Saturday, 18 February 2017

திரிகடுகம் 21 TiriKadugam 21

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல், செருவாய்ப்பச்
செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்
பலநாடி நல்லவை கற்றல், - இம்மூன்றும்
நலமாட்சி நல்லவர் கோள்.          21

  1. தன் வருவாயில் நான்கில் ஒரு பகுதியைக் கொடையாக வழங்கி வாழ்தல்
  2. நாட்டைக் காக்கும் போர் வரும்போது முன்பு செய்ததை எண்ணிப் பார்க்காமல் பின்னும் போர் செய்தல்
  3. பலவற்றையும் நாடி அவை தனதாகும்படிக் கற்றல்

இவை மூன்றும் மாட்சிமை நலம் உள்ள நல்லவரின் கோட்பாடுகள்.   

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
யாப்பு - வெண்பா
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி