Tuesday, 25 April 2017

நாலடியார் 29 Naladiyar 29

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச்
சென்றான் எனப்படுத லால்       29

'புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை' என்று எண்ணி, இன்னினியே செய்க அறவினை-'இன்னினியே நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்றான்' எனப்படுதலால்!     29

புல்லின் நுனி மேல் பனித்துளி போல் நிலையாமை உடையது நம் உடம்பு.
இதனை எண்ணி உடனுக்குடன் பிறருக்கு உதவும் அறச்செயலைச் செய்ய வேண்டும்.
இப்போதுதான் நின்றான்
இப்போதுதான் அமர்ந்திருந்தான்
இப்போதுதான் படுத்திருந்தான்
அவன் சுற்றத்தார் கதறும்படி விட்டுவிட்டுச் சென்றுவிட்டான் என்று சொல்லப்படும் நிலை ஒருவனுக்கு வரும்.
ஆதலால் உடனுக்குடன் அறம் செய்ய வேண்டும்.  
 
புல் நுனி மேல் நீர்
நம் உடம்பு இந்த நீர்த்துளி போன்றது 
அறத்துப் பால் - யாக்கை நிலையாமை
அண்மைக் காலத்தில் பகுத்துத் தரப்பட்ட தலைப்பு - அதிகாரம்
சமண முனிவர்கள் பலர் இயற்றிய பாடல்களின் திரட்டு நாலடியார் என்னும் அற நூல்
காலம் – கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி