Saturday, 25 February 2017

கைந்நிலை 8 KaiNilai 8

கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங்
கி...க்...கொண்...கரும்
பெருங்கல் மலைநாடன் பேணி வரினே
சுருங்கும் இவளுற்ற நோய்.      8
தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்.
வலிமையான கையை உடைய யானை கருமை நிற மலைப்பாம்பைப் பார்த்து விலகிச் செல்லும்.
இப்படிப்பட்ட பெருமலை நாட்டை உடையவன் அவன்.
அவன் இவளைப் பேணி வருவானாயின் இவள் நோய் தீரும்.
தோழி செவிலித்தாய்க்குத் தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள்.

குறிஞ்சி
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
60 பாடல் | வெண்பா யாப்பு
காலம் – சங்கம் மருவிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டு,


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி