Friday, 17 March 2017

திரிகடுகம் 33 TiriKadugam 33

கோல் அஞ்சி வாழும் குடியும், குடி தழீஇ
ஆலம் வீழ் போலும் அமைச்சனும், வேலின்
கடை மணி போல் திண்ணியான் காப்பும், - இம் மூன்றும்
படை வேந்தன் பற்று விடல்!      33

  1. அரசனின் செங்கோலுக்கு அஞ்சி வாழும் குடிமக்கள்
  2. ஆலம் விழுதுபோல் குடிமக்களைப் பற்றிக்கொண்டு அரசனைத் தாங்கும் அமைச்சன்
  3. வேலின் கடைமணிக் கூர்மை போல் வலிமை உள்ளவனாக அரசன் விளங்கி அனைவரையும் காத்தல்

இவை மூன்றையும் படையை உடைய வேந்தன் பற்று விடாமல் பாதுகாக்க வேண்டும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி