Thursday, 23 February 2017

இன்னிலை 27 Innilai 27

காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம இருக்கையே தூம்திரையாம் – ஏமத்தீண்(டு)
ஆம்பாலே தோன்றும் அளியூட லாம்பரலில்
தெற்றித் தெறிப்பாம் ஒளியொளிபாய் கண்ணேசீர்த்
துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு. 27

காமம் எல்லாரும் விரும்பும் இன்பப் பாற்கடல்.
காதலர் இன்பம் துய்த்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கும் இருக்கை அந்தப் பாற்கடலின் அலை.
அந்த நிம்மதியில் விந்துப்பால் தோன்றும்.
இந்தக் கொடையின் ஊடே ஊடல் என்னும் முத்து தெறிக்கும்.
அந்த முத்து ஒளி ஒளியாகக் கண்ணில் பாயும்.
இன்பத்த்தின் சீர்த்துளி ஒன்றுதிரண்டு (துற்று) விரும்பும் மகன் பிறப்பான்.  

இன்பப்பால்
பொய்கையார் பாடிய இன்னிலை
கடவுள் வாழ்த்து + 45 பாடல் | வெண்பா
காலம்சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி