Friday, 24 February 2017

திணைமொழி ஐம்பது 9 TinaiMoliAimbatu 9

பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
மணிமலை நாடன் வருவான்கொல் தோழி!
கணிநிறை வேங்கை மலர்ந்து வண்டார்க்கும்
அணிநிற மாலைப் பொழுது.       9

நான் நோய்பட்டிருக்கும் பசலை நிறம் தீர்ந்து மூங்கில் போன்ற என் தோள் வீங்கும்படி என்னை அணைக்க மணிமலை நாடன் இன்று வருவனா, தோழி!
கணிக்கும் பருவ காலத்தில் வேங்கை மலர்ந்து வண்டுகள் மொய்க்கும் மாலைப் பொழுது இது.
தலைவி தோழியை வினவுகிறாள்.
வேங்கை திருமணக் குறி காட்டும் மலர்.


குறிஞ்சி
கண்ணஞ்சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது
50 பாடல் | வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி