Saturday, 18 March 2017

திரிகடுகம் 41 TiriKadugam 41

அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும், துளங்கினும்
தன் குடிமை குன்றாத் தகைமையும், அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார்ப் பெருக்கலும், - இம் மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.      41

  1. வறுமையில் அலைக்கழிவார்க்கு அவருக்கு வேண்டிய ஒன்றை வழங்கிய புகழ்
  2. தன் குடும்பம் ஆட்டம் கண்டாலும் தான் பண்பு குன்றாத் தகைமை
  3. அன்பின் ஓட்டத்தில் ஒவ்வொரு நாளும் நண்பர்களைப் பெருக்குதல்

இவை மூன்றும் நன்னெறி வேதத்தின் தலைமையான பண்புகள்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி