Wednesday, 26 April 2017

நாலடியார் 36 Naladiyar 36

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.       36

இன்றுகொல்? அன்றுகொல்? என்றுகொல்?' என்னாது, 'பின்றையே நின்றது கூற்றம்' என்று எண்ணி, ஒருவுமின், தீயவை; ஒல்லும் வகையால் மருவுமின், மாண்டார் அறம்.               36

இன்றோ, நாளையோ, என்றோ ஒருநாள் சாவு வரும்.
எமன் பின்புறமாகவே நிற்கிறான்
என்று எண்ணிக்கொண்டு
தீயனவற்றை நீக்க வேண்டும்.
முடிந்த வரையில் அறச் செயல்களைச் செய்ய வேண்டும்.
இது மாண்புடையவர் செயலாகும்.

அறத்துப் பால் – அறன்வலியுறுத்தல்
அண்மைக் காலத்தில் பகுத்துத் தரப்பட்ட தலைப்பு - அதிகாரம்
சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் திரட்டு நாலடியார் என்னும் அற நூல்
காலம் – கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி