Wednesday, 22 February 2017

இன்னிலை 7 Innilai 7

தாமீட்(டு) அருவினைகள் தண்டா உடம்பொன்ற
நாமீட்(டு) ஒறுக்கொணா ஞாங்கடித் தீம்பால்
பிதுக்கப் பெயல்போல் பிறப்பறுப்புப் போகா
கதுப்போடு இறுத்தல் கடன். 7

ஒருவன் தனக்கென சேர்த்து வைத்துள்ளவை வினைகள். நல்வினை, தீவினை ஆகிய வினைகள். அவை அவனை விட்டு நீங்குவது இல்லை. உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்து அவனைத் தண்டிக்கும். இதனை யாராலும் விலக்க முடியாது. ஆங்கே ஆவன் அடியில் ஊறும் பாலாக (விதியாக) பிதுங்கி வந்து, பெய்யும். சதையோடு ஒட்டிக்கொண்டு இருந்து, தண்டிக்கும். பிறவியை அறுக்கத் தடையாக இருந்துகொண்டு அவனை விட்டுப் போகாது.
  • ஞாங்கர் = அங்கே
  • ஒறுக்கு ஒணா = வினையை ஒருவனால் தண்டிக்க முடியாது
  • கதுப்பு = தசை

நல்வினையோ, தீவினயோ எதுவாயினும் பிறவியை அறுக்கத் தடையாக நிற்கும்.

அறப்பால்
பொய்கையார் பாடிய இன்னிலை
கடவுள் வாழ்த்து + 45 பாடல் | வெண்பா
காலம்சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி