Sunday, 19 March 2017

திரிகடுகம் 84 TiriKadugam 84

வாய் நன்கு அமையாக் குளனும், வயிறு ஆரத்
தாய் முலை உண்ணாக் குழவியும், சேய் மரபின்
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும், - இம் மூவர்
நல் குரவு சேரப்பட்டார்.    84

  1. தண்ணீர் புகும் வாய் நன்றாக அமையாத குளம்
  2. வயிறாரத் தாய்ப்பால் உண்ணாத குழந்தை
  3. செவ்விய முறையில் கற்று மாட்சிமை பெறாத மாந்தர்

இந்த மூவரும் வறுமையில் வாடுபவராகவே கொள்ளத்தக்கவர்.
 
தாய்ப்பால் உண்ணும் குழந்தை
நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி