Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 85 AsaraKovai 85

அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க செய்பவேல்
மன்னிய செல்வம் கெடும்.  85

  • அறம் செய்தல்
  • திருமணம் செய்தல்
  • குயன்று பொருளீட்டுதல்
  • வீட்டின் மாடமாளிகை உயரம்
ஆகியவற்றை, அரசனைக் காட்டிலும் செல்வம் படைத்தவர் என்றாலும், அரசனுக்கு மேம்பட்டதாகச் செய்யக் கூடாது.
  • செய்யின் தன்னிடம் மண்டிக் கிடக்கும் செல்வம் அழுந்துபோகும்.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி