Tuesday, 28 March 2017

ஆசாரக்கோவை 54 AsaraKovai 54

முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய்
கிடக்கையோ டிவ்வைந்தும் என்பதலைச் சென்றார்க்
கூணொடு செய்யும் சிறப்பு.  54

தம்மிடம் வந்தவருக்கு உண்ண உணவு படைப்பதோடு சிறப்புகளாகச் செய்யவேண்டியவை ஐந்து.
  1. புன்முறுவல்
  2. இனிய உரையாடல்
  3. நடந்துவந்த காலைக் கழுவ நீர் தருதல்
  4. உட்கார மணையிருக்கை தருதல்
  5. படுக்கப் பாயும் இருப்பிடமும்  தருதல்

ஆகியவை,

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி