Wednesday, 22 February 2017

இன்னிலை 21 Innilai 21

துணையென்ப காமவிருந்து துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகார் ஆகல் - புணைதழீஇக்
கூட்டும் கடுமிசையான் கட்டியில் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகும் அணி.  21

  • காம விருந்து உண்பவர் ஒருவருக்கொருவர் துணை என்பர்.
  • அவர்கள் உடலுறவு கொண்டவர் ஆதல் வேண்டும்.
  • இந்த மிதவைத் தெப்பம் இவர்களுக்கு எல்லா இன்பங்களையும் கூட்டித் தரும்.
  • கசக்கும் மருந்தாகிய ‘கடு’ தின்ன மறுப்பவனுக்கு வெல்லக் கட்டியில் சேர்த்து ஊட்டுவது போல அறம், பொருள் செய்பவனுக்குக் காமம் வெல்லக்கட்டி.
  • விரும்பியபோதெல்லாம் அறத்துக்கும் பொருளுக்கும் அணிகலனாக விளங்கக் கூடியது காம விருந்து.


இன்பப்பால்
பொய்கையார் பாடிய இன்னிலை
கடவுள் வாழ்த்து + 45 பாடல் | வெண்பா
காலம்சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி