Sunday, 19 February 2017

திரிகடுகம் 30 TiriKadugam 30

தன்நச்சிச் சென்றாரை எள்ளா ஒருவனும்,
மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்,
என்றும் அழுக்கா(று) இகந்தானும், - இம்மூவர்
நின்ற புகழுடை யார்.        30

  1. தன்னை விரும்பி வந்தவரை ஏளனம் செய்யாதவன்
  2. நிலைபெற்ற மூதாதையர் செல்வம் இருக்கும்போது சோர்வினை விலக்கி உழைப்பவன்
  3. பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளாதவன்

இந்த மூவரும் நிலைபெற்ற புகழுடன் வாழ்வர்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி