Sunday, 19 March 2017

திரிகடுகம் 86 TiriKadugam 86

அற்புப் பெருந் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்
கற்புப் பெரும் புணை காதலின் கை விடுதல்,
நட்பின் நய நீர்மை நீங்கல், - இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை.      86

  1. அன்புக் கயிற்றால் தளையப்பட்டிருக்கும் கட்டு நெகிழ்ந்து விலகுதல்
  2. அடுத்தவன் மேல் உள்ள காதலால் கற்பு என்னும் படகை விட்டு வெள்ளத்தில் இறங்குதல்
  3. நண்பர் உறவுக்குள்ளே நயப்பாடு விலகுதல்

இந்த மூன்றும் குற்றம் தரும் பகைப்பண்புகள் ஆகும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி