Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 94 AsaraKovai 94

கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்தேலார்
ஐயமில் காட்சி யவர்.                       94

  • பேசும்போது கையால் ஒருவரைச் சுட்டிக் காட்டிப் பேசக்கூடாது.
  • காலால் எழுதிக் காட்டிப் பேசக் கூடாது.
  • ஒருவரது உடம்பைக் காட்டி, வறுமையில் வாடும் இல்லாதவரை, இருப்பவரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது.
  • தாய் தந்தையர் போன்ற குரவர் ஒரு பொருளைக் கொடுக்கும்போது அமர்ந்துகொண்டு வாங்கக் கூடாது.

தெளிந்த கண்ணோட்டம் உள்ளவர் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி