Saturday, 18 February 2017

திரிகடுகம் 6 TiriKadugam 6

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன்வேறு கூறின் பொறையும், அறவினையைக்
காராண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு.                6


  1. பிறர் தன்னைப் போற்றும்போது நாணல்
  2. விரும்பாதவர் தன் திறமையை வேறு வகையாகப் பேசினால் பொறுத்துக்கொள்ளல்
  3. அறம் செய்யும்போது மழைமேகம் போலக் கைம்மாறு வேண்டாமல் செய்தல்
இவை மூன்றும் ஊருக்கு உதவும் பெருமிதங்கள் ஆகும்.  


நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி