Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 83 AsaraKovai 83

நிரல்படச் செல்லார் நிழல்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்துரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவும் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்.     83

கடைபோக முழுமையாக வாழ்வதாகச் சொல்பவர்
  • அணிவகுப்புடன் செல்லமாட்டார்.
  • அடுத்தவர் நிழலைத் தனக்கு நிழல் வேண்டி மிதித்துக்கொண்டு நிற்க மாட்டார்.
  • ஒருவர் பேசும்போது குறுக்கே ஆராய்ந்து பார்க்காமல் பேசமாட்டார்.
  • ஊரார்  வெறுப்பனவற்றைச் செய்யமாட்டார்.
  • தம் அரசன் வைத்திருக்கும் படையின் அளவைச் சொல்லமாட்டார்.  


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி