Tuesday, 28 March 2017

ஆசாரக்கோவை 55 AsaraKovai 55

கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி யகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை.    55

  • சினம் கொண்டு பகைவர் போரிடும் முனை
  • கள் உண்ணும் இடம்
  • நிலைத்த ஒருவரிடம் மனம் இல்லாத விலைமாதர் வாழும் சேரிப் பகுதி
  • நல்ல குணம் பார்த்து நட்பாக்கிக்கொண்டவர் பற்றுக்கோடு விட்ட இடம்

நிகரில்லாத அறிவினை உடையவர் பார்க்கவோ, இருக்கவோ விரும்பமாட்டார்.
  • பலர் கூடும் நீர்நிலையின் கரையில் நெடுநேரம் நிற்கமாட்டார்.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி