Wednesday, 22 February 2017

இன்னிலை 8 Innilai 8

தூயசொல் லாட்டும் துணிவறியும் துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல்
படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கு அடிச்சேரா வாறு.   8

  • மனத்தூய்மையோடு உரையாடல்
  • மேலோர் துணிந்தவற்றை அறிதல்
  • துன்பம் வரும்போது கலங்காத துணைவலிமை

இவை பூத்துக்கிடக்கச் செய்யும் திருவாளரே பிறவி அடுக்கு வந்து சேராவண்ணம் பறித்தெறிவர்.
  • திருவத்தவர் = திருவாளர்


அறப்பால்
பொய்கையார் பாடிய இன்னிலை
கடவுள் வாழ்த்து + 45 பாடல் | வெண்பா
காலம்சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி