Monday, 27 March 2017

ஆசாரக்கோவை 27 AsaraKovai 27

இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.       27

உண்ட பின்னர் வாய் கழுவும் முறை
  • வாயில் ஒழுகாமல் நன்கு உமிழவேண்டும்.
  • எச்சில் முற்றிலுமாக நீங்கும்படி அடியோடு வாயை நன்கு துடைக்க வேண்டும்.
  • வடிவழகு உடையதாக மூன்று முடக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • பின் வாயைத் துடைக்க வேண்டும்.
  • முகத்தில் உள்ள உறுப்புகளை ஒத்த வகையால் விரல்களால் துடைக்க வேண்டும்.

இவை மேலோர் கண்ட நெறிமுறைகள் ஆகும்.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி