Thursday, 27 April 2017

நாலடியார் 47 Naladiyar 47

ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தை பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னும்மீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு47

ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப் புலனும் கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை, பேதை, 'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னும்-மீப் போர்த்த கருந் தோலால் கண் விளக்கப்பட்டு.              47

அவற்றைப் கொண்டவள் பெண்.
அவள் அல்குல் கும்பத்தில் மாதவிடாய்க் குழம்பு வெளியேறுகிறது.
அடல் உறவின்போது குழம்பு ஊறுகிறது.
இந்தக் கும்பம் கொண்டவளை
பேதை
பெருந்தோளி
பெய்வளை
என்றெல்லாம் போற்றுகின்றனர்.
கருமையான தோலை உடைய கண்-விளக்கு வைத்துப் பார்த்துவிட்டுச் சொல்கிறோம்.
சரியா?  

அறத்துப் பால் – தூய்தன்மை
அண்மைக் காலத்தில் பகுத்துத் தரப்பட்ட தலைப்பு - அதிகாரம்
சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் திரட்டு நாலடியார் என்னும் அற நூல்
காலம் – கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி