Saturday, 18 February 2017

திரிகடுகம் 25 TiriKadugam 25

செருக்கினால் வாழும் சிறியவனும், பைத்தகன்ற
அல்குல் விலைபகரும் ஆய்தொடியும், நல்லவர்க்கு
வைத்த அறப்புறம் கொண்டானும், - இம்மூவர்
கைத்துண்ணார், கற்றறிந் தார்.               25

  1. தன்னைப் பெரிதாக மதிக்கும் செருக்கோடு வாழும் சிறியவன்
  2. பாடபுப் படம் போன்ற தன் அல்குலை விற்கும் பெண்.
  3. நல்லவர்க்குக் கொடுப்பதற்காக வைத்திருக்கும் பொருளைப் பிடுங்கிக் கொள்பவன்

இந்த மூவர் உழைப்பால் வந்த உணவைக் கற்றறிந்த நல்லவர்கள் உண்ணமாட்டார்கள்.  


நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி