Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை சிறப்புப் பாயிரம் AsaraKovai on note poem

ஆரெயில் மூன்றும் அழித்தான் அடிவணங்கி
அரிடத்துத் தான்றிந்த மாத்திரையான் ஆசாரம்
ஆரும் அறிய அறனாய மற்றவற்றை
ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் தீராத்
திருவாயி லாய திறல்வண் களத்தூர்ப்
பொருவாயில் முள்ளியென் பான்.

முப்புரம் எரித்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி,
சோதிட நூல்களில் தான் அறிந்த அளவில்,
ஆசாரத்தை அனைவரும் அறிவதற்காக,
அறமாக விளங்குவனவற்றை,
ஆசாரக் கோவை என்னும் நூலாகத் தொகுத்துத் தந்தான்,
தீராத திருவாயிலாக விளங்கும்
திறலும் வளமும் கொண்ட
களத்தூர்ப் பெருவாயில் முள்ளி
என்பவன்.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி