Friday, 24 February 2017

திணைமொழி ஐம்பது 8 TinaiMoliAimbatu 8

வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்
வாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்
சோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்
போந்த(து)இல் ஐய! களிறு.          8

ஐய! வேங்கை மலரும். அதனால் குளுமையான இந்தக் காடே மணக்கும். இத்தகைய காட்டில் வாழும் குறவர்களின் மகளிர் நாங்கள். வளைந்த மூங்கில் போன்ற தோளை உடையவள் இவள். இந்தப் பக்கமாக  அம்பு பட்ட குருதி ஒழுகிக்கொண்டு எந்த யானையும் வரவில்லை.
நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு செல்க.
தலைவி சொல்வது போலத் தோழி தலைவனிடம் சொல்கிறாள்.


குறிஞ்சி
கண்ணஞ்சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது
50 பாடல் | வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி