Thursday, 27 April 2017

நாலடியார் 50 Naladiyar 50

உயிர்போயார் வெண்தலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்கும் செம்மாப் பவரை - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.           50

உயிர் போயார் வெண் தலை உட்கச் சிரித்து, செயிர் தீர்க்கும், செம்மாப்பவரை; செயிர் தீர்ந்தார் கண்டு, 'இற்று, இதன் வண்ணம்' என்பதனால், தம்மை ஓர் பண்டத்துள் வைப்பது இலர்.                50

உயிர் போனவரின் வெள்ளை மண்டை ஓடு அச்சம் தரும்படிச் சிரிப்புடன் தோன்றிச் செம்மாந்து இருப்பவர்களின் சினத்தைப் போக்கும்.
அப்படிச் சினம் தணிந்தவர்கள் அந்த மண்டை ஓட்டைக் கண்டதும் நம் தலையின் வண்ணமும் இப்படித்தான் ஆகும் என்று உணர்ந்துகொள்வர்.
அதனால் தன்னைப் பொருளாக மதிக்கத் தக்க ஒரு பண்டமாகக் கருதம்மாட்டார்கள்.   

அறத்துப் பால் – தூய்தன்மை
அண்மைக் காலத்தில் பகுத்துத் தரப்பட்ட தலைப்பு - அதிகாரம்
சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் திரட்டு நாலடியார் என்னும் அற நூல்
காலம் – கி. பி. மூன்றாம் நூற்றாண்டு



உயிர் போயார் வெண்தலை
மண்டை ஓடு

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி