Friday, 17 March 2017

திரிகடுகம் 38 TiriKadugam 38

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய
பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை.        38

  1. ஒருவன் தன்னைத் தானே வியந்து செருக்குக் கொள்ளுதல் 
  2. தாழ்ந்து போகாமல் வீணாகச் சினத்தைப் பெருக்குதல்
  3. கண்ணில் கண்ட பொருளையெல்லாம் அடைய விரும்பும் சிறுமைக் குணம்

இந்த மூன்றும் ஒருவனிடமுள்ள செல்வத்தை உடைத்து அழிக்கும் படை ஆகும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி