Saturday, 18 February 2017

திரிகடுகம் 24 TiriKadugam 24

காண்டகு மென்தோள் கணிகைவாய் இன்சொல்லும்,
தூண்டிலினுள் உட்பொதிந்த தேரையும், - மாண்டசீர்,
காழ்ந்த பகைவர் வணக்கமும், - இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும், அளறு.            24

  1. கண்ணைக் கவரும் கணிகை பேசும் இனிய சொல்
  2. தூண்டிலை மூடிவைத்திருக்கும் தவளை இரை
  3. வைர நெஞ்சம் கொண்ட பகைவரின் சீர் சிறப்பு மிக்க வணக்கம்

இவை மூன்றும் ஒருவனை கால் பிடுங்க முடியாமல் தள்ளும் சேறு.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி