Friday, 24 February 2017

திணைமொழி ஐம்பது 6 TinaiMoliAimbatu 6

யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்
ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்
காணினும் காய்வர் எமர்.                6

யானையே ஏறுவதற்குத் துன்புறும் உயர்ந்த மலையில்,
மணிக் கற்கள் மின்னும் மலையில்,
காட்டு வாழ்க்கை நடத்தும் குறவர் மகளிர் நாங்கள்.
நாங்கள் தினைப்புனம் காக்கின்றோம்.
ஐய!
எங்கள் வயலுக்குள் ஏன் வந்தீர்கள்?
எங்களைச் சேர்ந்தவர்கள் உன்னைக் கண்டாலே சினம்  கொள்வர்.
சென்றுவிடுங்கள்.
என் தல்லைவியைத் திருமணம் செய்துகொண்டு வாருங்கள்.
இவ்வாறு தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

குறிஞ்சி
கண்ணஞ்சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது
50 பாடல் | வெண்பா
காலம் – சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி