Tuesday, 28 March 2017

ஆசாரக்கோவை 43 AsaraKovai 43

உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.     43

  • உச்சிப் பொழுது
  • இனிது உறங்கும் நள்ளிரவு
  • பொழுது புலரும் காலை,
  • பொழுது மறையும் மாலை
  • சிவனுக்கு உரிய திருவாதிரை நாள்
  • பெருமாளுக்கு உரிய திருவோண நாள்
  • அம்மாவாசை உவா நாள்
  • இறந்தவர் நினைவு நாள் \ திதி கொடுக்கும் நாள்
  • அட்டமி நாள்
  • பிறந்த நாள்

இந்த எல்லா நாள்களிலும் கணவன் மனைவி உறவு விரும்பத் தகாதது.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி