Tuesday, 11 April 2017

வெற்றிவேற்கை VetriVerkkai 60-62

இயல்பு-அச்சம்

தறுகண் யானை தான்பெரி தாயினும்
சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. 60
பெருமிதம் கொண்ட யானை மிகப் கெரிதாக இருந்தாலும் பாகன் கையில் உள்ள சிறிய கண் கொண்ட அங்குசக் கோலுக்கு அஞ்சும்.

குன்றுடை நெடுங்கா டூடே வாழினும்
புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. 61
குன்றத்தில் இருக்கும் அகன்ற காட்டில் வாழ்ந்தாலும் சிறிய தலையை உடைய மான் புலியைக் கண்டால் அஞ்சத்தான் செய்யும்.

ஆரையாம் பள்ளத் தூடே வாழினும்
தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. 62
வளைந்துள்ள பள்ளத்தில் வாழ்ந்தாலும் தவளை பாம்பைக் கண்டால் மிகவும் அஞ்சத்தான் செய்யும்.

கொற்கையாளி குலசேகரன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய
வெற்றிவேற்கை (நறுந்தொகை) - 15 ஆம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி