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி