Tuesday, 28 March 2017

ஆசாரக்கோவை 46 AsaraKovai 46

காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரகம் நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்ல துறல்வேண்டு வார்        46

  • தூங்கி எழுந்ததும் முகம் காட்டும் அலங்கோலத்தை நீக்கி, முகத்தைக் கழுவிக்கொள்ள வேண்டும்.
  • உண்ணும், சமைக்கும் பாத்திரங்களை விளக்கிக் கழுவி வைக்க வேண்டும்.
  • எல்லா இடங்களிலும் பசுமாட்டுச் சாணநீர் தெளிக்க வேண்டும்.
  • காலை வேளையில் நிறைநீர் சொம்பில் பூக் கும்பம் வைக்க வேண்டும்.
  • இப்படி இல்லத்தைப் பொலிவுறச் செய்த பின்னர், சமைப்பதற்காக அடுப்பில் தீ மூட்டவேண்டும்.

நல்லது நடக்கவேண்டும் என விரும்புபவர்கள் இப்படிச் செய்ய வேண்டும்.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி