Wednesday, 26 April 2017

நாலடியார் 33 Naladiyar 33

வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை நினைத்ததனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்33

வினைப் பயன் வந்தக்கால், வெய்ய உயிரா, மனத்தின் அழியுமாம், பேதை; நினைத்து, அதனைத் தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார்.                33

  • முன்பு செய்த வினையின் பயன் வந்து தாக்கும்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு மனம் வருந்துபவன் பேதை.
  • இது நான் செய்த பழவிளையின் பயன் என்று உணர்ந்துகொள்பவரே மனம் தடுமாறுவதிலிருந்து நீங்கி அமைதியுடன் வாழ்பவர் அறிவாளி.


அறத்துப் பால் – அறன்வலியுறுத்தல்
அண்மைக் காலத்தில் பகுத்துத் தரப்பட்ட தலைப்பு - அதிகாரம்
சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் திரட்டு நாலடியார் என்னும் அற நூல்
காலம் – கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி