Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 91 AsaraKovai 91

மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தம் தாளிசைப்பு
காட்டுளே யானும் பழித்தார் மரம்தம்மின்
மூத்த உளவாக லான்.                     91

பெருமிதம் காட்டும் மேலாடைப் போர்வை அணிந்துகொண்டு, திமிரோடு காலின் மேல் கால் போட்டுக்கொண்டு, யாருமில்லாக் காட்டில் அமர்ந்திருந்தாலும், பழிப்புக்கு உரியவரே ஆவார். காட்டுக்குள்ளும் அவரைக் காட்டிலும் மூத்த மரங்கள் இருக்கின்றனவே. | மூத்தவர் முன் இப்படி உட்காரலாமா? | எந்த இடத்திலும் திமிர் கூடாது என்பதாம்.  

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி