Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 82 AsaraKovai 82

வண்ண மகளிர் இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடங்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்
குவப்பன வேறாய் விடும்.   82

தம்மைப் புகழொளி உடையேம் என்று சொல்லிக்கொள்பவர், வண்ணமிட்டுத் தன்னைப் பூச்சழகு செய்துகொள்ளும் மகளிராகிய வேசையர் வாழும் இடத்திற்கு அருகில் தம் இல்லத்தை, மிகவும் உரிமை உடைய இல்லமாயினும் அமைத்துக்கொள்ள மாட்டார். அமைத்துக்கொண்டால் தன் மனைவி போன்ற பெண்கள் விரும்புவன வேறாக அமைந்துவிடப் கூடும்.  

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி