Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 100 AsaraKovai 100

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்பான்
அரசர் தொழிற்றலை வைத்தான் மணாளனென்
றொன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடுபெற் றார்.                   100

  1. அறியாத தேயத்துக்கு வந்தவன்
  2. வறுமையில் வாடுபவன்
  3. அகவையில் மூப்பு அடைந்தவர்
  4. இளஞ்சிறுவர் சிறுமியர்
  5. உயிரை இழக்கும் நிலையில் இருப்பவன்
  6. அஞ்சி நடுங்குபவன்
  7. உண்ணவு உண்டுகொண்டிருப்பவன்
  8. அரசனின் ஆணையை நிறைவேற்றிக்கொண்டிருப்பவன்
  9. பெண்ணிடம் கணவனாக நடந்துகொள்பவன்

இந்த ஒன்பது பேரும், உண்மையாகச் சொல்லப்போனால், ஆசாரத்தைக் கடைப்பிடிப்பதிலிருந்து விடுதலை பெற்றவர் ஆவர்.  

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி